செவ்வாய், 4 ஜனவரி, 2022

VISHARAD POORVARDH --மலர்ச்செண்டு --1.பெரியபுராணம்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA 

VISHARAD POORVARDH

மலர்ச்செண்டு 

காப்பியக்கவிமலர்கள்
 
1.பெரியபுராணம் 


அப்பூதியடிகள், நாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பினை விளக்குக:


முன்னுரை:


                     சைவத்திருமுறைகளில் இது பன்னிரெண்டாம் திருமுறை ஆகும். இதனை திருத்தொண்டர் புராணம் எனவும் கூறுவர். சேக்கிழாரால் இயற்றப்பட்ட இது பெருக்காப்பிய இலக்கணங்கள் கொண்ட சைவ காப்பியமாகும். சிவனடியார்களின் சரிதம் பற்றி இந்நூல் கூறுகின்றது.

                  இந்த கட்டுரையில்  "அப்பூதியடிகள் நாயனார்" புராணத்தில் ஆப்பூதியார், நவரசரிடம் கொண்டிருந்த அன்பின் ஆழமும், பக்தி பெருக்கும், அடியவர்க்கு ஆற்றும் தொண்டின் சிறப்பையும் காணலாம்.


திருநாவுக்கரசர்:


                        சோழநாட்டின் திருமுனைப்பாடியில் புகழனார், மாதினி  என்போருக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மறுணீக்கியார் ஆகும். சமண நூல்களை கற்று அம்மத தலைவராகவும் இருந்தவர். இவருடைய சகோதிரியார் திலகவதியார் ஆவார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகைகளை பாடியுள்ளார். 

                 அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவர்அப்பர், திருஞானசம்மந்தர், மருணீக்கியர் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறார். 


அப்பூதியடிகள் :


                            இவர் மிகப்பெரிய சிவத்தொண்டர்களுள் ஒருவர். அப்பூதி அடிகள் அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் ஒருவர் ஆவர். இவர் திருநாவுக்கரசரிடம் அளவு கடந்த அன்பும், பற்றும் கொண்டிருந்தார்.

                     தன் மூத்த மகனுக்கு திருநாவுக்கரசு என பெயர் சூட்டி மகிழ்ந்தார். 

VISHARAD POORVARDH--மலர்ச்செண்டு-- 1.திருக்குறள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhthirukkural.html


அறச்செயல்கள்:


                       இவர் நாவுக்கரசரை நேரில் காணாமலே அவருடைய பெயரில்  அறச்செயலகள் பலவற்றை செய்து  வந்தார். தண்ணீர் பந்தல் அமைத்தல், சத்திரம் படைத்தல், மக்களுக்கு அன்னதானம் வழங்குதல், குளங்கள் வெட்டுதல் போன்ற செயல்களை திருநாவுக்கரசரின் பெயரிலே செய்து வந்தார். 


திங்களூரில்  திருநாவுக்கரசர்:


                           ஒருமுறை இறைவனை தரிசிக்க அப்பர் பெருமான் திங்களூர் வந்தார். அங்கு அவர் செல்லும் தண்ணீர் பந்தல், மடம்  போன்றவற்றிற்கு தன்னுடைய பெயர் சூட்டி இருப்பதைக்  கண்டார். அங்கிருந்த ஒருவரிடம் வினவிய போது இதே போல மற்ற எல்லா அறச்சாலைகளுக்கும் அப்பூதியடிகள்  திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டியுள்ளார் என அவர் அறிந்து கொண்டார்.      

                       உடனே திருநாவுக்கரசருக்கு அப்பூதியடிகளை காண வேண்டும் என்ற அவா எழுந்தது. உடனே அவரைக்காண அவருடைய இல்லத்திற்கு விரைந்தார். 


அப்பூதியடிகள் இல்லம்:


                                சிவனடியார் ஒருவர் தன் இல்லத்திற்கு வருவதை கண்டு அவரை மகிழ்ச்சி உடன் வரவேற்றார் அப்பூதியடிகள். தன் மனைவி, மகனுடன் கூடி அவருக்கு  பாத பூஜை செய்து ஆனந்தம் அடைந்தார்.


அப்பூதியர் சினம் கொள்ளுதல்:


                         அப்போது நாவுக்கரச பெருமான் அப்பூதியடிகளிடம்  ஊர் முழுவதும் உம்முடைய கைங்கரியத்தால் அறச்செயலகள் செய்யும் நீர் அவைகளுக்கு உமது பெயரை சூட்டாமல் , நாவுக்கரசரின் பெயரை சூட்டி மகிழ்கிறீரே என வினவினார். உடனே சினம் கொண்ட அப்பூதியடிகள் நெஞ்சு பதைக்க நீர் பெரிய சிவனடியார் போல காட்சி அளிக்கிறீர்.. உமக்கு திருநாவுக்கரசரின் அருமை தெரியாதா?  சமணத்தில் இருந்த மன்னனை தன ஆற்றலால் சைவ நெறிக்கு மாற்றியவர். சமணர்களின் சூழ்ச்சியை முறித்தவர். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாவுக்கரசரை அறியாத   நீங்கள் யார்? என வினவினார்.  அப்போது பெருமான் அவர்கள் நான் திருநாவுக்கரசர் என பணிவுடன் கூறினார்.  அதனை கேட்டதும் அப்பூதி அடிகள் அவருடைய பாதத்தில் விழுந்து வணங்கினார். 


விருந்துண்ண வேண்டல்:

                                       அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை தம் இல்லத்தில் விருந்து உண்ணுமாறு வேண்டினார். உடனே தனது மகன் திருநாவுக்கரசை அழைத்து கொல்லையில் வாழை இலை பறித்து வருமாறு பணித்தார். 


அரவம் தீண்டுதல்:


                                   அடிகளாரின் மகன் வாழை இலையை பறிக்கும் போது அவனை ஒரு பாம்பு தீண்டியது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் தந்தை தனக்கு இட்ட பணியை செய்து  முடிக்கவேண்டும், அடியவருக்கு உணவிடும் பணி தடை படக்கூடாது  என்று எண்ணி விரைந்து சென்று இலையை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு மூச்சை அற்று நிலத்தில் விழுந்தான். அதனால் அப்பூதியும் அவரது மனைவியயும் ஒன்றுமறியாது திகைத்தனர்.  

                     ஆனாலும் நாவுக்கரசருக்கு விருந்தளிப்பதில் குந்தகம் ஏற்படக்கூடாது என எண்ணி உயிரற்ற தனது மகனின் உடலை பாயினில் சுருட்டி வைத்துவிட்டு துயரத்தினை மறைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவளிக்க சென்றனர்.


நவரசரை அமுதுண்ண படைத்தல்:


                  விருந்துண்ண அமர்ந்த நாவுக்கரசப்பெருமான் மூத்த மகன் இல்லாதது கண்டு அவனையும் அழைக்குமாறு கூறினார். அப்பூதி அடிகள் எத்தனையோ முயன்றும் அவரால் உண்மையை மறைக்க முடியவில்லை. நடந்தவற்றை எல்லாம் பெருமானிடம் உரைத்தார்.


பதிகம் பாடி சிறுவனை உயிர்ப்பித்தல்:


                                  இறந்த சிறுவனின் உடலருகே சென்ற அப்பர் சிறுவனின் உடலை திங்களூர் இறைவன் சந்நிதி கொண்டு வருமாறு பணித்தார். அப்பூதி அடிகளும் அவ்வாறே செய்தார். சந்நிதியில் அப்பர் பெருமான் சிவபெருமானைப் பார்த்து " ஒன்று கொல்லாம்" எனும் புதிதாய் மனம் உருக பாடி  திருநீற்றை சிறுவனின் உடலில் பூசினார். உடனே இறந்த கிடந்த அந்த சிறுவன் தூக்கத்தில் இருந்து எழுவது போல உயிர்ப்பெற்று எழுந்தான். 

                      அப்பூதியடிகள் அவரது குடும்பத்துடன் அவரது காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்தான். நாவுக்கரசப் பெருமானின் மகிமையை அறிந்து அங்கிருந்தவர்கள் அவரை போற்றி துதித்தனர்.


முடிவுரை:


               இவ்வாறாக  திருநாவுக்கரசரின் அன்பும், அப்பூதியடிகள் அவர் மீது கொண்டிருந்த பக்தியையும், பற்றையும் அறிந்து கொள்ளலாம்.

                                             

VISHARAD POORVARDH---மலர்ச்செண்டு---சிங்கன் சிங்கி  உரையாடல்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhakutralakuravanjisingansingi.html


VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/vishardpoorvardhthilagavadhiyar.html

                








லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு