Praveen POORVARDH---தமிழ் இலக்கிய வரலாறு ----தமிழில் புதினங்கள்
Praveen POORVARDHதமிழ் இலக்கிய வரலாறு தமிழில் புதினங்கள்
முன்னுரை :
சமூக நாவலாசிரியர்கள் தங்கள் வாழும் தலைமுறையினரது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு நாவல்களை படைக்கின்றனர். கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டு வரலாற்று புதினங்கள் படைக்கப்படுகின்றன.
புதினங்களின் உறுப்புகள் :
சந்தர்ப்பங்கள் மற்றும் திருப்பங்கள் புதினத்தின் இரு கண்கள் ஆகும். சூழச்சி, அல்லது சதி , பத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை ஆகியவை புதினத்திற்க்கு இன்றியமையாதவை என பேராசிரியர் ச . ஞானசம்பந்தம் கூறுகிறார்.
புதினங்கள் :
வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் தோன்றிய முதல் நாவல் ஆகும்.
இவருக்கு பின்னர் ராஜமையர் என்பவர் கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவலை எழுதினார்.
மதிவையா 'பத்மாவதி சரித்திரம்' என்னும் புதினத்தையும் ,
நடேச சாஸ்தியார் ' தீனதயாளு' , 'திக்கற்ற இரு குழந்தைகள்' போன்ற நவீனங்களையும் படைத்துள்ளார்.
துப்பறியும் நாவல்கள் :
ஆரணி குப்புசாமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியோர் பல மேல் நாட்டு நாவல்களை தழுவி பல புதினங்களை படைத்துள்ளனர்.
ஜே.ஆர். ரங்கராஜூ அவர்கள் பல துப்பறியும் நாவல்கள் படைத்துள்ளார்.
கல்கி :
இன்றைய தமிழ் நாவல் வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டவர் கல்கி எனலாம். விடுதலை இயக்கத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு நாவல்கள், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள் முதலான பல நாவல்களை எழுதி வெற்றிக் கொண்டார்.
இவருடைய படைப்புகளில் நகைச்சுவை நிறைந்து இருக்கும்.
சிறுகதை, அரசியல் தலையங்கம் , பயணக்கட்டுரை போன்ற பல துறைகளிலும் வெற்றி கொண்டார்.
'சிவகாமியின் சபதம் ' இவருடைய படைப்புகளில் மிக சிறந்தது.
இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளது.
வரலாற்றுப் புதினங்கள் :
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, முதலியவை ' கல்கி ' படைத்த வரலாற்று புதினங்கள் ஆகும்.
மகரயாழ் மங்கை, நந்திவர்மன் காதலி, பத்தினிக்கோட்டம் , சந்தனத் திலகம் முதலியவை ஜெகசிற்பியின் படைப்புகள் ஆகும். 'வ. வேணு கோபாலின் மருதியின் காதல், நாக கன்னிகை. 'அகிலனின் வேங்கையின் மைந்தன் , கயல்விழி, வெற்றித்திருநகர் . நா . பர்த்தசாரதியின் மணிபல்லவம், பாண்டிமாதேவி . சாண்டில்யனின் மலைவாசல் , யவன ராணி, ஜீவபூமி, மன்னன் மகள், கன்னிமாடம். அரு. ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி, விக்கரமனின் நந்திப்புரத்து நாயகி, சோமுவின் வெண்ணிலவுப் பெண்ணரசி, கோவி. மணிசேகரனின் மயிலறகு , வெற்றித் திருமகள் போன்றவை குறிப்படத்தக்க நாவல்கள் ஆகும்.
இன்றைய நாவல்கள்:
இன்றைய நாவல் உலகில் மு. வரதரசனார், அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பி, மகரிஷி , ரா. கி. ரங்கராஜன் போன்றோரை கூறலாம்.
தனிதமிழில் பல புதினங்களை எழுதி இன்றைய எழுத்தாளர்கள் பலருக்கும் வழிகாட்டியாக விளங்குபவர் டாக்டர். வரதரசனார் ஆவார்.
பாவை , கள்ளகாவியமோ , கரித்துண்டு , கயமை, நெஞ்சில் ஒரு முள் , அகல் விளக்கு ஆகியவை இவரது படைப்புகள் ஆகும்.
விடுதலை போராட்டத்தை மையமாக வைத்து 1942 என்னும் புதினத்தை எழுதியுள்ள கு. ராஜாவேலுவின் "காதல் தூங்குகிறது" என்னும் நவீனம் கலைமகள் இதழ் நடத்தும் நாராயணசாமி அய்யர் நாவல் போட்டியில் பரிசு பெற்றது
சமயத்தை புறக்கணித்து வாழ்வதால் விளையும் தீமைகளைத் தமது "இடிந்த கோபுரம் "
என்னும் நாவல் வாயிலாக விளக்குகின்றார்.
தனி மனிதனின் முன்னேற்றத்தைப் புறக்கணிக்காமல் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிகோலுவது தான் சமயத்தின் தனிபெருஞ்சிறப்பு .
இளைஞர் சமுதாயம் இதனை ஊன்றிப் படிக்க வேண்டும், என ஆசிரியர் முன்னுரையில் கூறுகிறார்.
அகிலனது "பெண் " என்னும் நாவல் கலைமகள் பரிசு பெற்றது.
இவரது "சித்திரப்பாவை" தமிழ் நாவல் இலக்கியத்தின் முதுவளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும் என்று கூறுவார் சோ. சிவபாதசுந்தரம்.
நா. பார்த்தசாரதி படைப்புகள் :
"தீபம் " என்னும் சிறந்த இலக்கிய இதழை நடத்தி வரும் நா. பார்த்தசாரதியின் "குறிஞ்சிமலர்"
என்னும் சமூக நாவல் பெருமளவில் வாசகர்களை கொண்ட ஒன்றாகும்.
இந்த நாவலில் வரும் பூரணி, அரவிந்தன் கதாப்பத்திரங்களை
"திலகவதியாரையும், திருநாவுக்காரசாரையும் மனதில் வைத்து எழுதியதாக ஆசிரியர் கூறியுள்ளார்.
இந்த இரு கதாப்பத்திரங்களும் நூலை படித்தவர்களால் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை.
"இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு படைப்பவரே கற்பனை திறன் மிக்க
கலைஞர் என மு. வ. கூறுகின்றர்.
பிற கவிஞர்கள் :
நாராயண துரைக்கண்ணனின் உயிரோவியம் , நான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்.
வ . ரா. வின் கோதைத்தீவு , சுந்தரி முதலியன.
ரா. கி . ரங்கராஜனின் படகு வீடு, சங்கரரமின் மண்ணாசை
தி. ஜானகிராமனின் மலரமஞ்சம், அன்பே ஆரமுதே ஆகியவை சிறந்த சமூக நாவல்கள் ஆகும்.
வி. வெங்கட்ராமானின் அரும்பு, வேள்வித்தீவு முதலியவை.
இன்னும் சிறந்த எழுத்தாளர் பலரும் தோன்றி சிறந்த நவீனங்களைப் படைத்து வருகின்றனர்.
பெண் எழுத்தாளர்கள் :
அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி , ஆர். சூடா மணி , இந்திரா, கிருஷ்ணா ஆகியோர் இன்றைய பெண் எழுத்தாளர்களில் சிறந்து விளங்குகின்றனர்.
கேட்ட வரம், மணல் வீடு, பிரேமகீதம் ஆகியவை "அநுத்தமாவின்" படைப்புகள் ஆகும்.
குறிஞ்சி தேன் "ராஜம் கிருஷ்ணனின்" அற்புத படைப்பாகும் . பெண்குரல் எனும் இவரது படைப்பு
"கலைமகள் " பரிசு பெற்றது.
ஆர். சூடாமணியின் "மனத்துக்கு இனியவள் " என்னும் நவீனம் "கலைமகள் " பரிசு பெற்றதாகும்.
விமலாரமணி , சரோஜா ராமமூர்த்தி , வாசுமதி ராமசுவாமி , குகப்பிரியை முதலன பலரும்
தமிழில் அரிய நாவல்களைப் படைத்துள்ளார்.
துப்பறியும் நாவல்கள் :
தமிழ்வாணன் , சீரஞ்சீவி முதலானோர் தமிழ் துப்பறியும் நாவல்கள் பல படைத்துள்ளனர்.
மொழிபெயர்ப்பு நவீனங்கள்:
பிற மொழிகளில் படைத்துள்ள சிறந்த நவீனங்களை சுத்தானந்த பாரதியார், சரஸ்வதி ராம்நாத் ,
த. நா. குமரசுவாமி , ரா. வீழிநாதன் , ஆர். சண்முகசுந்தரம் ஆகியோர் மொழி பெயர்ப்பு நாவல்களை
படைத்துள்ளனர்.
டால்ஸ்டாய், தாகூர், பங்கிம் சந்தரர் , பகவதி சரண்வர்மா ஆகியோரது படைப்புகள்
தமிழில் வெளிவந்துள்ளன.
எர்னஸ்ட் ஹெமிங்கோவின் நோபல் பரிசு பெற்ற நாவல் ஆகிய "கடலும் கிழவனும் " ச. து. சு. யோகியராலும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பரிசுப்போட்டி நாவல்கள் :
"கலைமகள் " எனும் மாத இதழ் நாராயணசாமி அய்யர் நாவல் போட்டி என ஒன்று அமைத்து சிறந்த எழுத்தாளர்களையும் , நவீனங்களையும் , தமிழ் உலகுக்கு அளித்து வருகின்றது.
தமிழ் வளர்ச்சிக் கழகம், சாகித்ய அகாதமி , தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் முதலியன இன்றைய
எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.
லேபிள்கள்: GENERAL THINGS, PRAVEEN POORVARDH-TAMIL ILAKIYA VARALARU

