PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVESHIKA
தமிழ் பொழில்-1
11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
உத்தமர் காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கு ஒரு படிப்பினை என்பதை நாமக்கல் கவிஞர் எங்ஙனம் வலியுறுத்துகின்றார் ?
முன்னுரை:
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர், 19, 1888 இல் பிறந்தவர் கவிஞர் இராமலிங்கம் அவர்கள். இவர் மிகச்சிறந்த கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், சமூக சீர்த்தீர்த்தவாதி. இவர் தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞராவார். பத்ம பூஷன் விருதும் பெற்றவர். மலைக்கள்ளன், அவனும் அவளும், நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறள் புதுஉரை, கவிதை தொகுப்பு, கட்டுரைகள் போன்றவற்றை படைத்துள்ளார். இவர் எழுதிய காந்தியடிகளின் வாழ்கை நம் வாழ்க்கைக்கு ஒரு படிப்பினை என்ற கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.
காந்தியடிகளின் வாழ்க்கை படிப்பினை:
நாம் காந்தியடிகளை போல அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். கடவுளை வணங்க வேண்டும். அவரை போல கற்றாரா உலவ வேண்டும். களைப்பு தீர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். கண்டதை எல்லாம் உண்ணாமல் அளவாக உண்ண வேண்டும்.
ஒழுங்காகத் திட்டம் போட்டு கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். சோம்பலை துறக்க வேண்டும். சொன்ன சொல்லை காக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் சமம் என எண்ண வேண்டும். யாரை இருந்தாலும் இன்முகமாய் பழகுகின்ற எளிமை வேண்டும். குற்றம் செய்தால் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். பிறர் செய்யும் தவறை மன்னிக்கும் குணம் வேண்டும்.
வாழ்வில் உண்மையையும், சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். உழைப்பின்றி சுகம் விரும்புவது ஊனம் என உணர்ந்து செயல் பட வேண்டும்.
துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு ஓடிச்சென்று உதவ வேண்டும். கைத்தொழிலின் பெருமையை உணர்ந்து காந்தியை போல கைராட்டை நூற்க வேண்டும். சமரச உணர்வு வேண்டும்.
தன் இனமே மேல் என்ற செருக்கை தவிர்க்க வேண்டும். சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். நெறிதவறி சொர்க்கம் போன்ற இன்பமே வரினும் அதனை நீக்கி நேர்மையுடன் வாழ வேண்டும். எப்போதுமே இனிமையான சொற்களையே பேச வேண்டும். பிறரிடம் இரக்கம் காட்ட வேண்டும்.
பிறர் நம்மிடம் கடுஞ்சொல் கூறினாலும் அவற்றைப் பொறுத்து புன்னகையுடன் வாழ வேண்டும். பொதுநலத்தை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நம் சேவைகளை செய்ய வேண்டும்.
பொதுப்பணத்தை கணக்கில் காட்டி அவற்றை அறச்செயல்களுக்கு மட்டுமே செலவிடல் வேண்டும். காந்தியின் கதைகளே தெருக்களில் விளங்க வேண்டும்.
பள்ளிகள் எல்லாம் காந்திவழியாக வேண்டும். பாடங்கள் எல்லாம் காந்தி மயமாக இருக்க வேண்டும். நாட்டியத்தில் காந்தி அபிநயங்கள் வேண்டும். மனைகள் எல்லாம் காந்தி புகழ் மகிழ வேண்டும். எங்கும் காந்தி சிலை நிறுவப்பட வேண்டும். காந்தியின் அன்பு கொளகைகளே போதனையாக கொடுக்க வேண்டும்.
PRAVESHIKA-TAMIL POZHIL-1-NATPU-நட்பு--திருக்குறள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA-TAMIL%20POZHIL--%20.html
கல்வியில் காந்திமணம் கமழ வேண்டும். கலைகள் எல்லாம் காந்தி குணம் தெரிய வேண்டும். அவருடைய பிறந்த நாளை வேள்வி என கருதி செய்ய வேண்டும். சொல்லும் அறமெல்லாம் காந்தி அறம் சொல்ல வேண்டும். காந்தியின் நடத்தையை பின்பற்ற வேண்டும்.
முடிவுரை:
இவ்வாறாக காந்தியடிகளின் வாழ்க்கை நம் அனைவரின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய படிப்பினையாக இருப்பதை கவிஞர் அவர்கள் விளக்கியுள்ளார்.
Praveshika-Tamil Pozhil-1-Thirukkural-2.Natpu Aariyadhal
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA%20NATPARADHAL.html
PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikaaamuthasurabiaaputhiran.html
லேபிள்கள்: Praveshika-Tamil Pozhil-1


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு