VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல்
VISHARAD POORVARDH
மலர்ச்செண்டு
தென்றல்
பாரதிதாசனின் தென்றலின் கருத்துக்களை தொகுத்து எழுதுக :
முன்னுரை :
கவிஞன் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்ட தென்றல் என்ற கவிதையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
பாரதிதாசன் :
சீடனாகி அவர்மேல் கொண்ட அன்பால் தன்பெயரைபாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். இயற்கையை வர்ணிப்பதில் பாரதிதாசன்
இணையற்ற கவிஞர்.
கவிஞரின் படைப்புகள் :
பாரதிதாசன் கவிதைகள் ,பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், தமிழியக்கம், குடும்ப விளக்கு,நல்ல தீர்ப்பு, அமைதி, காதல்
நினைவுகள், தேனருவி ஆகியவை கவிஞரின் சிறந்த படைப்புகள் .
மென்காற்றும் வன்காற்றும் :
அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பூமியில் கூத்தாடிக்கின்றாய் காற்றே ..வலிமையான பொருட்களை தூள்
தூளாக செய்யும் காற்றே .அனிச்சம் பூ நோகாது நுழைந்து செல்கின்றாய் காற்றே .
தென்னாடு பெற்ற செல்வம் :
உன்னோடு ஒப்பிடும் போது இம்மக்கள் ஒரு சிறு பகுதிக் கூட இல்லை. தென்னாடு பெற்ற செல்வமே உன்னுடைய இன்பத்தை வேறு
எங்கு தெரிய செய்தாய்.
VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html
தென்றலின் நலம் :
குளிர்ந்த சந்தன மணம் வீசும் இமயமலையில் குளிர்ந்து அங்கு நறுமணம் உண்டுபண்ணும் மலர்களின் நடுவே மனத்தினை உண்டும் ,
வண்டின் மனம் வீசி நாளும் வளர்கிறாய் தென்றலே .. அப்படிப்பட்ட உன்னை வாழ்த்தாதவர் யாரும் இல்லை.
அசைவின் பயன் :
உன்னுடைய அரும் பெரும் உருவத்தை நான் கண்டதில்லை . எப்படி பெற்ற அன்னையின் அனபை நம் கண்ணால் காணமுடியாது.ஆனாலும்
அவளுடைய அன்பை நம்மால் உணர முடியுமோ அதுபோல உன்னுடைய ஒரு ஒரு அசைவுமே என்னை சிலிர்க்க செய்கிறது. உயிர் கூட்டத்தை
இணைப்பது அன்புதானே .
தென்றலின் குறும்பு :
உலைத்தீயை ஊதுகின்றாய் ..அந்த உலைத்தீயில் ஊதும் கொல்லனின் தோளில் குளிர்ந்த காற்றை தவழச்செய்கிறாய்.
பெண்களின் உடையை நீ உன்னுடைய குளிர்ந்த தென்றலினால் விளக்கினாலும் உன்னை யாரும் விளக்க மாட்டார்கள்.
குழந்தையும் தென்றலும் :
மலரினை போன்ற அழகிய பூங்கொத்துக்கள் போல பூத்துக்குலுங்கும் குழந்தையின் நெற்றியில் உன்னுடைய குழல் இசையை மீட்டுகின்றாய். குழந்தையை அன்பின் கொழுந்தாக கருதி அதனுடைய மேனியெங்கும் ஊடுருவி கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறாய்
தென்றலின் இன்பம் :
இனியதொரு குளிராக கோடை வெப்பத்துக்கு மருந்தாகி சோர்வினை நீக்குகிறாய் .பின்னர் பருந்தாகி வானில் பறந்தோடி பாடுகின்றாய்.
தென்றலின் பயன் :
நான் எழுதிக் கொண்டிருக்கும் போது வழக்கம் போல நீ அங்கே வந்து உன்னுடைய குளிர்ந்த காற்றை வீசினாய் . பின்பு நான்
எழுதிக்கொண்டிருந்த தாளை கிளப்பி விட்டாய். அந்த தாளை ஏன் கிளப்பினாய் என்று கேட்டேன். அதன் புழுதியை துடைத்தேன் என்றாய்
மீண்டும் நீ என்னுள் கூடினாய்
தென்றலுக்கு நன்றி :
தந்தாள். தமிழ் எனக்கு அகத்தும் ,தென்றல் காற்றே நீ எனக்கு புறமும் இன்பம் அமையச் செய்வதை நன் கனவில் கூட மறக்க மாட்டேன்.
முடிவுரை :
இவ்வாறாக கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தென்றலின் உடைய சிறப்பு, அதன் பயன், தென்றலினுடைய குறும்பு, அதனுடைய இன்பம்
ஆகியவற்றை இந்த கவிதையில் வர்ணித்துள்ளார்.
visharad poorvardh-மலர்ச்செண்டு-பாரத சமுதாயம்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/vishardpoorvardhbharathasamudhayam.html
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/vishardpoorvardhbharathasamudhayam.html
VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/vishardpoorvardhthilagavadhiyar.html
VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/vishardpoorvardhthilagavadhiyar.html
VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html
லேபிள்கள்: Visharad Poorvardh-Malarcchendu


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு