வெள்ளி, 19 நவம்பர், 2021

Praveen Poorvardh-Kavidhai Poonga-பெரியோரைத் துணைக் கோடல்


PRAVEEN POORVARDH


 திருக்குறள் 

                                             பொருட்பால்

பெரியோரைத் துணைக் கோடல் :


https://todayisagooddayhindi.blogspot.com/2022/04/thirukkural.html


                        பொருட்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு அதிகாரமே பெரியோரை துணைக்கோடல் .அதில் உள்ள  கருத்துக்களை இங்கு காண்போம் .


பெரியோரை துணைக் கோடல் கருத்துக்கள்:






  •                 அறத்தை அறிந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை கொள்ளும் வகையறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.


  •                வந்துள்ள துன்பத்தை போக்கி மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோரை துணையாக கொள்ள வேண்டும்.


  •                துறை பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றை செய்து  அவரை தமக்கு உரியவராய் செய்து  கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.


  •              அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு அவர் காட்டும் வழியில் நடப்பது,வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும் .


  •             தக்க வழிகளை ஆராய்ந்து சொல்லும் அறிஞர்களை உலகம் கண்ணாகப் பெற்று நடப்பதால் , மன்னனும் அத்தகையவரை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.


  •              தகுதி மிக்க பெரியோரை நட்பாகக் கொண்டு அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.


PRAVEEN POORVARDH -கவிதைப்  பூங்கா-சிலப்பதிகாரம்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHKAVIDHAIPOONGASILAPPADHIGARAM.html


  •                கண்டித்து அறிவுரை கூறவல்ல பெரியோரின் துணையுடன் நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் யார் இருக்கிறார்கள்.


  •                 கண்டித்து அறிவுரை கூ றவல்ல பெரியோர்களின் துணை இல்லாதவன் பகைவன்  இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.


  •               கட்டடத்தை தாங்கும்  தூண் போலத் தம்மை தாங்கி நிற்கக்கூடிய துணையில்லாதவர்களின் நிலை முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையை போன்றது.


  •               நல்லவர்களாகிய பெரியோரின் தொடர்பை நட்பை பெறாமல் அதை விட்டு விடுவது, தனியனாய் நின்று ,பலரோடும் பகை கொள்வதைக்  காட்டிலும் பல பத்து மடங்கு தீமை ஆகும்.


                  இவ்வாறாக பெரியோரை துணை கொள்வதால் நம் வாழ்க்கைக்கு எத்துனை சிறப்புகள் மற்றும் நல்வழிக்கும் உறுதுணையாக அமைவதை பற்றியும்  இந்த அதிகாரத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


THIRUKKURAL


https://todayisagooddayhindi.blogspot.com/2022/03/praveenpoorvardhsutramthalal.html


TAMIL ILAKKIYA VARALARU


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARUSANGAKALAMORUPORKALAM.html


   valivadhaipadalam


https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/praveenpoorvardhvalikutrathaiporutharulavendiyavai.html                 


லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு