வியாழன், 18 நவம்பர், 2021

PRAVESHIKA-TAMIL POZHIL-1-NATPU-நட்பு--திருக்குறள்

 PRAVESHIKA

தமிழ் பொழில்-1


 திருக்குறள் 

                                                           நட்பு


முன்னுரை:

                        திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

 இவர்  முதற்பாவலர் ,தேவர்,  நாயனார் முதலான 

பல பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார். வள்ளுவன் தன்னை 

உலகுக்கு தந்த புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திருவள்ளுவரின் 

பெருமையை பாரதியார் அவர்கள் எடுத்து கூறுகின்றார்.

                         திருக்குறள் 133 அதிகாரங்களும்  1330 குறள்களையும் 

கொண்டுள்ளது. திருக்குறள் பொய்யாமொழி, தமிழ்மறை 

வாயுறை வாழ்த்து,பொதுமொழி என்று பல பெயர்களால்  

அழைக்கப்படுகிறது. இது அறத்துப்பால் , பொருட்பால், 

காமத்துப்பால் எனும் மூன்று பிரிவுகளை கொண்டது.

                        பொருட்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு அதிகாரமே நட்பு. அதில் கூறப்பட்டுள்ள  கருத்துக்களை இங்கு காணலாம்.




விளக்கம் :  

  •         நட்பினை போல ஒருவர் தேடிக்கொள்வதற்கு உரிய பொருள் வேறில்லை .அதுவே  பிறர் புக முடியாதபடி நம்மை காத்துக்கொள்வதுக்கான அரிய  பொருளாகும் .
  •          பிறை  நாளும் வளர்வது போல அறிவுடையார் நட்பு நாளும்  வளரும்.முழு நிலவு தேய்வது போல பேதைகளின் நட்பு நாளும்  தேயும்.
  •              நற்பண்பு உடையவருடன் ஏற்படும்  நட்பு என்பது ஒரு நூலின் நட்பொருளை படிக்கும் போது  மேன்மேலும் இன்பம் தருதலை போன்றதாகும்.
  •             ஒருவனோடு நட்பு கொள்வது அவனோடு கூடி  சிரித்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல.அவன் வேண்டாத செயலில் ஈடுபடும் போது  அவனை கண்டித்து புத்தி சொல்வதுமே ஆகும்.
  •                  ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்வதற்கு அருகருகே இருப்பதோ,நெருங்கி பழகுவதோ வேண்டியதில்லை.இருவரது எண்ணமும் ஓத்திருந்தால் அதுவே நட்பு எனும் தோழமையை கொடுக்கும்.
  •                   முகம் மட்டும் மலரும் படியாக நட்பு கொள்வது நட்பு அன்று.நெஞ்சமும் மலரும் படியாக அன்பு கொண்டு நட்பு கொள்வதே நட்பு ஆகும்.
  •                    அழிவு தரும் வழியில் நண்பன் சென்றால் அவனை தடுத்து, நல்வழியில் செலுத்தி அவனுக்கு கேடு வரும் என்றால் அவனுடன் பகிர்வது தான் நட்பு .
  •                           அவையில் ஆடை நழுவும் போது அவன் கை  உடனே சென்று ஆடையை பற்றித்  தாழ்வினை  நீக்குவது போல  நண்பனுக்கு துன்பம் வருங்கால் நாம்  உடனே சென்று அதை நீக்க வேண்டும்.
  • PRAVESHIKA-TAMIL POZHIL-1-NATPU-நட்பு

    https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA%20NATPARADHAL.html


  •                           நட்பின் அரியணை எது என்றால் எப்போதும் மாறாமல் முடிந்த போதேல்லாம் ஓடிசென்று ஒருவருக்கு ஒருவர் உதவுவதேயாகும்.
  •                                       இவர் எமக்கு இப்படிப்பட்டவர் .யாம் இவருக்கு இப்படிப்பட்டவர் என்று நட்பின் அளவை சொன்னாலும்,அந்த நட்பு தன்னுடைய  சிறப்பினை இழந்து விடும்.

இவ்வாறாக நட்பினுடைய சிறப்புகள்  இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.


PRAVESHIKA-தமிழ்ப் பொழில் -2-  1.உத்தம நண்பர்

 PRAVESHIKA---தமிழ் பொழில்-1---8.முரசு 



லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு