PRAVESHIKA-தமிழ்ப் பொழில் -2- 1.உத்தம நண்பர்
PRAVESHIKA
தமிழ்ப் பொழில் -2
1.உத்தம நண்பர்
கோப்பெருஞ்சோழனும்,பிசிராந்தையாரும் இடையேயான நட்பினை குறித்து கட்டுரை எழுதுக :
(அல்லது)
உத்தமநண்பர் கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:
முன்னுரை:
உடுக்கை இழந்தவன் கை போன்று உற்றுழி உதவும் நண்பன் தானே வந்து உதவுவான்.நல்ல உள்ளம் படைத்த சான்றோர் தொடர்பு வளர்பிறைபோல நாளும் வளரும்.
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
என்பது வள்ளுவர் வாக்கு.பண்டையத் தமிழகத்தில் ஒருவரையொருவர் காணாமல் நேரில் பலகாமலும் நட்புக் கொண்டிருந்தனர்.அப்படிப்பட்ட இருவருடைய நட்பினை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நட்பு:
பிசிராந்தையார் என்னும் புலவர்களுக்கும் மற்றும் சோழ நாட்டை ஆண்டு வந்த கோப்பெருஞ்சோழனுக்கும் இடையே இருந்த மிக சிறந்த நட்பினை இங்கு காணலாம்.
பிசிராந்தையார்:
பாண்டிய நாட்டில் பிசிர் என்னும் ஊர் இருந்தது.அங்கு பிசிராந்தையார் என்னும் புலவர் வாழ்ந்து வந்தார்.இவர் வயது முதிர்ந்தும் இளமை குன்றாமல் வாழ்ந்து வந்தார்.
கோப்பெருஞ்சோழன் :
சங்ககாலத்தே சோழரது தலைநகரங்களுள் ஒன்றான உறையூரை ஆட்சி செய்து வந்தான்.அவன் நாட்டை சீரும் சிறப்புடன் ஆட்சி செய்தான் .
பாடி வந்தவர்க்கு வாரி வழங்கும் நிறைந்த புகழ் படைத்தவன். ஆடி வரும் கூத்தர்க்கும் பேரன்பினன். சான்றோர் புகழும்படியான ஆழமான நட்பினை உடையவன்.
பழகா நட்பு :
பாண்டி நாட்டுப் புலவர் சிலர் வாயிலாக பிசிராந்தையாரின் பண்பு, புலமை போன்றவற்றைக் கேட்டறிந்த கோப்பெருஞ்சோழன் புலவரை காண விரும்பினான்.ஆந்தையாரும் சோழமன்னனின் உயர் குணங்களையும் கேட்டறிந்த காரணத்தால் அவரும் மன்னனை காண நினைத்தார்.
இவ்வாறாக இருவரும் ஒருவரை ஒருவர் காணாமலே ஆழ்ந்து நட்புக் கொண்டு வாழ்ந்தனர்.
நட்பின் ஆழம்:
ஒருநாள் வடதிசை நோக்கிச் செல்லும் அன்னச்சேவலைப் பார்த்து
"அன்னச் சேவலே! நீ உன் துணை உடன் செல்லும் வழியில் உறையூரை ஆளும் சோழன் அரண்மனைக்கு சென்று " நான்பிசிராந்தையாரின் அடியவன்"
என்று சொன்னால் உனது பெண் அன்னம் அணிய உயர்ந்த அணிகலன்களை
வழங்குவான்.இந்த பாடல் மூலம் சோழனிடம் கொண்டிருந்த நட்பின் காலத்திற்கு சான்று .
PRAVESHIKA-TAMIL POZHIL-1-NATPU-நட்பு--திருக்குறள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA-TAMIL%20POZHIL--%20.html
போர்புரிய எண்ணுதல் :
சோழ மன்னனது குடியில் அகலின் வயிற்றில் கள்ளி பிறந்து போல மன்னனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் தீய குணங்களுடன் வளர்ந்தனர். அவர்கள் தந்தையின் ஆட்சியை பறிக்க எண்ணினார்.போர் புரியவும் முனைந்தனர்.இதனை அறிந்த சோழன் அவர்களது செயல்களால் நாட்டிற்கு ஏற்படும் துன்பங்களை துடைக்க எண்ணி அவரும் போர் புரிய எண்ணினார்.
புலவர் நல்வழிப்படுத்துதல்:
சோழனது இந்த செயலை அறிந்த "புல்லாற்றூர் எயிற்றியனார்"
என்னும் புலவர் மன்னரே உம்மோடு போர் புரிய வருபவர் உன்னுடைய பகைவர்கள் அல்ல.உன்னுடைய இறப்புக்கு பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்களே.அரசன் வென்றாலும் தோற்றாலும் பழியே . ஆகவே நீ போரிடும் செயலை நல்ல செயல்களால் புகழ் பெற்று வாழ்க " இந்த அறிவுரைகளைக் கேட்ட மன்னன் போர் புரியும் எண்ணத்தை கைவிட்டார்.ஆட்சியை துறந்தான்.
Praveshika
மானம் இழந்த பின் வாழாமை:
இவ்வாறாக தன்னுடைய புதல்வர்களுக்கு எதிராக தான் போர் புரிய எண்ணியதை மானம் இழந்ததாக கருதினர். மானம் இழந்த பின் வாழாமை என்ற சான்றோர் மொழிக்கு ஏற்ப வடக்கிருந்து உயிர்விட எண்ணினார்.
வடக்கிருத்தல் :
வடக்கிருத்தல் ஒருவகை உண்ணநோன்பாகும். வடதிசை நோக்கி ஊண், உறக்கம் இன்றி இருந்து உயிர் துறத்தலே வடக்கிருத்தலாகும்.
காவிரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் வடக்கு முகமாக அமர்ந்து
உண்ணாநோன்பினை மேற்கொண்டான் மன்னன். தன்னை சூழ்ந்திருந்தவர்களை நோக்கி தனக்கு அருகே தன் உயிர் நண்பன் பிசிராந்தையாருக்கு ஓரிடம் ஒதுக்கி வைக்கமாறு கூறினார். இதனை கேட்ட பலரும் நீங்களும் புலவரும் ஒருவரை ஒருவர் கண்டதில்லை. நேரில் பழகியதில்லை.அப்படி இருக்க அவர் எப்படி இங்கு வருவார் என கேட்டனர்.
அப்போது அவர்களை நோக்கி உன் பெயர் என்னவென கேட்டால் "என் பெயர் கோப்பெருஞ்சோழன் " என்றே ஆந்தையார் கூறுவார் .
அத்துணை நட்புக் கொண்ட என் நண்பன் நன் செல்வ மிகுதியால் சிறப்புடன் வாழ்ந்த போது வராத என் நண்பன் நான் அல்லல்பட்டு வாடுகிறன்ற இந்த சமயத்தில் வராமல் இருக்க மாட்டான் என்றார் மன்னர்.
இருவரும் வடக்கிருத்தல் :
சோழனின் கூற்றுக்கு ஏற்ற படியே பிசிராந்தையாரும் அங்கு வந்து சேர்ந்தார்.பின்னர் புலவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில தானும் அமர்ந்து வடக்கிருக்கலானார். பின்னர் இருவரும் வடக்கிருந்து உயிர் துறந்தனர்.
சான்றோர் நட்பின் சிறப்பு:
இவ்விருவரின் நட்பை அறிந்த புலவர் கண்ணகானர் என்பவர்
பொன்னும்,பவளமும் ,முத்தும் , மணியும் ஒவ்வொன்றும் வெகுதொலைவில் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் விலை மதிப்பற்ற அணிகலன் அமைக்கும் பொழுது ஒன்று சேர்வது போலச் சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே சேர்வர். என புகழ்ந்து பாடினார் .
முடிவுரை:
'உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்'என்னும் குரலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இருவரது நட்பும் போற்றிப் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர் . பழகா நட்பால் சிறந்த விளங்கிய கோப்பெருஞ்சோழனும் ,பிசிராந்தையாரும் உத்தமநண்பர்களே.
லேபிள்கள்: PRAVESHIKA-TAMIL POZHIL-2


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு