வியாழன், 6 ஜனவரி, 2022

PRAVEEN POORVARDH--வாலிவதைப்படலம்--வாலி இராமனை இகழ்ந்து கூறும் மொழிகள்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

வாலிவதைப்படலம் 

வாலி இராமனை இகழ்ந்து கூறும் மொழிகளைத் தொகுத்து எழுதுக:


முன்னுரை:

                       

                   இராமபிரான் அவர்கள் அயோத்தியாவிலிருந்து தன்னுடைய தந்தையின் ஆணைக்கிணங்க வனவாசம் சென்றார். அந்த சமயத்தில் அவருக்கு குரங்கின தலைவன் ஆன சுக்கிரவன் உடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அவனுக்கு உதுவுவதற்காக வாலியை எதிர்த்து போரிட்டார். அப்போது வாலி இராமபிரானை இகழ்ந்து கூறியவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.

                 

வாலி :


                  வானரமான வாலி கிட்கிந்தையின் அரசன். சுக்கிரவனின் அண்ணன் . எதிரில் நிற்கும் எதிரியின் வீரத்தில் பாதி தனக்கு சேருமாறு வரம் பெற்றவன். தாரை இவனது மனைவி. அங்கதன் இவர்களது மகன். 



வாலிக்கும்,  சுக்கிரீவனுக்கும்  இடையே போர்:


 
                 இராமன் சுக்கிரவனிடம் சென்று நீ கொடிப்பூ அணிந்து கொண்டு வாலியுடன் போர் புரியுமாறு சொல்ல, அவ்வாறே சுக்கிரீவனும் வாலியுடன் போர் புரிந்தான். வாலி சுக்கிரீவனை கொல்ல முயன்ற சமயத்தில் இராமன்  வாலியின் மீது அம்பை செலுத்த வாலி மண்ணில் சரிந்தான். வாலி தன் மார்பில் தோய்த்த அம்பில் இராமபிரானின் நாமத்தை கண்டு மிகவும் கோவம் கொண்டு இராமனை பலவாறு இகழ்ந்தான் .


வாலி ராமனை இகழ்ந்து கூறும் மொழிகள்:


                              வாலி இராமபிரானை நோக்கி, ஓவியத்தில் எழுதமுடியாத அழகு பெற்றவனே.. உன் குலத்தில் பிறந்த அனைவருக்கும் அரசதருமம் உரிய பொருளாக இருக்கும். நீ மனைவியை பிரிந்த துயரின் காரணத்தால் தடுமாறி  ஆலோசிக்காமல் என்மீது அம்பை எய்தாயோ என வினவினான்..


                           அரக்கர் உனக்கு தீமை செய்தால் அதனைப்  போக்க குரங்கினத் தலைவனான என்னை கொல்ல வேண்டும் என உங்கள் மனுதருமத்தில் கூறப்பட்டுள்ளதா? நீயே இப்படிப்பட்ட பழியை ஏற்றுக்கொண்டால் இந்த உலகத்தில் புகழ் பெற்று வாழக்கூடியவர் யார்?


                             கருணையின் வள்ளலான நீ இவ்வுலகில் பிறந்ததனால் அறமே நிகழ வேண்டிய இக்காலத்தில் கலி யுகம் தொடங்கி தீமையை தர தொடங்கி விட்டதா? இந்த உலகத்தில் வலிமை குறைந்த மக்கள் மட்டுமே அறமும், ஒழுக்கமும் கொண்டு வாழ வேண்டுமா?


                         இந்த உலகில் வீரர்களாக உள்ளவர்கள் செய்யும் செயல்கள் ஆண்மைக்குரியதாகி விட்டது. பழமையான நன்னூல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனான நீ என்னிடம் இவ்வாறான முறையற்ற செயலை செய்தாய் அப்படி இருக்க நீ இலங்கை வேந்தன் இராவணனிடம் செய்த முறையற்ற செயலுக்காக எவ்வாறு கோபம் கொள்ள முடியும்? 


                          இராம! உன்னுடைய இரண்டு உறவினர்கள் இருவர் போர் புரியும் போது நீ ஒருவர் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவருக்கு மட்டும் உதவி செய்வது அறமான செயலகுமா என்றான்.


                               இராமபிரானே! நான் உன்னுடைய பகைவன் அல்ல எனும் பட்சத்தில் நீ பெருமைக்குணம் நீங்கி அன்பின்றி மறைந்து இருந்து பாணத்தால் என்னை அடித்த செயல் வீரம் ஆகாது. அறநூல் முறையும் ஆகாது. 
 
                          இம்மை மறுமைகளை எண்ணி பார்த்து, எல்லாரிடமும் சமமாக பழகுவதே அறத்தை காக்கும் செயலாகும். பழிபாவங்கள் தன் பக்கம் வராதபடி காத்துக்கொள்ளமால் ஒருவன் பக்கம் மட்டும் சார்ந்து உதவி செய்வது எப்படி அறம் ஆகும்?


                   இராவணன் கவர்ந்து சென்ற சீதையை மீட்பதற்காக யானை பலம் கொண்ட என்னை துணையாக கொள்ளாமல் முயலுக்கு இணையான சுக்கிரவனை பற்றுதல் சிறந்த முயற்சியாகுமா?


                        நிலவுக்கு கரிய நிறம் பொருந்திய மாசு உள்ளது.  சூரிய வம்சத்தில் நீ பிறந்தமையால் ஒரு நிலையான மாசு உண்டாகி விட்டது.


                     வலிய வந்து ஒருவன் என்னை போருக்கு அழைக்க அவனுடன் போரிடுவதற்காக வந்த என்னை மறைந்து இருந்து என் உயிரை கவர்ந்த நீ இப்பொழுது நான் விழுந்து கிடக்கும் இந்த இடத்தில் நாணமின்றி ஆண்சிங்கம் போல நிற்கின்றாய்.


                     நீ அறநூல்களின் முறையையும் உங்கள் குலத்து சான்றோர்களின் இயல்பையும் நல்லொழுக்கத்தையும் பாதுகாக்காமல் என்னை கொன்றாய். அதனால் அரச நீதி என்ற பாதுகாவலையே அழித்துவிட்டாய்.


                       உன் மனைவியை இராவணன் கவர்ந்து சென்றுவிட்டான் அவனை அழிக்காமல் என்னை அம்பு எய்து கொன்றதால் உன் கையில் உள்ள பெரிய வில் உன் செயலை பழிப்பதற்கான காரணம் ஆகிவிட்டது. நீ வில் வித்தை கற்று கொண்டது ஆயதமில்லாத எதிரியின் மீது அம்பு எய்து கொல்வதற்குத் தானா எனக் கேட்டான்.
                    

முடிவுரை:


   
              இவ்வாறாக வாலி தன் கண்களில் பொறி பறக்க மிகுந்த சினம் கொண்டு கொடிய வார்த்தைகளை கூறி இராமபிரானை இகழ்ந்தான்.  





      












லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு