VISHARAD POORVARDH -இலக்கிய கனிகள் -2.தம்பியர்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
VISHARAD POORVARDH
இலக்கிய கனிகள் 2.தம்பியர்
ராமகாதை காட்டும் இலக்கிய தம்பியரின் சிறப்புகள்
(அ )
இலக்கியம் காட்டும் இன்பத்தம்பியரின் வரலாற்றை பற்றி கூறுக :
முன்னுரை:
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது சான்றோர் கண்ட நன்னெறியாகும். உடன்பிறப்பென்னும் பாசத்தையும், உடன்பிறவாதோரையும் உடன்பிறந்தவர்களாகக் கொண்டு வாழும் நெறியையும் இலக்கியங்கள் பல உணர்த்துகின்றன. அவ்வாறு ராமகாதை காட்டும் தம்பியர்கள் ஒரு சிலரை பற்றி இங்கே காணலாம்.
இலக்குவன்:
இலக்குவன் அண்ணன் ராமன் மேல் பெரும் பற்றுடையவன் ஆவான். ராமனுக்கு துன்பம் நேரும் போதேல்லாம் சினங்கொண்டு எழுகிறான். அதேபோல கைகேயின் காரணத்தால் ராமன் காடு செல்ல நேர்ந்த போது கைகேயின் எண்ணத்தை நிறைவேற விடமாட்டேன் என வெகுண்டு எழுந்தான். அப்போது ராமன் லட்சுமணன் இடம் தான் அரசு துறந்தது விதியின் பிழையாகும் என லட்சுமணனின் கோவத்தை தணித்தான்.
பிறகு அண்ணன் ராமர் கானகம் சென்ற போது அரச வாழ்க்கையை துறந்து அண்ணனோடு தானும் சென்றான்.
ராமனை காண பரதன் காட்டிற்கு பெரும் படையுடன் வருவதை கண்ட இலக்குவன் அவனை தவறாக புரிந்து கொண்டு அவனை கொன்று அழிப்பதாக கூறுகிறான். இப்போது ராமன் பரதனுடைய பெருமைகளை எடுத்துக் கூறி இலக்குவனின் சினத்தை தணிக்கிறான்.
இவ்வாறு இலக்குவன் செய்யவதெல்லாம் ராமன் பால் கொண்ட அன்பின் காரணமாகத்தான் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இலக்குவன் மேல் ராமனின் அன்பு:
தன்னுயிரை புகழுக்கு விற்ற சடாயுவுக்கு இறுதிக்கடனை முடித்து விட்டு ராவணனை நோக்கி செல்லும் வழியில் ராமரின் தாகம் தணிப்பதற்காக நீர் கொண்டு வர சென்ற லட்சுமணனை அயோமுகி என்ற அரக்கி தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி பலவாறு வேண்டிக்கொண்டாள். லட்சுமணன் அதனை ஏற்று கொள்ளாததால் லட்சுமணனை தூக்கி சென்று விட்டாள்.
நெடுநேரமாகியும் இலக்குவன் வராததால் பலவாறு வருந்தினார். தாய், தந்தையரை, சீதையையும் பிரிந்து வாழும் நன் எவ்வாறு உயிரோடு இருப்பேன் என்று
"அறப்பால் உளதேல் அவன்முன் னவனாய்ப்
பிறப்பா லுறின் வந்து பிறக்க"
என்று உரைத்து இறக்க துணிந்தான். பிறகு அரக்கி எழுப்பிய ஒலியை கேட்டு தம்பியின் இருப்பிடம் அறிந்து மிகவும் மகிழ்ந்தார்.
இந்திரஜித் ஏவிய நாகபாசனத்தினால் இலக்குவன் அழிந்தால், தானும் உயிர் துறப்பதாக ராமன் கூறும் சொற்களின் மூலம் அவனது அன்பின் ஆழத்தை காட்டுகிறது.
VISHARAD POORVARDH- இலக்கிய கனிகள் -3.இலக்கிய கரும்பு
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/visharadpoorvardhillakkiyakanigalillakkiyakarumbu.html
பரதனின் பண்பு:
குகனால் பெரிதும் போற்றப்படும் பரதனை பற்றி ராமகாதை கூறுவதை காணலாம். தயரதன் இறந்து விட்டதை அறிந்து பரதன் பலவாறு புலம்பி, ராமனைக் கண்டு வணங்கினால் தான் தன் துன்பம் தீரும் என்று கூறி அவனை காண வந்தான்.
வசிட்டமுனிவர் பரதனை அரசபாரம் ஏற்குமாறு வேண்ட, அதனை மறுத்து கூறும் பரதனது மொழிகளை கேட்டு அவையில் சான்றோர்கள் அவனைப் பெரிதும் பாராட்டினார்.
ராமன் காட்டிற்கு சென்றதும் அரியணையில் அமராமல் ராமரின் பாதணிகளை அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டு வந்தான். பரதனின் பண்பு ஆயிரம் ராமருக்கு ஈடாகாது.
தந்தையிருக்க எனக்கு அரசுரிமை ஏன்? மன்னவன் கட்டளையென்று அரசாட்சியை ஏற்று கொண்ட ராமனைக் காட்டிலும் பரதன் உயர்ந்தவன் என்று அவையோர் கூறுதலும்,
"தாயாரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை என்ன நீத்துச் சிந்தனை என்று குகனும் ,
"எனைத்துள மறையவை இயம்பற் பாலன
பனைத்திரன் கரக்கரிப் பரதன் செயகையை "
என ராமரும் பரதனைக் புகழ்ந்து கூறுவதை காணலாம்.
கங்கை வேடன்-குகன்:
காட்டில் வாழும் வேடன் குகன், ராமனிடத்துக் கொண்டுள்ள அன்பினை, படையுடன் வந்த பரதனைக் கண்டு அவன் வெகுண்டு கூறும் சொற்களின் மூலம் உணரலாம். ஆயிரம் எலிகள் ஒன்று கூடினால் என்ன பயன்? ஒரு பாம்புக்கு அது ஈடாகுமா? அந்த பாம்பு சீண்டினால் போதும். அத்தனை எலிகளும் என கூறுகிறான். இங்கே பரதனின் படைகளை எலிகள் எனவும், ராமரை அரவம் எனவும் கூறுகின்றான் குகன்.
பிறகு பரதனின் பெருமையயை அறிந்த பின் மனம் மாறுகிறான். இவ்வாறு அவன் செய்வதெல்லாம் ராமன் மேல் கொண்ட பேரன்பின் காரணத்தினால் தான் என்பதை அறியலாம்.
கும்பகர்ணன்:
இராவனது தம்பியருள் கும்பகர்ணனை பற்றி பார்க்கலாம். "தோளோடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால்" என ராமனால் வியந்து கூறப்படும் அளவுக்கு பெருமை உடையவன் கும்பகர்ணன். இவன் வீடணன் போல இராவணனை வெறுத்து ராமனோடு நட்பு கொள்ளவில்லை. கர்ணனை போல செஞ்சோற்று கடன் கழித்தலே தனக்கு புகழ் என இராவணனோடு இருந்தான்.
தனது பார்வையிலே கொல்லும் இயல்பு கொண்டது பாம்பு. அதுபோல தன் பார்வையாலே அரக்கர் குலத்தை கொல்லும் கற்பு நிறைந்தவள் சீதை. அவளை ராமனிடம் கொண்டு விட்டு, அவனது திருவடிகளை வணங்குவதே நல்லது என தன் அண்ணனுக்கு எடுத்து கூறுகிறார் கும்பகர்ணன்.
பிறகு தன் அண்ணனின் ஆணையை ஏற்று போருக்கு சென்று உயிர் துறந்து புகழ் கொள்கிறான்.
இலக்கியம் கூறும் தம்பியர்:
ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகம் ஆளுமாறு சிவனால் வரம் தரப்பெற்றவன் சூரபதுமன். இவன் தனது தம்பி சிங்கமுகனை அழைத்து ஆறுமுகனுடன் போரிடுமாறு கூறுகிறான். இவனும் முதலில் கும்பகர்ணன் போல தன் அண்ணனுக்கு அறிவுரை வழங்குகிறான். "வலிமை நிறைந்த உன் மைந்தரையும், அமைச்சரையும் இழந்து நிற்கும் உன் எண்ணம் மிகவும் இழிவானது ஆகும்.
இறுதியில் 'ஊழின் வல்லமையை வென்றவர் யார்? எனக் கூறியவன் போர்க்களம் சென்று புகழ் பெறுகிறான்.
ராமாயணம் குறிப்பிடும் இருதம்பியர் :
குரங்கின தலைவனாம் சுக்கிரவனையும், அரக்கர்குல தலைவனாம் வீபீஷணனையும் தம்பியாக ஏற்று வாழ்ந்தார் ராமர்.
முடிவுரை:
இவ்வாறாக தம்பியர்களின் அன்பு , சகோதரத்துவம், கடமை உணர்வு, சகோதரநயம், ஒற்றுமை, அன்பின் வெளிப்பாடு போன்றவற்றை காட்டுகிறது.
லேபிள்கள்: Visharad poorvardh-Ilakkiya kanigal


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு