புதன், 29 டிசம்பர், 2021

VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

VISHARAD POORVARDH

இலக்கிய கனிகள் 

4.திலகவதியார் 


திலகவாதியாரின் திருத்தொண்டின் சிறப்பினை விளக்குக:


முன்னுரை:


திலகவதியார் :


              வளம் நிறைந்த திருமுனைப்பாடி என்னும் ஊரில் தந்தை பெரியார் புகழனார் தாய் மதினியார் என்பவருக்கும் செம்மலர்போல திலகவதியார் தோன்றினார். இவருடைய சகதோரர் மருணீக்கியார் எனும் இயற்பெயர் கொண்ட திருநாவுக்கரசர் ஆவார்.  


திருமண ஏற்பாடு:


                   திலகவாதியாருக்கு பன்னிரண்டு வயது ஆனது. இந்நிலையில் பேரழகு பெற்ற கலிப்பகையார் என்பார் திலகவாதியாரை மணம்  புரிய எண்ணி பெரியோர் சிலரை புகழனார் இடம் செலவிடுத்தார். அங்கு சென்ற பெரியோர்களின் வாயிலாக கலிப்பகையாரின் நல்ல பண்பும், அரசன் பால் அவன் கொண்ட அன்பு, அவருக்கு உற்றுழி உதவும் பண்பும் வாய்ந்தவர் என்பதை உணர்ந்த புகழனார் தன் மகள் திலகவாதியை அவர்க்கு அளிப்பதாக ஒப்பு கொண்டார். 


போருக்கு செல்லுதல்:


                              கலிப்பகையார் மிகவும் மகிழ்ச்சி உடன் திருமண ஏற்பாடுகளை செய்தார். அந்த சமயத்தில் வட நாட்டு  மன்னர் இவருடைய நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தினால் அரசன் கலிப்பகையாரை அழைத்து போருக்கு செல்லுமாறு பணித்தார். அரசனின் ஆணையை ஏற்று கலிப்பகையாரும் நெடுநாள் தங்கி கடும்போர் புரிந்தார்.

                      இந்த சமயத்தில் திலகவாதியாரின் தந்தையார் நோயினால் இறந்து விட்டார். கணவனின் பிரிவு துயர் தாங்காமல் மனைவியும் உயிர் துறந்தார். இந்நிலையில் போருக்கு சென்ற கலிப்பகையார் பகைவருடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார். 

VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்   5.மதுரை மாநகர் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/10/MADHURAI%20MANAGAR%20.html

சாகத்துணிதல்:


                        தாய், தந்தையரின் இறப்பின் துயர் தாளாது கடும் துயரில் இருந்த திலகவாதியாருக்கு இப்போது தமக்கென்று பேசப்பட்டவரும் இறந்து விட்டதை எண்ணி தானும் உயிர் விட எண்ணினார். 

                              இவ்வாறு தமக்கையார் உயிர் விட துணிந்ததை அறிந்த மருணீக்கியார் விரைந்து சென்று அவரது திருவடிகளில் விழுந்து "தாயும் தந்தையும் மறைந்த பின்னும், நான் உயிர் வாழ்வது உன்னை வணங்கத்தானே" நீயும் என்னை விட்டு போக துணிந்தால் உனக்கு முன் நான் உயிர் விடுவேன் என கூறினான். இதனை கேட்ட திலகவதியார், தம்பியின் நிலை கண்டு மனம் மாறி சாகும் எண்ணத்தை கைவிட்டார். தம்பிக்காக உயிர் வாழத் துணிந்தார். 


அறச்செயல்கள்:


                         திலகவாதியாரின் மனமாற்றத்தை அறிந்து மருணீக்கியார் மனவருத்தம் நீங்கப் பெற்றார். உலகின் நிலையாமையை நன்கு உணர்ந்து அறச்செயல்கள் செய்ய விழைந்தார். அறச்சாலைகளும், தண்ணீர் பந்தல்களும் அமைத்தார். வேண்டுவோருக்கு தேவையான உதவிகளை செய்தார். விருந்தினரைப் பேணியும், நாவலருக்கு வளம் பல நல்கியும் வாழ்ந்து வந்தார். இவ்வாறு பல  அறச்செயல்கள் பல புரிந்த அவர் தன் செல்வம் அனைத்தும் துறந்து கொல்ல நோன்பு கொண்ட சமணசமயமே சிறந்த சமயமென்று எண்ணி சமண சமயத்தை தழுவினார். 


திருப்பணிகள்:


                        திலகவாதியர் தவநெறி மேற்கொண்டு சிவபெருமானின் திருவருளைப் பெறுவதற்காக பெரிதும் விழைந்தார். திருவதிகை எனும் திருத்தலத்தை அடைந்தார் அங்கு சிவனை வணங்கியும், திருப்பணிகளை செய்தும் வாழ்ந்து வந்தார். இவ்வாறு திருத்தொண்டு புரியும் திலகவாதியாருக்கு தன் தம்பி பிற சமயத்தை தழுவி இருப்பதை எண்ணி வருந்தினார். என் தம்பியைப் பிற சமயத்தை விட்டு நீக்கி அவனை ஆட்கொள்வாயாக என மனம் உருகி வேண்டினார். 


சூலைநோய்:


                      மனம் இறங்கிய பெருமான் ஒருநாள் அவரது கனவில் தோன்றி, "சூலைநோய் கொடுத்து அவளை ஆட்கொள்வோம் என்று அருளினார்.  அவ்வாறே மருணீக்கியாருக்கு சூலை நோய் ஏற்பட்டது. தாம் கற்றுணர்ந்த சமண சமய மந்திரங்களை கொண்டு நோயை தடுக்க முனைந்தார். நோய் தணியவில்லை. மயிற்பீலி கொண்டு உடல் முழுவதும் தடவினார். அப்போதும் நோய் தணியவில்லை. நோயின் துன்பம் அதிகமாகவே அவருக்கு தன் தமக்கையின் நினைவு எழுந்தது. உடனே பணியாளை ஏவி தன் தமக்கையிடம் கூறிவருமாறு ஏவினார். அவனும் திலகவாதியாரிடம் சென்று நடந்தவற்றை எடுத்துக்கூறி உம் தம்பி உய்யும் வழியைக்  கேட்டு வருமாறு பணித்தார் என கூறினான். தன்னால் வர இயலாது என மறுத்து விட்டார். 


திலகவாதியாரின் திருவடிகள்:


                              தமக்கையின் மறுமொழி கேட்ட அவர் தனது சமண சமய கோலத்தை துறந்து திலகவாதியாரின் திருவடிகளில் விழுந்தார். என் துயர் களைந்து  அருள வேண்டும் என வேண்டினார் . உடனே திலகவாதியார்  திருவைந்தெழுத்தினை ஓதித் தீருநீறு கொடுத்தார். உடனே அவர் அந்த திருநீற்றை தன் திருமேனியில் பூசி கொண்டு திலகவாதியாரின் பின் சென்றார்.கோயிலுக்கு சென்ற மருணீக்கியார் தம் மாயை அகலுமாறு நிலத்தில் விழுந்து கும்பிட்டு திருப்பதிகம் படி அருளினார். அக்கணமே அவரது நோய் அகன்றது. 


திருநாவுக்கரசர்:


                          நாவுக்கர சென்று உலகேழினும் நின் நன்னமாம் நயப்புற மன்னுக எனும் வாக்கு வானில் எழுந்த அன்று முதல் தருமசேனர் திருநாவுக்கரசர் ஆனார். 


முடிவுரை:

      

                             திருநாவுக்கரசரை உலகிற்களித்து அழியாப்புகழ் பெற்றார் திலகவதியார். தம்மை நெறிப்படுத்திய திலகவாதியாரை "ஈன்றாளுமாய் எனக்கு " எந்தையுமாய் உடன் தோன்றினராய்" என்று திருநாவுக்கரசர் பாடி புகழ்ந்தார். 

                               








லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு