வெள்ளி, 10 டிசம்பர், 2021

PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-4.பதினொண்கீழ்க்கணக்கு நூல்கள்


PRAVEEN POORVARDH

தமிழ் இலக்கிய வரலாறு 

சங்க மருவிய காலம் 

4.பதினொண்கீழ்க்கணக்கு நூல்கள் 




முன்னுரை:


              கீழ்க்கணக்கு என்பது இரண்டடி முதல் ஆறடி வரையுள்ள வெண்பாவினாலேனும்,அதன் இனத்தாலேனும் ஆகிவரும் நூல்கள் ஆகும். இங்கு கணக்கு என்பது சொல், நூல் என்னும் பொருளில் வரும். இந்நூல் அறம் , பொருள், இன்பம் போன்ற உறுதிப் பொருள்களை இனிது விளக்கும். இந்த கட்டுரையில் பதினொண்கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி இங்கு காணலாம்.


1.திருக்குறள்:


                கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால், கருத்தால் முந்தையது திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் நூலாகும். இதில் 133 அதிகாரங்களும், அதிகாரத்துக்கு 10 பாடல்கள் வீதம் 1330 திருக்குறள்கள் உள்ளன. அறத்துபால் , பொருட்பால், காமத்துப்பால்  எனும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. இது பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உலகப்பொதுமறை  என பல பெரியர்களால் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் தேவர், நாயனார், தெய்வப்புலவர் என போற்றப்படுகிறார்.


2.நாலடியார்:


             சமணமுனிவரால் இயற்றப்பட்டது.பொருள்செறிவில் திருக்குறளுக்கு அடுத்தப்படியாக நாலடியார் போற்றப்படுகிறது. திருக்குறளை போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது. வறுமை,செல்வம், செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை முதலியனவும் விளக்கப்பட்டுள்ளது.


PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு - 5.இரட்டைக் காப்பியங்கள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILIRATTAIKKAPPIYANGAL.html


3.நான்மணிக்கடிகை:


               நான்கு  மணிகளைக் கொண்ட மாலை நான்மணிக்கடிகை எனப்படும். ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துக்களைக்  கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்து உள்பட 101 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூலை எழுதியவர் விளம்பி நாகனார் என்னும் புலவராவர்.


4.இன்னா நாற்பது:


                இந்நூலை இயற்றியவர் கபிலர் ஆவார் . தீமை பயப்பன இவை, இவை எனக்கூறும் 40 வெண்பாக்களைக்  கொண்டுள்ளது.


5.இனியவை நாற்பது:


                     மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் பாடியுள்ள இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட 41 பாடல்களைக் கொண்டுள்ளது.


6.கார் நாற்பது:


                     முல்லைத்திணைக்குரிய பெரும் பொழுதாகிய கார் காலம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இதனுடைய ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்பவர் ஆவார் . முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருள் அழகுடன் விளக்கப்படுகின்றன.


7.களவழி நாற்பது:


                     போர்க்களத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்கிக் கூறுவதால் களவழி நாற்பது எனும் பெயர் பெற்றது. இந்நூல் புறப்பொருள் பற்றியது. சேரமன்னனது நண்பராகிய பொய்கையார் என்பார் இந்நூலைப்  பாடி  சோழனை மீட்டதாக கூறப்படுகின்றன.


8.ஐந்திணை ஐம்பது:


                        முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை  என்னும் அன்பின் ஐந்திணைகளுக்குரிய ஐம்பது பாடல்களைக் கொண்ட இந்நூலை எழுதியவர் மாறன் பொறையன் என்பவர் ஆவார் .  ஒவ்வொரு தினையும் பத்துப்  பாடல்களை கொண்டுள்ளது.


9.ஐந்திணை எழுபது:


                      திணைக்குப்  பதினான்கு பாடல்களாக 70 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூலை இயற்றியவர் மூவாதியார் என்னும் புலவர் ஆவார் .


10.திணைமொழி ஐம்பது:


                        இந்நூலினை இயற்றியவர்   சாத்தந்தையர் மகனார் கண்ணஞ்சேந்தனார். திணைக்குப்  பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்களைக்  கொண்டுள்ளது.


11.திணைமாலை நூற்றைம்பது:


                          திணைக்கு முப்பது பாடல்களைக்  கொண்டுள்ளன. இந்நூலைக் கணிமேதாவியார் என்பார் இயற்றினார்.


12.திரிகடுகம்:


                       காப்புச் செய்யுள் உள்பட 101 வெண்பாக்களை உடைய இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட நூலாகும்.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களாலான திரிகடுகம் என்னும் மருந்து உடல் பிணியைப் போக்குதல் போன்று, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துக்களை மனநோயைப் போக்கி மக்களை நல்வழிப்படுத்தும்.   


13.ஆசாரக்கோவை::


                           பெருவாயின் முள்ளியார் என்பவர் இந்நூலை இயற்றினார்.பல்வேறு ஆசாரங்களை தொகுத்துக்  கூறுவதால் ஆசாரக்கோவை எனப் பெயர் பெற்றது. மக்கள்   வாழ்வில் மேற்கொள்ளவேண்டுவன இவை, தள்ளத்தக்கன இவை என்பவற்றை எடுத்துக்கூறும் நூலாகும். உண்ணல் ,உறங்கள், உடுத்தல், நீராடல் பற்றிய விதிகளையும் இந்நூல் கூறுகின்றன.


14.பழமொழி:


              இந்நூலின் ஆசிரியர் மூன்றுறையரையனார்.  இலக்கண இலக்கிய வளம்பெற்று விளங்கும் தமிழ் மொழி கருத்தாழமும், எளிமையும் கொண்ட பழமொழிகள் பலவற்றைக் கொண்டுள்ளது. பழமொழி என்று வழங்கப்பெறும் இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கொண்டுள்ளது. 


15.சிறுபஞ்சமூலம்:


                   இந்நூலின் ஆசிரியர் காரியாசான் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.  ஐந்து வேர்களால் ஆன  மருந்து சிறுபஞ்சமூலம் எனப்படும் மருந்து உடல் பிணியைப்  போக்கி நன்மை செய்தல் போன்று இந்நூலும் மனிதனிடம் உள்ள நோயைய் போக்கி வாழ்வில் உயர்வடைவதற்கான உறுதிப்  பொருள்களைக் கூறுகின்றன.


16.முதுமொழிக் காஞ்சி:


                    இந்நூலின் ஆசிரியர் கூடலூர் கிழார். சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து முதலான பத்து அதிகாரங்களை கொண்ட நூல்.


17.ஏலாதி:   


                    கணிமேதாவியார்  என்பவர் இந்நூலின் ஆசிரியர் ஆவார் . ஏலம், இலவங்கப்பட்டை, நாகசேகரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறுவகைப்  பொருள்களால் ஆன மருந்து ஏலாதி எனப்படும். இந்நூல் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆறு கருத்துக்களைக் கொண்டுள்ளது.


18.இன்னிலை , கைந்நிலை :


                    இன்னிலை நூலின் ஆசிரியர் பொய்கையார். கைந்நிலை நூலின் ஆசிரியர் புள்ளங்காடனார்.


முடிவுரை:

                 இவை அனைத்துமே பதினொண்க்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகுமாம். 


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARU.html


PRAVEEN POORVARDH -கவிதை பூங்கா-2.சுற்றம் தாழல் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/03/praveenpoorvardhsutramthalal.html


PRAVEEN POORVARDH---வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை

https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/praveenpoorvardhvalikutrathaiporutharulavendiyavai.html



  


 



                   











லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு