PRAVESHIKA-தமிழ் பொழில் -2.இனியவை நாற்பது
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVESHIKA
தமிழ் பொழில் -2
2.இனியவை நாற்பது
இனியவை நாற்பது கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:
முன்னுரை:
பதினொண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டில் "நானாற்பது" என்று கூறப்படுவன கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கும் ஆகும். இந்த கட்டுரையில் நாம் இனியவை நாற்பது பற்றி பார்க்கலாம்.
இனியவை நாற்பது:
நாம் இனிது வாழ நம் முன்னோர்கள் பல நல்ல செயதிகளை பாடல்களாக தொகுத்து உள்ளனர். அவர்கள் நாம் கொள்ள வேண்டியவை இவை, தள்ள வேண்டியவை இவை என தொகுத்து கூறியுள்ளனர். அவ்வாறு நாம் கொள்ள வேண்டுவனவற்றைக் கூறும் நூல்களுள் ஒன்று தான் "இனியவை நாற்பது" கடவுள் வாழ்த்தையும் சேர்த்து இந்நூல் 41 பாடல்களையும் கொண்டுள்ளது.
நூல் ஆசிரியர்:
மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்பவர் இந்நூலின் ஆசிரியர் ஆவார். இவருடைய காலம் கி .பி இரண்டாம் நூற்றாண்டு. இவர் வேத சமயத்தை சார்ந்தவர் எனவும் கூறுவர்.
இந்நூல் கூறும் ஒரு சில உண்மைகளை இங்கே காணலாம்.
2.மானம் இழந்த பின் வாழாமை:
மானம் என்பதன் பொருள் தன் நிலையில் தாழாமையும், தாழ்வு வந்தபொழுது உயிர் வாழாமையும் ஆகும்.ஒரு செயல் எத்துனை இன்றியமையாததாக இருப்பினும், அச்செயலைச் செய்வதால் மானத்தை இழக்கும் நிலை ஏற்படுமாயின் அதனை செய்யாமல் மானத்தை காத்தல் வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக சேரமன்னன் ஒருவனது வரலாற்றை காணலாம்.
சோழன் கோச்செங்கணான் என்பவருக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே போர் மூண்டது. இரு பெரும் படையினருக்கும் இடையே காண்பவர் நெஞ்சு நடுங்கும் வகையில் போரிட்டன. நெடுநேரம் நடந்த போரில் சேரர் படை தோல்வியை தழுவியது. சோழன் செங்கணான் சேரமன்னனை குடவாயில் கோட்டத்தில் சிறை வைத்தான்.
தனக்கு மட்டும் இல்லாமல் சேரகுடிக்கே ஏற்பட்ட பழியினை நினைத்து அவன் மனம் கலங்கினான். அவன் தண்ணீர் வேட்கை காரணமாக கேட்ட நீரை காலம் தாழ்த்தி அவமதிப்போடு கொடுக்கப்பட்ட காரணத்தினால் அதை வாங்கி உண்ணாது உயிர் துறந்தான் சேரமன்னன்.
மானம் காத்து உயிர் துறந்த சேரமன்னனின் செயல் இரும்பொறை மரபினருக்கே பெருமை அளிக்கும் ஒன்று ஆகும். சேரனின் இச்செயல் மானவீரம் என போற்றப்படும்.
3.ஏவது மாறா இளங்கிளமை முன் இனிது:
தாய் தந்தை இடும் கட்டளையை மறுக்காது இன்முகத்துடன் செய்து உதவும் மக்களைப் பெற்றிருத்தல் இனிதாகும்.
ஒருமுறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளை காண அவர் இல்லத்திற்கு சென்றார். அவரை நன்கு உபசரித்து ஆசனத்தில் அமரவைத்து பூசனைகள் செய்தார்.
அவருக்கு உணவு அளித்து உபசரிப்பதற்காக தன் மூத்த மகனான
திருநாவுக்கரசரை வாழை இலை அரிந்து வர அனுப்பினார்.
அம்மைந்தனும்
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப்பெற்றேன் என உள்ளம் நிறைந்த மகிழ்வோடு விரைந்து கொல்லையில் வாழை இலையினை அரியும் பொது அவன் கையில் பாம்பு தீண்டியது. அவ்வாறு பாம்பு தீண்டிய வேகத்தால் நான் கீழே விழுந்து இறப்பதற்கு முன்பு இலையை சென்று கொடுப்பேன். என்று கூறிக்கொண்டு விரைந்து இல்லத்திற்கு சென்று வலை இலையை கொடுத்த மாத்திரத்தில் உயிர் இழந்தான்.
அப்போது உண்மையை உணர்ந்த திருநாவுக்கரசர் "ஒன்றுகொலம்" என தொடங்கும் திருப்பதிகம் பட இறை அருளால் திருநாவுக்கரசு உயிர் பெற்றான்.
4.நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே :
ஒருவர் செய்த நன்றியினை எந்நாளும் மறத்தல் கூடாது என உலகப் பொதுமறை திருக்குறள் எடுத்தியம்பும். அடுத்தவர் செய்த உதவியை நினைந்து வாழ்தல் இனிதாகும் என்று கூற வரும் இனியவை நாற்பது. நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே என கூறுகின்றது.
நன்றி மறவா சிறப்பினைப் பாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக அறியலாம்.
கர்ணன் தன் மகனே என்பதை அறிந்து கொண்ட தாய் குந்தி தேவி கர்ணனை நோக்கி நீ உனது தம்பியர் பாண்டவர்கள் ஓடு சேர்ந்து இனிது வாழலாம் என்று கூறினார். நீ அவர்கள் துணை கொண்டு நாட்டை சிறப்பாக ஆளலாம். என கூறினார்.
ஆனால் கர்ணன் தன் தாயிடம் தன்னை ஆதரித்து தன்னோடு உணவு உண்ட தன்னை அங்கதநாட்டிற்கு அரசனாக்கிய துரியோதனனை விட்டு பிரிந்து வருவது என்பது இயலாத ஒன்று என கூறுகிறான்.
துரியோதனனுக்காக போர்க்களத்திற்கு சென்று என் உயிரைக் கொடுத்துச் செஞ்சொற்றுக்கடன் கழித்தலே எனக்கு புகழும், கருமமும், தருமமும் ஆகும் என்றான். இதன் மூலம் நாம் நன்றி மறவா பண்பினை உணரலாம்.
முடிவுரை:
இவ்வாறாக நீதியும், நேர்மையும் நாட்டில் நிலவ, மக்கள் தங்கள் வாழ்க்கையில் கொள்ளவேண்டிய பல அரிய நல்லவைகளை இனியவை நாற்பது நூல் எடுத்துக்கூறுகின்றது. இவைகளை கடைபிடித்து நாம் வாழ்வில் இன்புற்று வாழ்வோமாக..
PRAVESHIKA-TAMIL POZHIL-1-Kadavul Valthu
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/praveshika-tamil-pozhil.html
PRAVESHIKA --தமிழ்ப் பொழில்-2--3.புலமைப் பெண்டிர்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA%20--%20%20-2--3.%20%20.html
லேபிள்கள்: PRAVESHIKA-TAMIL POZHIL-2


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு