வியாழன், 23 டிசம்பர், 2021

PRAVEEN POORVARDH-வாலி வதைப்படலம்-கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

வாலி வதைப்படலம்



1.இராமர், இலக்குவன், சுக்ரீவன் சென்ற கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகளை கூறுக :


இராமர், இலக்குவன், சுக்ரீவன் செல்லும் மலையின் சிறப்பு:


முன்னுரை:


        
                  இராமர் தன்னுடைய தந்தையின்  ஆணைக்கிணங்க தன் மனைவி சீதா, தம்பி இலக்குவன் உடன் அயோத்தியாவிலிருந்து வனவாசம் சென்றார். அங்கு  கிட்கிந்தை மலையின் அரசன் மற்றும் குரங்கின தலைவனான சுக்ரீவன் உடன்  இராமபிரானுக்கு  நட்பு ஏற்பட்டது. 
                    அங்கு சீதையை  இராவணன் கடத்தி சென்று விட்டான். அதனால் இராமர் மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்தார். அப்போது இராமர், இலக்குவன், சுக்ரீவன் மூவரும் இணைந்து கிட்கிந்தை மலைப் பகுதியில் நடந்து சென்றனர்.

                   அப்போது காணப்பட்ட கிட்கிந்தை மலையின் சிறப்புகளை இந்த கட்டுரையில்  காணலாம். 


மலை வளத்தின் சிறப்புகள்:



                        ஆண் யாளி ஒன்றும், புலிகள் இரண்டும், இரண்டு ஆண்  சிங்கங்களுடன், விரைந்து செல்லும் யானைகள் இரண்டும் கூடி செல்வது போல இராமர், இலக்குவன், சுக்ரீவன் , சுக்கிரவுனுடைய அமைச்சர்கள்  உடன் அந்த மலை வழியில் நடந்து சென்றனர். 
            அங்கு ஆச்சா மரங்களும், வாழைமரங்களும், பச்சிலை மரங்களும் இருந்தன. மரங்களின் தழைகள் காற்றில் அசைந்தாடப் பெற்ற சந்தன மரங்கள் மலர்ந்த மலைச்சாரல்களும், வாசனை வீசுகின்ற செண்பக மரச்சோலைகளும்  செழுமையோடு காணப்பட்டது.


                       இராமர் இலக்குவன் விரைந்து வருவதை கண்டு மேகங்கள் அஞ்சி சிதறி ஓடுகின்றன. அவற்றில் இருந்து நீர் பெருகி ஓடுகின்றன. 
                 மதங்கொண்ட யானைகள் தாக்கியமையால் முறிந்து விழுந்த அகில் மற்றும் சந்தன மரங்களும் உருண்டு வந்து சிதைந்து போனதால் அதில் இருந்த தேனடைகளில் உள்ள தேன் மலைவழிகளில் சிந்தி யாவும் செல்ல முடியாதபடி வழுக்கம் தன்மை உடையதாக மாறின.

                 

                 அந்த மலையில் பொருந்திய செம்மணிகள் நெருப்பை போல ஒளிவீசுகின்றன.    


                            அந்த மலை இடங்களில் எல்லாமே மிகவும் ஓங்கி இருப்பதால் அங்கு வானயாறு பாய்ந்தது. தினைத் தாள்கள் இருக்கும் இடத்தில காளைகள் பாய்வது போல அருவி பாய்கின்றன.

                                   அதன் முன்னிடங்களில் யானைகள் கூட்டமாக பாய்கின்றன. குருவிகள் திணைக் கதிர்களில் பாய்கின்றன . மந்திகள் மரக்கிளைகளில் பாய்ந்து ஓடியது.

PRAVEEN POORVARDH-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை-தேசிய கொடியின் சிறப்புகள்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/12/kavimanidhesigavinayagampillaidhesiyakodi.html 

 
                             அந்த மலைச்சாரல்களில்  ஏலக்காய்களின் நறுமணம் கமழுகின்றன. தேன் பெருகுதலால் வழுக்குகின்ற அந்த மலை சாரல்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும், வளைந்த அந்த பிறை நிலாவையும், அந்த வானத்து கிரகங்களையும், தன் பக்கம் ஈர்ப்பதோடு அல்லாமல்  அந்த இந்திரனையே தன்  பக்கம் ஈர்க்கும் தன்மை உடையதாக இருந்தது. 

PRAVEEN POORVARDH-வாலி வதைப்படலம்-கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEEN%20POORVARDH-%20-%20%20%20.html

முடிவுரை:



                இவ்வாறாக  இராமர், இலக்குவன்,  சுக்ரீவன் செல்லும் மலை வழிப்பாதை மிகவும் செழிப்பாகவும், வளம் நிறைந்ததாவும்  இருந்தது.   

                   
 



 
தமிழ் இலக்கிய வரலாறு - 5.இரட்டைக் காப்பியங்கள் 













 

                      

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு