செவ்வாய், 28 டிசம்பர், 2021

PRAVEEN POORVARDH--தமிழ் இலக்கிய வரலாறு --6.பன்னிரு திருமுறைகள்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

தமிழ் இலக்கிய வரலாறு
 
6.பன்னிரு திருமுறைகள் 


முன்னுரை:


                     சைவ சமயத்தைச் சார்ந்த பன்னிரு திருமுறைகளுள்  ஒரு சில சங்கமருவிய காலத்தையும் ஒரு சில  சோழர்காலத்தையம் சார்ந்தது.இங்கு முறை என்பது நூல் என்று பொருள் படும். அவற்றை பற்றி இங்கு காணலாம்.


பன்னிரு திருமுறைகளின் வகைகள்: 


முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகள்:


                           இந்த மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடப்பட்டவையாகும். இவர் சீர்காழி எனும் ஊரில் பிறந்தவர்.  இவர் பாடியவற்றில் நமக்கு கிடைத்தவை 384 பதிகங்களாகும். இவரது பாடல்கள் இயற்கை நலம் வாய்ந்தவை. ஆளுடைய பிள்ளையார், காழியர்கோன்  எனவும் அழைக்கப்படுகிறார். 


நான்காம்,ஐந்தாம்,ஆறாம் திருமுறைகள்:


                        இந்த திருமுறைகளை இயற்றியவர் திருநாவுக்கரசர். இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழனார், மதினியார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரது தமக்கையார் திலகவாதியார் ஆவர். அப்பர், வாகீசர் இவரது வேறு பெயர்கள் ஆகும். இவர் பாடியானவற்றில்  இன்று கிடைப்பன 311 பதிகங்கள்  ஆகும்.


ஏழாந் திருமுறை:


                         திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார், இசை ஞானியார் எனும் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் சுந்தரமூர்த்திகள் அவர்கள். நம்பியாரூரர், தம்பிரான்தோழர், வன்றொண்டர் எனும் பல பெயர்களை பெற்றுள்ளார். இவர் பாடியது ஏழாந் திருமுறை ஆகும். 

PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --7.ஆழ்வார்கள் பன்னிருவர்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/PRAVEEN%20POORVARDH%20--%20%20%20--7.%20.html

எட்டாம் திருமுறை:


                    பாண்டி  நாட்டில் திருவாதவூர் எனும் திருத்தலத்தில் தோன்றியவர் மாணிக்கவாசகர். "தென்னவன் பிரமராயன்" என சிறப்பிக்க பெற்றவர். இவர் இயற்றியவையே எட்டாம் திருமுறை ஆகும்.  இவருடைய படைப்பான "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்"  என்னும் வழக்கு திருவாசகத்தின் பெருமையை விளக்கும். 


ஒன்பதாம் திருமுறை:


                      திருமாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், கண்டராதித்தர், காடவநம்பி உள்ளிட்ட ஒன்பது சான்றோர்களால் பாடிய திருவிசைப்பாக்கள் ஒன்பதாம் திருமுறை ஆகும்.


பத்தாந் திருமுறை:


                     திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாந் திருமுறை ஆகும். இந்நூல் ஒன்பது தந்திரங்களையும், 3047 பாடல்களையும்  கொண்டுள்ளது. சைவ சித்தாந்தத்தின் கொள்கைகளை உணர்த்தும் முதல் நூல் திருமந்திரம் என கூறுவர். 


பதினோராந் திருமுறை:

  

                  திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நம்பியாண்டார் நம்பி, நக்கீரர்  போன்ற பன்னிருவர்கள் பாடிய அருட்பாக்கள் பதினோராந்  திருமுறை ஆகும்.


பன்னிரெண்டாம் திருமுறை:


                     சிவனடியார்களின் வரலாற்றை இனிது விளக்கும்  'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் பாடப்பட்டதாகும். இவருடைய இயற்பெயர் அருள் மொழித்தேவர் ஆகும். நடராசப்பெருமானே  "உலகெலாம்" என அடி எடுத்துக் கொடுக்க இந்நூலை பாடினார். பல்வேறு காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் இந்நூலின் அடிப்படைக்கு கருத்து  "அன்பே சிவம்" என்பதாகும். 


முடிவுரை:


                  இவை அனைத்துமே பன்னிரு திருமுறைகளின் வகைகள் ஆகும்.


                        







 

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு