VISHARAD POORVARDH- இலக்கிய கனிகள் -3.இலக்கிய கரும்பு
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
VISHARAD POORVARDH
இலக்கிய கனிகள்
3.இலக்கிய கரும்பு
இலக்கிய கரும்பின் இனிமை பற்றி கட்டுரை எழுதுக:
(அ)
கரும்பு பற்றி இலக்கியங்கள் யாது கூறுகின்றன?
முன்னுரை:
நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்து விட்டு போன மிக பெரிய கருவூலம் இலக்கியம். இலக்கியங்களில் பலதரப்பட்ட விஷயங்களை பற்றியும் பேசப்பட்டுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சியினது முன்னோர் கரும்பினை உலகிற்குக் கொணர்ந்து தந்ததாகப் புறநானூறு கூறுகின்றது. அவ்வாறு இலக்கியங்களில் கரும்பை பற்றி கூறப்பட்டுள்ள கருத்துக்களை இங்கு காணலாம்.
திருக்குறளில் கரும்பு:
கயவரின் இயல்பினை கட்ட திருவள்ளுவர் கரும்பினை உவமையாக கூறுகிறார். வறியவர்கள் தங்கள் குறையினை கூறி வரும் போது இனிது பேசி, தம்மால் பேசி இயன்ற உதவியினை செய்யவர். ஆனால், கீழானோர் யாது கூறியும் கேளாது வாளா இருப்பர். ஆலையிலிட்ட பிறகு கரும்பு இனிய சாற்றினைத் தருவது போல, நன்கு ஒறுக்கப்பட்ட பின்னரே கீழோர் பயன்படுவர். இந்த கருத்தை திருக்குறளில்
"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்"
விளக்குகிறது.
VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/vishardpoorvardhthilagavadhiyar.html
நாலடியார்:
நாலடியார் கரும்பினை உவமையாக கொண்டு நமக்கு பல உண்மைகளை உணர்த்துகிறது. அறிவுடைய சான்றோரது நட்பு கரும்பினை நுனியிலிருந்து உண்பதை போல வாழ்க்கைக்கு இனிமையானதாக இருக்கும்.ஏனெனில் சான்றோர் கூறும் நல்லுரை முதலில் கசந்து பின் நன்மை பயக்கும். ஆனால் தீயோர் நட்பு முதலில் இனித்து பின் கசக்கும். இது கரும்பினை அடியிலிருந்து சுவைத்தலை போன்றதாகும்.
திருநாவுக்கரசர்:
"ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் காண்" எனவும், "கரும்பினில் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே" எனவும் இறைவனை பாடி புகழ்கிறார்.
திருபுறம்பயத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் திருநாமம் "கரும்படுசொல்லம்மை" என்பதாகும்.
மன்மதன்:
மன்மதன் "கரும்பு வில்லி" என இலக்கியங்களில் பேசப்படுகின்றன. கரும்பினை வில்லாகவும், மலர்களை அம்பாகவும் கொண்டு இவன் காதலரைப் படுத்தும் பாட்டினை காணலாம். கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் தென்றலே தேராகும். மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்டுள்ளான். அம்மலர்கள் செய்யும் செயல்களை இந்த பாடலில் காணலாம்.
"நினைக்கும் அரவிந்தம் நீலபசலை மாம்பூ
அனைத்துணர்வும் நீக்கும் அசோகு
கொல்லும் மதன் அம்பின் குணம்"
கொங்குவேளிரின் பெருங்காதை :
கொங்குவேளிர் என்பர் தாம் பாடிய பெருங்காதை என்னும் நூலில் கள்ளின் வகைகள் பலவற்றைக் கூறுகின்றார். காஞ்சித்தெளிவு, புதுமலர் வேரி , தெங்கின் ஊறல், கரும்பின் ஊறல் எனவும் ஒன்றினை காட்டுகிறார். இதில் கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்படும் கள் கரும்பின் ஊறல் எனப்படும்.
அழகிய சொக்கநாதர் எனும் புலவர் மயிலையும், கரும்பினையும் வைத்து இரட்டுற மொழிதலாக பாடல் பாடியுள்ளார். கரும்பின் உடலில் கணு உள்ளது. மயிலுக்கும் தோகையில் கண் உள்ளது. காற்று வீசுவதால் கரும்பு அசைந்தாடுகிறது. மயிலும் மலைக்கண்டு களிநடம் புரிகிறது. ஆகவே கரும்பும், மயிலும் ஒப்பாகும்.
திருமுனைப்பாடி நாட்டுவளம் பேசும் சேக்கிழார் பெருமான் ஆறுபோலப் பெருகிவரும் கரும்பின் சாறு மடையினை உடைப்பதாகவும், அவ்வெள்ளத்தைக் கரும்பின் கட்டியால் அடைப்பதாகவும் பேசுகின்றார்.
சிலப்பதிகாரத்தில் புதுமணம் புரிந்து கொண்ட கோவலன்,
"மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே"
என்று கண்ணகியை பாராட்டும் திறத்தினை காணலாம்.
முடிவுரை:
இவ்வாறு கரும்பு தமிழ் இலக்கியங்களில் பலவாறு பேசப்படுதலை ஓரளவு இக்கட்டுரையின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இவைகள் அந்த கரும்பினை சுவைப்பது போல இன்சுவை தரும்.
லேபிள்கள்: Visharad poorvardh-Ilakkiya kanigal


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு