PRAVEEN UTTARARDH -----तुलसीदास
तुलसीदास कंठस्थ ढोहे---1 से 10 तक
राम सतसई
1. कहि प्रिय वचन विवेकमय कीनहि मातु परितोष |
लगे प्रबोधन जानकिहि प्रगटि बिपिन गुण दोष ||
ஸ்ரீராமர் வனவாசத்திற்கு செல்லும் போது சீதையும் ஸ்ரீராமருடன் செல்ல ஆசைப்பட்டார். அப்போது காட்டின் உடைய நன்மை , தீமைகளை பற்றி எடுத்து உரைத்தார். அத்தோடு தன்னுடைய கனிவான, அன்பான வார்த்தைகளால் தனது தாய்யை திருப்திப்படுத்தினர்.
2.गुरु श्रुति संमत धरम फलु पाइअ बिनहिं कलेम |
हठ बैस सब संकट सहे गालब नहूस नरेस ||
ஸ்ரீராமர் வனவாசத்திற்கு செல்லும் போது சீதையும் ஸ்ரீராமருடன் செல்ல ஆசைப்பட்டார். அப்போது ஸ்ரீராமர் சீதையிடம் நீ என் கட்டளைக்கு படிந்து, வேதங்களின் படி தர்மத்தை பின்பற்றுவதன் மூலம் நல்ல பலனை அடைவாய். ஆனால் பிடிவாதத்தால், என்னுடன் வந்தால் காலவ் முனி மற்றும் நஹுஷ் போன்றவர்கள் அடைந்த துன்பத்தை அடைவாய் என விளக்கினார்.
3.भूमि सयन बलकल बसन असनु कंद फल मूल |
ते कि सदा सब दिन मिलहिं सबुई समय अनुकूल ||
ஸ்ரீராமர் வனவாசத்திற்கு செல்லும் போது தன்னுடன் வர ஆசைப்பட்ட சீதையிடம் வனத்தில் மரப்பட்டைகளால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். கிழங்குகள், வேர்கள், பழங்களை உண்ண வேண்டும். சில சமயங்களில் அவையும் கிடைக்காமல் போகலாம் என எடுத்து கூறினார்.
4.राम-नाम मनि-दीप धरु, जीह देहरी द्वार |
तुलसी भीतर बाहिरो, जो चाहसि उजियार ||
நம் உள் மனம் மற்றும் அகம் வெளிச்சம் பெற வேண்டும் என்றால் நம் வாய் எனும் வாசற்படியில் ராம் எனும் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
5. हित सन हित रति राम सन, रिपु सन बैर बिहाय ||
उदासीन संसार सन, तुलसी सहज सुभाय ||
துளசி கூறுகையில், நாம் அனைவரிடமும் நட்பாக இருக்க வேண்டும். எதிரிகளிடமும் நட்பு பாராட்ட வேண்டும். ஸ்ரீராமர் மீது அன்பு கொள்ள வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும். யாரியும் உதாசீன படுத்தக்கூடாது.
6.जहां राम तहँ काम नहिं, जहां काम नहिं राम |
तुलसी कबहूँ होत नहिं, रवि रजनी इक ठाम ||
சூரியனையும், நிலவையும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. அது போல எங்கே ராம நாமம் உள்ளதோ அங்கே கெட்ட ஆசைகளுக்கு இடம் இருக்காது. எங்கே கெட்ட ஆசை உள்ளதோ அங்கே ராம நாமம் இருக்காது.
7. तुलसी रा के कहत ही , निकसत पाप पहार |
फिर भीतर आवत नहीं, देत मकार किवार ||
நாம் ராமன் எனும் நாமத்தை உச்சரிப்பதால், நம் உள்ளே இருக்கும் பாவம் வெளியே சென்று விடும். பின்னர் அந்த பாவம் உள்ளே வராது.
8. ऊंची जाति पपीहरा , पियत न नीचो नीर |
कै जाँचै घनसयाम सों , कै ढूख सहै सरीर ||
பபிஹரா எனும் பறவை குளம், குட்டை, நீர்நிலைகளில் உள்ள நீரை அருந்தாது . அது எப்போதும் மேகங்களில் இருந்து பொழியும் மழை நீரையே எப்போதும் அருந்தும். அது போல உயர்ந்த மனிதர்கள் எப்போதும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் சிறந்த குணங்களையே கடைப்பிடிப்பார்கள்.
9.सब संगी बाधक भए , साधक भए न कोय |
तुलसी राम कृपालु तें , भली होय सो होय ||
இவ்வுலகில் அனைவருமே அனைவருக்கும் இடையூறாக இருக்கிறார்கள். யாரும் உதவி செய்ய மாட்டார்கள். ஆனால் ஸ்ரீராமர் கருணை உள்ளம் கொண்டவர். அவர் அருளால் நன்மையே நடக்கும்.
10. निर्गुण तें एहि भाँति बड़ नाम प्रभाउ अपार |
कहऊँ नामु बड़ राम तें निज विचार अनुसार ||
நிற்குன் கடவுளின் நாமத்திலேயே ராமர் எனும் நாமம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. ஆனால் என்னுடைய கருத்துப்படி ராமரை விட ராம நாமம் மிக பெரியது.
லேபிள்கள்: HINDI DHOHE, HINDI POEM

