PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
PRAVEEN POORVARDH
தமிழ் இலக்கிய வரலாறு
சங்ககாலம்
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
முன்னுரை :
பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை அடி ,பொருள் என்னும் முறையால் வகைப்படுத்தித் தொகுக்கப்பெற்ற நூல்களே
எட்டுத்தொகையாகும்.
நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,கலித்தொகை,அகநானூறு என்னும் ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்களாகும்.
பதிற்றுப்பத்து,பரிபாடல்,புறநாநூறு என்னும் மூன்றும் புறப்பொருள் பற்றிய நூல்களாகும்.
எட்டுத்தொகை வகைகள்
நற்றிணை :
9 அடி முதல் 12 அடி வரை அமைந்துள்ள இந்நூல் 400 பாடல்களைக் கொண்டுள்ளது
பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். தனிமகனார்,விழிக்காண்
பேதைப்பெருங்கண்ணனார் என்பவர் அவர்களுள் சிலர்.
குறுந்தொகை :
4 அடி முதல் 8அடி வரையுள்ள இந்நூல் 400 பாடல்கள் கொண்டுள்ளது.
200 க்கும் மேற்பட்ட புலவர்கள் இப்பாடல்களை எழுதி உள்ளனர்.
ஐங்குறுநூறு :
3 அடி முதல் 6 அடி வரை அமைந்துள்ள இந்நூல் 501 பாடல்களை கொண்டுள்ளது.இந்நூல் முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை எனும் ஐந்து திணைகள் ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல்களை கொண்டுள்ளது,
புலவர்கள் :
மருதத்தை ஓரம்போகியார்
நெய்தலை அம்மூவனார்,
குறிஞ்சியை கபிலர்
பாலையை ஆந்தையாரும்
முல்லையை பேயனாரும்
பாடியுள்ளனர்.
பதிற்றுப்பத்து :
சேரமன்னர் பதின்மரைப் பத்துப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு பதிற்றுப்பத்தாகும் .முதல் பத்தும் ,இறுதி பத்தும் நீங்கலாக ஏனைய எட்டுப்பத்துக்களே இப்போது கிடைத்துள்ளது .குமட்டூர்க் கண்ணனார்,காப்பியனார்,பரணர்,நச்செள்ளையார்,கபிலர்,அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பாடியுள்ளனர்.சேரமன்னனின் வரலாற்றை அறிந்துகொள்ள இது பெரிதும் உதவுகின்றன.
பரிபாடல் :
பரிபாடல் என்பது ஒருவகைப் பாவாகும் .இந்நூலுக்கு பரிமேலழகர் உரை எழுதி உள்ளார்.இந்நூல் முருகன்,திருமால் போன்ற கடவுளரையும்,மதுரை நகரினையும் பற்றிய பாடல்களை கொண்டுள்ளது.
கலித்தொகை :
இந்நூலின் ஒவ்வொரு பாடலும் ஒரு சிறுகதை என கூறலாம்.ஐவகை திணைகளை பற்றி பாடப்பட்டுள்ளது.கபிலர்,நல்லந்துவனார் போன்றோரால் பாடப்பட்டுள்ளது.
அகநானூறு :
13 அடி முதல் 31 அடி வரை உள்ள பாடல்களை கொண்டுள்ள இந்நூல் நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகிறது.
இந்நூல் களிற்றியானை நிரை ,மணிமிடை பவளம்,நித்திலக்கோவை என்னும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
PRAVEEN POORVARDH---வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/praveenpoorvardhvalikutrathaiporutharulavendiyavai.html
புறநானூறு:
கோவூர் கிழார்,ஒளவையார் முதலான புலவர்களின் பாடல்களுடன்,அரசோச்சிய காவலரது பாடல்களையும் கொண்டுள்ளது.
தமிழ் வேந்தரின் கொடை ,வீரம் அறிய இந்நூல் உதவும்.
பத்துப்பாட்டு :
பத்துப்பாட்டிற்கு நச்சினார்க்கினியர் சிறந்த முறையில் உரை எழுதி உள்ளார்.
திருமுருகாற்றுப்படை :
பத்துப்பாட்டில் முதலாவதாக வரும் இந்நூலினை புலவராற்றுப்படை எனவும் கூறப்படுகிறது .வீடு பெற்றானோருவன் வீடுபெற விழைந்த ஒருவனை முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது இந்நூலாகும்.
பொருநாற்றுப்படை:
முடத்தாமக்கண்ணியார் என்னும் பெண்பாற்புலவர் .இந்நூல் 248வரிகளை கொண்டுள்ளது.கரிகால் பெருவளத்தானைச் சிறப்பித்துப் பாடியது பொருநாற்றுப்படை. கரிகலானது கொடைச் சிறப்பும்,வெற்றிச்சிறப்பும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-சங்ககாலம் ஒரு பொற்காலம்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARUSANGAKALAMORUPORKALAM.html
சிறுபாணாற்றுப்படை :
யாழ்ப்பாணர் சிறுபாணர் ,பெரும்பாணர் என இரு வகையினராவர்.வஞ்சி,உறையூர்.மதுரை ஆகிய ஊர்களின் சிறப்பு,கடையெழு வள்ளல்களை பற்றிய செய்திகள் முதலானவற்றை இந்நூலில் காணலாம்.
பெரும்பாணாற்றுப்படை :
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ள இந்நூல் 500 அடிகளைப் பெற்றுள்ளது.இது பாணாறு எனவும் கூறப்படும்.
முல்லைப்பாட்டு :
நப்பூதனார் பாடிய இந்நூல் பத்துப்பாட்டில் அளவால் சிறியது .103 அடிகளைக் கொண்டுள்ளது. முல்லைத் திணைக்குரிய இருத்தல் என்னும் ஒழுக்கத்தினை இந்நூல் சிறப்பித்து கூறுவதால் முல்லைப்பாட்டு என்னும் பெயர் பெற்றது.
மதுரைக்காஞ்சி :
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியுள்ளார்.திருப்பரங்குன்ற விழா,அந்தி விழா,திருவோண விழா,நன்னன் பிறந்த விழா முதலான விழாக்களை இந்நூல் இனிது விளக்கும்.
நெடுநல்வாடை :
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியுள்ள இந்நூல் 188 அடிகளைக் கொண்டுள்ளது.
குறிஞ்சிப்பாட்டு :
ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ்க்ச்சுவையினை உணர்த்திக் கபிலர் பாடியுள்ள நூல் குறிஞ்சிப்பட்டாகும் .இந்நூல் 261 அடிகளைக் கொண்டுள்ளது.
பட்டினப்பாலை:
சோழன் கரிகாற்பெருவலைதனைக் கடியலுற் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் பாடிய நூலே பட்டினப்பாலையாகும்.
301 அடிகளை கொண்டுள்ளது.
மலைபடுகடாம் :
583 அடிகளைக் கொண்ட இந்நூல் கூத்தராற்றுப் படை எனவும் அழைக்கப் பெறும் .
முடிவுரை:
இவ்வாறாக பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் தமிழ் புலவர்களின் பாடல்கள் மூலம் அரசர்களின் சிறப்பு,கொடை ,வீரம் மற்றும் மக்களின் வாழ்க்கை ஐந்திணைகளின் சிறப்பு,தமிழ் விழாக்கள் ,அதன் சிறப்பு போன்ற பல விஷயங்களை பற்றி நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது.
லேபிள்கள்: PRAVEEN POORVARDH-TAMIL ILAKIYA VARALARU


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு