PRAVESHIKA -தமிழ் பொழில்-1 -10.செல்வச் சிறுமியர் களிப்பு
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVESHIKA
தமிழ் பொழில்-1
10.செல்வச் சிறுமியர் களிப்பு
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
செல்வச் சிறுமியர் களிப்பைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எவ்வாறு வர்ணிக்கிறார்?
முன்னுரை:
'கவிமணி' என சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தால் பட்டம் பெற்ற தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட செல்வச்சிறுமியர் என்னும் கவிதை தொகுப்பின் கருத்துக்களை இங்கு காணலாம். குழந்தைப் பாடல்களே இவரது சிறப்பினை வெளிப்படுத்துவனவாகும்.
ஆசிரியர் குறிப்பு:
நாஞ்சில் நாட்டை சேர்ந்த தேரூரில் சிவதாணுப்பிள்ளை , ஆதிலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
1940 ஆம் ஆண்டு கவிமணி என பட்டம் பெற்றவர்.
இயற்றிய நூல்கள்:
மலரும் மாலையும், மருமக்கள் வழி , மான்மியம், ஆசியஜோதி, உமர்கயாம் பாடல்கள் முதிலியன இவரது படைப்புகள் ஆகும். இறுதி இரண்டு நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகும்.
''கவிமணியின் உரைமணிகள்" நூல் 1959 இல் வெளிவந்தது.
செல்வச்சிறுமியரின் களிப்பு :
செல்வச்சிறுமியர் தினம் தினம் நல்ல சுவையான உணவுகளையே உண்பர். நல்ல பழுத்த பழத்தையே உண்பர். பல வகையான பானகத்தை அருந்தி மகிழ்வர். மணக்கும் சந்தனத்தை பூசி மகிழ்வர்.
காலத்திற்கேற்ப பிடித்த உடையை அணிந்து மகிழ்வர். தலைவாரி பூச்சூட்டி மகிழ்வர். தோழியரோடு கூடி விளையாடுவர். ஓடி ஒளிந்து விளையாடுவர். கண்பொத்தி விளையாடுவர். கைகொட்டி சிரிப்பார்.கும்மி அடிப்பார்.
ஊஞ்சல் ஆடுவர் , படுவர். சிறு மணல் வீடு கட்டி மகிழ்வர். சித்திரம் வரைவர். நாளும் பசும்பால் அருந்துவர். தமக்கு இணையானவர் யாரும் இன்றிச் செல்வச் சிறப்பாக வாழ்வர்.
இவ்வாறாக செல்வச்சிறுமிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikanammakkalkavingargandhipadippinai.html
ஏழைச் சிறுமியரின் மனப்புழக்கம் :
ஏழைச் சிறுமிகள் நல்ல உணவுகளை உண்டதில்லை. வயிறு நிறைய உண்பதில்லை. பசியால் அனுதினமும் வாடுவார். அன்னப்பால் எனப்படும் கஞ்சியைக் கூட அவர்கள் காணாதவர்கள்.
செல்வச்சிறுமிகள் இட்லி ஐந்தாறு தின்றோம் என்று கூறினால அவற்றை எலி என நினைத்துக்கொண்டு நாங்கள் பட்டினியாகக் இருந்து இறந்தாலும் அத்தகைய பாவத்தை செய்ய மாட்டோம் எனக் கூறுவர். அவர்கள் தேயிலை என்றால் அது தேக்கிலையா என கேட்பர். காப்பியை கண்ணால் கண்டதில்லை.
ஆனைக் கொம்பன் என்ற அரிசி சாதத்தை பற்றி செல்வசிறுமிகள் கூறினால் அதை நம்ப மாட்டோம் என கூறுவர். அவர்கள் சோப்பு என்று கூறினால் அது என்ன சுட்டு தின்னும் கிழங்கா? என கேட்பர். அவர்களுடைய ஒருமுழக் கந்தல் துணியில் கூட ஆயிரம் கிழிசல் இருக்கும். அழுக்கைப் போக்க நீரில் கசக்கினால் கூட அந்த துணி பஞ்சு பஞ்சாய் பறந்து விடும்.
அவர்களுடைய கூந்தல் ஈச்சஞ்செடி போலிருக்கும். தலையில் தினமும் ஈரும், பேனும் இருக்கும். மாதத்தில் மூன்று மாதம் கூட எண்ணெய் போடாதவர்கள். தம் உடலில் சொரியும், புண்ணும் தோன்றும் என்று கூறுவர்.
PRAVESHIKA தமிழ்பொழில்-முத்தபள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் உரையாடல
https://todayisagooddayhindi.blogspot.com/2022/11/PRAVESHIKA%20%20-%20.html
அவற்றிற்கு போட மருந்து கூட இல்லை, நல்ல உறக்கம் இல்லை என்பர். தம் படும் துன்பத்தை யார் அறிவார்கள் என மனம் ஏங்குவர். இவ்வாறாக ஏழைச் சிறுமிகள் தங்களுடைய மனப்புழுக்கத்தை நினைத்து ஏங்குவர்.
முடிவுரை:
இவ்வாறாக கவிஞர் அவர்கள் செல்வச் சிறுமிகள் களிப்பு மற்றும் ஏழை சிறுமிகளின் மனப்புழுக்கத்தின் வேறுபாட்டை அவர்களுடைய கருத்துக்களாக இந்த கவிதையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikanammakkalkavingargandhipadippinai.html
PRAVESHIKA---தமிழ் பொழில்-1---8.முரசு https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikamurasubharathiyar.html
லேபிள்கள்: Praveshika-Tamil Pozhil-1


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு