புதன், 19 ஜனவரி, 2022

PRAVESHIKA --தமிழ் பொழில்-2 --10.ஆதிரை

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA


10.ஆதிரை


திரையை பற்றி ஒரு கட்டுரை எழுதுக"


முன்னுரை:


                    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஒரு கதாப்பாத்திரம் ஆதிரை . அவள் சோழநாட்டின் பூம்புகாரில் பிறந்து காவிரிப்பட்டினத்தில் வாழ்ந்த சாதுவன் என்ற  வணிகனை மணம் செய்து  கொண்டாள் அந்த  கணிகை. அவளுடைய சிறப்புகளையும், மேன்மையையும்  பற்றி இந்த கட்டுரையில் காணலாம்


இல்வாழ்க்கை:

 

                        ஆதிரை தன் கணவன் சாதுவனுடன் இல்லறம் எனும் நல்லறத்தை இனிதே நடத்தி வந்தாள். மகிழ்வான வாழ்கையை  வாழ்ந்து வந்தனர். ஆனால், ஊழ்வினையின் காரணமாக கற்புமிக்க தன் மனைவி ஆதிரையை மறந்தும், இல்லற தருமத்தையும் மறந்து கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். தன்னுடைய செல்வம் அனைத்தையும் இழந்தான். ஆதிரை தன் கணவனை எண்ணி அவனுடைய பிரிவு துயர் தாளாமல் வருந்தி பொறுமையுடன் வாழ்ந்து வந்தாள்.


சாதுவன் தவறுணர்தல்:


                        சாதுவன் செல்வத்தை இழந்த காரணத்தால் அந்த கணிகை அவனை வெறுத்து ஒதுக்கினாள். இந்நிலையில் சாதுவன் தான் செய்த  செயலை எண்ணி மிகவும் மனம் வருந்தினான். கற்புமிக்க தன் மனைவி ஆதிரையின் நினைவு வந்தது.  தன்னுடைய செயலுக்கு வருந்தி வீடு திரும்பினான். அங்கு ஆதிரை அவனை இன்முகத்துடன் வரவேற்றாள்.


பொருள் ஈட்ட செல்லுதல்:


                         தீய வழிகளில் பொருள் அனைத்தையும் இழந்ததால் பொருள் ஈட்டுவதற்காக கலம் ஏறி வெளிநாடு சென்றான். அங்கும் வீதி அவனை குறுக்கிட்டது. புயல்  காற்றின் காரணமாக அவனுடைய கலம் கவிழ்ந்தது. பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மரத்துண்டு  பற்றி மிதந்த சாதுவானை கடல் அலைகள் நாகர் வாழும் மலைப்பகுதியில் ஒதுக்கின. அங்கு அவன் மிகவும் அயர்ந்து  உறங்கி போனான்.   


PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA--%20-2--7.%20%20%20.html

ஆதிரை தீயில் புகுதல்:


                 அந்த கலத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்து வந்த சிலர் ஆதிரையிடம் கலம் உடைந்ததால் இறந்தவர்களுள் உன் கணவனும் ஒருவன் என கூறினான். இதை கேட்ட ஆதிரை மெழுகென உறைந்தாள். தன்னுடைய கணவன் இறந்த பிறகு நானும் இந்த உலகில் உயிர்  வாழ மாட்டேன் என எண்ணி ஊராரை அழைத்து நெருப்புக்குழி அமைத்து தர வேண்டினாள். பிறகு அந்த தீக்குழியில் இறங்கினாள் ஆனால்,   கற்புநெறி கொண்ட ஆதிரையை தீ சுடவில்லை.  

             நெருப்பு தன்னை சுடவில்லை என்பதை அறிந்த அவள் "தீயும் கொல்லாத் தீவினையாட்டியேனாகிய நான் செய்த தவறு என்ன? நான் என்ன செய்வேன்? என அழுது புலம்பினாள்.


அசரீரி  ஒலித்தல்:


               ஆதிரை வருந்தி புலம்பி கொண்டிருந்த சமயத்தில்  ஒரு அசரீரி ஒலித்தது. "ஆதிரை ! கேள் ! உன் கணவன் நாகர் வாழும் மலைப்பகுதியில் இருக்கிறான். விரைவில் சந்திரதத்தன் எனும் வணிகனின் மரக்கலம் ஏறி வருவான்  என கூறியது. அதுகேட்ட ஆதிரை துன்பம் நீங்கி தன் கணவனின் வரவை எதிர் நோக்கி அறச்செயல்கள் புரிந்து வாழ்ந்து வந்தாள் .


நாகர் மலைப்பகுதி:


                 நாகர் மலைப்பகுதியில் வாழும் மக்கள் மது அருந்துபவர்கள், புலால் உண்பவர்கள், திசை தவறி வரும் வணிகர்களின் பொருள்களை  கவர்ந்து கொண்டு அவர்களையும் கொன்று தின்பர். 

              அப்படிப்பட்ட பகுதியில் கடல் அலைகள் ஒதுக்கி உறங்கிய நிலையில் களைத்து  உறங்கி  கிடந்த சாதுவனை தங்களுக்கு நல்ல உணவாக அமைவான் என எண்ணி அவனை நாகர் மலை மக்கள் அவனை சூழ்ந்து நின்றனர். பேச்சொலி கேட்டு எழுந்த சாதுவன் தான் இருக்கும் சூழ்நிலையை கண்டு அஞ்சினான். ஆனாலும் , அவர்கள் பேசும் மொழி இவனுக்கும் தெரிந்த காரணத்தால் அவர்கள் மொழியிலேயே பேசினான். அதனால் வியந்து போன அம்மக்கள்  அவனை கொல்லாது தங்கள் நாகர் தலைவன் குருமகனிடம் அழைத்து சென்றனர்.


நாகர் தலைவன்:


                    நாகர் தலைவன் குருமகன் தன் மனைவியுடன் இருந்தான்.  அங்கு சென்ற சாதுவன் அவனிடம் அவர்கள் மொழியிலேயே பேசி அவர்களின் அன்பை பெற்றான். நாகர் தலைவன் நீ வந்த காரணம் என்ன என வினவ அவனும் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அதுகேட்டு வருந்திய அவன் சாதுவனுக்கு வேண்டுமளவு கள்ளும் , ஊனும்  வழுங்குமாறு பணியாளரை பணித்தான். அப்போது சாதுவன் அவற்றை மறுத்தான்.


அறநெறி உரைத்தல் :


                          கள்ளையும் , ஊனையும் தவிர வேறு இன்பம் உலகில் இல்லை என எண்ணி இருந்த நாகர் தலைவனுக்கு சாதுவன் பின்வருமாறு அறநெறி உரைத்தான்.

                   "பண்புமிக்க சான்றோர் கள்ளையும் , பிற உயிர்களை கொல்லும்  செயல்களை தீயதென ஒதுக்கி தள்ளுவார். 

                    "உலகில் பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும், உறங்களும், விழித்தலும் போன்றது.

                     " நல்லது புரிவோர் நல்லுலகம் அடைவர். தீமை புரிவோர் நரகத்தை அடைவர். 

                    "இந்த உண்மைகளை அறிந்த சான்றோர் அந்த தீய செயல்களை விட்டு ஒழித்தனர். 

                   மேலும், நாம் கனவின் வாயிலாக உடல் ஓரிடத்தில் கிடக்க உயிர் பல இடங்களுக்கு சென்று வருதலை உணரலாம்.  உடலை விட்டு பிரிந்த உயிர் அவரவர் வினைக்கு ஏற்ப ஓர் உடலின்கண் புகும்.

                 என அறநெறிகளை உரைத்தான்.


நல்லறிவு பெறுதல்:


                          சாதுவன் கூறியவற்றை கேட்ட நாகர் குல தலைவன் சாதுவன் காலில் விழுந்து வணங்கி  நாங்கள் "கள்ளையும் , உனையும் நீங்கி உயிர் வாழ்தல் இயலாது"  எங்களுக்குரிய நல்வழி குறுக என கூறினான். 

                    அவர்களிடம் சாதுவன் காலம் சிதைந்து வரும் மக்களை கொல்லாது அவர்களை காப்பாற்றுக. முதுமையுற்ற இறக்கும் விலங்குகளை மட்டும் உண்ணுக. 

           சாதுவன் கூறிய அறத்தினை கடைபிடித்து வாழ்வதாக குறி அவனுக்கு மனம் கவரும் சந்தன மரங்கள், மெல்லிய ஆடைகள், நீதிக்குவியல்கள் ஆகியவற்றை வழங்கினான். சாதுவன் சந்திரதத்தன் எனும் வணிகனது ஏறி தன்னுடைய நகருக்கு வந்து  தன் மனைவியுடன் அறங்கள் பல செய்து நல்வாழ்க்கை வாழ்ந்தான்.


ஆதிரையின் கற்பின் மேன்மை:


                             மணிபல்லவ தீவில் இருந்து வந்த மணிமேகலை தான் எடுத்து வந்த அமுதசுரபியுடன் புகார் நகரத்தினை அடைந்தாள். பின்னர், அறவண அடிகள் மற்றும் காயசண்டிகை வாயிலாகவும் ஆதிரையின் பெருமையை அறிந்து , முதன் முதலாக அமுதசுரபியில் உணவிடும் தகுதியை உடையவள் ஆதிரையே என உணர்ந்து அவளை தேடி சென்று, அமுதசுரபியை ஏந்தி நிற்க, "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" என கூறி உணவிட்டாள்.

                   

முடிவுரை:

.

              இவ்வாறக பொறுமையில் சிறந்தவள் கற்பில் உயர்ந்தவள்  ஆதிரை.மங்கையர் திலகமாக விளங்கியவள்.உயர்ந்த வாழ்வும், அறிய வாக்கும் பெற்று விளங்கிய ஆதிரையின் கற்பின் திறம் போற்றுதற்குரியது.


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKATAMILPOZHILUTTHAMANANBAR.html

              

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikapulamaipendir.html


bharathiyar murasu


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikamurasubharathiyar.html

               



லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு