PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-சங்ககாலம் ஒரு பொற்காலம்
PRAVEEN POORVARDH
தமிழ் இலக்கிய வரலாறு
சங்ககாலம் ஒரு பொற்காலம்
சங்ககாலம் ஒரு பொற்காலம் :
முன்னுரை:
அரசர்,அந்தணர்,வேளாளர்,வணிகர்,பாணர் முதலான பலரும் 'புலமை மிகுந்த சிறந்த புலவராய் விளங்கிய காலம் சங்ககாலமாகும். அரசர்கள் அறிவில் சிறந்த புலவர்கள் கூறும் சொல் கேட்டு வாழ்ந்தனர். புலவர்கள் மன்னரையும் இடித்துரைத்து நல்வழிப்படுத்தினர். அப்படிப்பட்ட சங்ககாலத்தின் புலவர்கள்,அரசர்கள்,விழாக்கள், மக்களின் வாழ்க்கை மற்றும் சங்ககாலம் ஒரு பொற்காலமாக விளங்கியதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அரசர்கள் :
தமிழகத்து நகரங்களில் 'அறங்கூறவையம் ' எனப்படும் நீதிமன்றங்கள் இருந்தன. நாட்டிற்கு மன்னவன் உயிர்போன்றவன் ஆவான் . மன்னரும் சூரியனை ஒத்த வீரமும் ,நிலவினை போன்ற தன்மையும் ,மழை போன்ற வண்மையும் கொண்டு நாட்டினை நன்முறையில் ஆட்சி செய்து வந்தனர்.புலவர்கள் சொல்படி கேட்டு ஆட்சி செய்தனர்.
புலவர்கள்:
தமிழ்வல்ல புலவரைத் தம்மோடு ஒப்பவைத்து நண்பராகக் கொண்டு வாழ்ந்தனர். தமிழ்வேந்தர். கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையார்க்கும் இருந்த நட்பினை புறநானுறு காட்டுகிறது. இளம்போதியார், உலோச்சனார், நக்கீரர் முதலான சமயப் புலவரும் வாழ்ந்த சங்ககாலம் சமயப்பொறை மிகுந்த காலமாகும்.ஒளவையார், வெள்ளிவீதியார், கவாற்பெண்டு ,பொன்முடியார் போன்ற பெண்பாற்புலவர் பலர் சங்க காலத்தில் வாழ்ந்தனர்.
"புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவோ"
என்று காவற்பெண்டு கூறுவது பழந்தமிழ் பெண்டிரின் வீரத்தினை நன்கு விளக்கும்.
PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-4.பதினொண்கீழ்க்கணக்கு நூல்கள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEEN%20POORVARDH-%20%20-4.%20%20.html
வாழ்க்கை :
தமிழர்கள் தங்கள் வாழ்வினை அகம்,புறம்,என இரு கூறாக பிரித்து இனிது வாழ்ந்தனர். நிலத்தினையும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகையாக பிரித்து வாழ்ந்த திறம் போற்றுதற்குரியது .அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு தனி நாடகத்தை காட்டுகிறது.சங்ககால மக்களின் உயர்ந்த நோக்கினை அக்கால இலக்கியங்களில் காணலாம். பலவழிகள் கூடிய தெருக்களில் செல்வோர் தாம் செல்லும் ஊருக்குரிய வழிதெரியாமல் போக கூடாது என்பதற்காக அவை சந்திக்கும் இடத்தில் திசை காட்டும் கல்லை நிறுத்தி ,அதனில் ஊர்ப்பேரையும் எழுதி இருந்தனர்.
இந்த செய்தியை மலைப்பாடுகடாத்தில் அறியலாம்.
வாணிபம்:
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பரந்த உள்ளம் கொண்ட வாழ்ந்த சங்ககாலத்தில் வாணிகம் செழித்தோங்கியது. தமிழர் கடல் கடந்து பிற நாடுகளுக்கு சென்று வாணிபத்தை பெருக்கினர்.வணிகரும் கொள்வதும் மிகை கொளாது ,கொடுப்பதும் குறை கொடாது வாழ்ந்தனர் என்பதை பட்டினப்பாலை பகருகின்றன.
விழாக்கள்:
கொற்றவையை வழிபடும் வெற்றிவிழா,திருவோண விழா,கார்த்திகை விளக்கீடு, பிறந்தநாள் விழா, முடிசூட்டு விழா போன்ற பல விழாக்கள் சங்கக்காலத்தே நடைபெற்றன.
நூல்கள்:
தமிழர்கள் தாம் பெற்ற இன்பத்தினைப் பிறரும் அனுபவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தினை ஆற்றுப்படை நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
திசைகாட்டும் கற்கள் நிறுத்தி,அதனில் ஊர்ப்பேரையும் எழுதி வைத்திருந்தனர் என்பதை மலைப்படுகடாத்தில் காணலாம்.
இவ்வாறாக பலதரப்பட்ட நூல்கள் பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்டன.
முடிவுரை
இவ்வாறாக சிறப்புகளையும்,பெருமைகளையும்,கொண்ட சங்க காலம் ஒரு பொற்காலமே என்பதை உணரலாம்.
லேபிள்கள்: PRAVEEN POORVARDH-TAMIL ILAKIYA VARALARU


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு