வெள்ளி, 31 டிசம்பர், 2021

PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA

தமிழ் பொழில்-2

7.அமுத சுரபியும், ஆபுத்திரனும் 



முத சுரபி, ஆபுத்திரனும்  பற்றிய ஒரு கட்டுரை எழுதுக:


     

முன்னுரை:


                      ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இடம்பெற்ற அமுதசுரபியும், ஆபுத்திரனையும் பற்றி இங்கு காணலாம்.  முதலில் ஆபுத்திரன் கையிலும், பின்னர் மணிமேகலையின் கையிலும் இருந்த அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமே அமுதசுரபி. அதன் சிறப்பை பற்றி இங்கு விரிவாக காணலாம்.


வாரணாசி:


                 வாரணாசியில் அபஞ்சீகன் என்ற அந்தணனுடைய மனைவி சாலி என்பவள் தன பாவத்தை போக்கி கொள்ள குமரித்துறை வந்தாள். அங்கு அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை இரக்கம் இன்றி அங்கேயே விட்டு சென்றாள். அந்த குழந்தைக்கு அங்கு இருந்த ஒரு பசு பல் கொடுத்து ஏழு நாள்கள் பேணி பாதுகாத்தது. 


ஆபுத்திரன்:


                 அப்போது அந்த வழியாக இளம்பூதி என்பவன் தன் மனைவியுடன் அந்த வழியாக வந்தான். அப்போது அங்கு அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு பின்னர் மகப்பேறு இல்லாத காரணத்தால் அந்த குழந்தையை எடுத்து வளர்த்தான். பசுவினால் பாதுகாக்கப்பட்டதன் காரணத்தினால் ஆ-பசு, ஆபுத்திரன் என பெயர் சூட்டி அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வந்தான். ஆபுத்திரனும் 'இளமையில் கல்' என்ற சான்றோர் வாக்குப்படி  கலைகள் பல கற்று வாழ்ந்து வந்தான்.


அமுத சுரபியும், ஆபுத்திரனும்




பசுவினை காத்தல் :


                       அந்த ஊரில் அந்தணர்கள் செய்யும் யாகத்தில் பலி இடுவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவினை கண்டு மனம் வருந்தி அதனை அவிழ்த்து கொண்டு ஆபுத்திரன் ஊருக்கு தொலைவில் சென்றான். 

                   பலி இடும் சமயம் வந்ததும் பசுவை காணாததால் அதனை தேடிச்  சென்ற அந்தணர்  ஆபுத்திரனையும், பசுவையும் கண்டு கோபம் அடைந்தனர். அவர்கள் அவனை அடித்து துன்புறுத்தினர். அதனை கண்டா அந்த பசு ஒருவரை தனது கொம்பினால் குத்தி குடலை அறுத்து மாய்த்து ஓடி விட்டது. அவர்கள் ஆபுத்திரனனின் வார்த்தையை கேட்கவில்லை.

            பிறகு அவனை ஆதரித்து வளர்த்து வந்த பூதியும் அவனது மனைவியும் அவனை வீட்டை விட்டு துரத்தினர்.


PRAVESHIKA --தமிழ்ப்  பொழில்-2--3.புலமைப் பெண்டிர் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA%20--%20%20-2--3.%20%20.html

பிச்சை எடுத்து உண்ணுதல்:


              வீட்டை விட்டு வெளியே வந்தவன் மதுரை மாநகரில் பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தான். அங்கு அவன் தான் பிச்சை எடுத்து பெற்றதை தானே உண்ணாமல் முடவர், செவிடர், ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்தான்.


அமுதசுரபி: 

 

                  ஒருமுறை அந்த வழியாக வந்த ஒருவர் உறங்கி கொண்டிருந்த ஆபுத்திரனை எழுப்பி உணவு கேட்டான். இதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் சிந்தா தேவியை வணங்கி தொழுதான்.  அப்போது அவன் முன் தோன்றிய சிந்தா தேவி தெய்வம் அவனிடம் ஒரு பாத்திரத்தை கொடுத்து நாட்டில் மழை வளம், நீர் வளம் இல்லாத  சமயத்திலும்   இந்த பாத்திரத்தில் இடப்படும் உணவு ஒருநாளும் குறையாது என கூறி  கொடுத்து சென்றாள். 

               அந்த அட்சய பாத்திரமே அமுதசுரபி. ஆபுத்திரன் பசித்து வந்த விலங்குகள், மக்கள் என அனைவரின் பசியையும் போக்கினான்.


இந்திரனின் கோவம்:


                   ஆபுத்திரனின் இந்த அறச்செயல்களை கண்டு மகிழ்ந்து இந்திரன் முதியவர் வேடத்தில் தோன்றி "நீ வேண்டியவற்றை தருவதற்காகவே உன்னிடம் வந்துள்ளேன். வேண்டியதை கேள் என கூறினார். 

                ஆனால் ஆபுத்திரனோ "பசியால் வாடி வருவோரின் துன்பத்தை கலைவதே என் பணி"  உன் தேவலோகத்தில் தருமம் செய்வரோ, தவம் புரிபவர்களோ இல்லை என இகழ்ந்தான்.  இதனால் இந்திரன் கடும் சினம் கொண்டார்.  

                       இந்திரனின் செயலால் பாண்டி நாடு முழுவதும் மழை பொழிவினை வழங்கினான். நாடு வளம் நிறைந்ததாக ஆனது. இதனால் மக்கள் யாரும் ஆபுத்திரனின் கையை எதிர்பார்க்கவில்லை. 


சாவகத்தீவு:


                    இந்த நிலையில் மழைவளம் குன்றி மக்கள் பசியால் வாடி கொண்டிருந்த  மரக்கலம் ஏறி சாவகத்தீவுக்கு சென்றான். போகும் வழியில் இரவு நேரத்தில் மணிபல்லவதீவில் மரக்கலம் நின்ற போது ஆபுத்திரன் இறங்கியதை கவனியாதவர்கள் அவனை விட்டு விட்டு சென்று விட்டனர். 

                தீவில் தனித்து விடப்பட்ட அவன் தன்னை காத்துக்கொள்ள விரும்பவில்லை. இனி இந்த பாத்திரத்தால் பயன் இல்லை என கருதி அத்தீவில் இருந்த பொய்கையில் அதனை போட்டு "ஒவ்வொரு ஆண்டும் புத்தர் தோன்றிய வைகாசிப் பௌர்ணமி நாளில் வெளியில் தோன்றுக" எல்ல உயிர்களையும் தம்முயிர் போல எண்ணி வாழும் அருள் கொண்டவரின் கையில் சேர்க " என கூறி உண்ணாநோன்பு இருந்து உயிர் விட்டான்.  


மணிமேகலை:


                  காவிரிப்பட்டினத்தில் பிறந்த கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவளே மாதவி. மணிப்பல்லவத்தீவில் புத்த பீடிகையால் தன்  பிறப்பினை அறிந்தாள். அப்போது அவள் முன் தீவதிலகை என்பாள் தோன்றி அமுதசுரபியின் வரலாற்றைப்  பற்றி எடுத்துரைத்து நீ அங்கு சென்றால்  புத்தர் பிறந்த நன்னாளில் தோன்றும் அந்த பாத்திரத்தை நீ அடையலாம்.


அமுதசுரபியை பெறுதல்:


                         மணிமேகலை சாவகத்தீவு சென்று அந்த பொய்கையின் முன் நின்றாள். அங்கு அப்பாத்திரம் அவளை அடைந்தது. அதனை பெற்ற அவள் புத்தரை வணங்கி மகிழ்ந்தாள். 

                        அப்போது நீங்காத பசித்துன்பம் கொண்டிருந்த காயசண்டிகை என்பவள் மணிமேகலையிடம் வந்து "கற்புடையப்  பெண்டிருள் மிகவும் சிறந்தவள் ஆதிரை" அவள் கைகளால் உன் பாத்திரத்தில் உணவு ஏற்றால் அது மேலும் மேலும் பெருகும் என்றாள். 


ஆதிரையிடம் உணவு பெறுதல்:


                       மணிமேகலை ஆதிரையிடம் சென்று உணவு வேண்டினாள். இதனை அறிந்த ஆதிரை மணிமேகலையை வலம் வந்து வணங்கி அமுதசுரபி நிறையுமாறு சோற்றினை இட்டாள். பிறகு அது அறவழியில் தேடிய செல்வம் வளர்வது போல எடுக்க எடுக்க வளர்ந்தது. 

                      அப்போது அவளருகே இருந்த காயசண்டிகை மணிமேகலையிடம் இருந்து உணவு பெற்று  தன்  தீராத பசியை போக்கிக் கொண்டாள். பிறகு அவளுடைய பசி நோய் நீங்கியது. பிறகு மணிமேகலை மக்களின் பசி துயரை நீக்கி தன் பணியை தொடர்ந்தாள்.


முடிவுரை:


              இவ்வாறாக ஆபுத்திரன் மற்றும் அதன் பிறகு மணிமேகலையையும் வந்தடைந்த அமுதசுரபி உலகோர் பசிப்பிணியை போக்கியது. 


aadhirai


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikaaadhirai.html


Iniyavai natpadhu


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKATAMILPOLILINIYAVAINARPADHU.html




 


 

 


   










லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு