வியாழன், 30 டிசம்பர், 2021

PRAVESHIKA --தமிழ்ப் பொழில்-2--3.புலமைப் பெண்டிர்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA

தமிழ்ப்  பொழில்-2

3.புலமைப் பெண்டிர் 


புலமைப் பெண்டிர் பற்றி கட்டுரை எழுதுக:


முன்னுரை:


                  'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி  வளர்த்திடும் ஈசன்' என்பது கவிஞரின் வாக்கு. சங்ககாலத்தில் பெண்டிர் பலரும்  கல்வியறிவு பெற்று உயர்ந்த உண்மைகளைக் கொண்ட பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களுள் ஒரு சில பெண்பாற் புலவர்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.


ஒளவையார்:

 

                இங்கு நாம் கடையெழு வள்ளல்கள் வாழ்ந்த சங்ககாலத்தைய ஒளவையாரை பற்றி காணலாம். இவர் ஆதிச்சூடி உள்ளிட்ட பல நன்னூல்களை இயற்றியுள்ளார். அப்போது வாழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசர் அவர் முயன்று பெற்ற நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தார்.

                    அப்பழத்தை  உண்பதன் மூலம் நீண்டகாலம் உயிருடன் வாழமுடியும். அப்படிப்பட்ட பழத்தை ஒளவையாரின் மேல் கொண்டிருந்த அன்பின் காரணமாக வழங்கினார்.

                  அதியமான் ஒருமுறை ஒளவையாரை தொண்டைமான் என்ற மன்னன் இடத்தில் தூது அனுப்பினான்.   அங்கு ஒளவையாரை கண்ட அந்த அரசர் தன்னை அவர் புகழவேண்டும் என்பதற்காக தன்னுடைய  படைக்கலங்களை காண்பித்தார். ஒளவையார் அவரிடம் 'உனது படைக்கலங்கள் மாலை அணியப்பெற்று பளபளவென மின்னுகின்றன. 

                     ஆனால் எங்கள் மன்னனுடைய ஆயுதங்கள் பகைவருடன் போரிட்டு போரிட்டு நுனி மழுங்கி கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்ற என்று அதியமானின் வீரத்தை புகழ்ந்தார். அவன் பகைவர் அம்பு பட்டு இறந்ததை அறிந்த ஒளவையார் வருந்திப்படுவது கற்பவர் நெஞ்சைக் கரையச் செயயும். 

                   "ஈதல்  அறம், தீயவழிகளை  ஒதுக்கி நல்ல வழியில் ஈட்டுவதே பொருள்" , காதலித்த இருவர் ஒத்த கருத்துடன் வாழ்வதே இன்பம்"  பரம்பொருளை நினைத்து இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு" என அறம் , பொருள், இன்பம், வீடு நான்கிற்கு விளக்கம் தருகிறார்.


PRAVESHIKA-தமிழ் பொழில் -2.இனியவை நாற்பது 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA-%20%20-2.%20%20.html

காவற்பெண்டு:


                 புறநானூற்றில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்பாற்புலவர் காவற்பெண்டு அவரைப்பற்றி இங்கு காண்போம். 

                        தாய் ஒருத்தி தன்னுடைய மகனின் வீரத்தை எடுத்துக்கூறி பெருமிதம் கொள்கிறார் அதனை காவற்பெண்டு இவ்வாறு விளக்குகிறார்.   அழகிய வேலைப்பாடுகள் அமையப்பெற்ற தூண்களை உடைய  ஒரு சிறிய அழகிய வீடு.  

                    அந்த இல்லம் சிறந்த வீரனை பெற்றெடுத்த இல்லம். அங்கு ஒரு பெண் வருகிறாள். அங்கு உன் மகன் எங்கே?  என அந்த வீட்டு பெண்மணியிடம் கேட்கிறாள்.

                              அப்போது புலி தங்கிச்செல்லும் குகை போன்றது என் இல்லம். எனது வயிறும் புலி தங்கிச்சென்ற குகை போன்றது. "என்  மகன் வீட்டில் இருப்பான் அல்லது போர்க்களத்தே காணப்படுவான்" எனப் பெருமிதத்துடன் கூறுகிறாள். இத்தகைய பெண்டிர்  "மூதின் மகளிர்" என சிறப்பிக்கப் பெறுவார். 

                               இவ்வாறு மூதின் மகளிரின் வீரத்தை ஓர் இலக்கிய ஓவியமாக தன் பாடிய பாடல் ஒன்றில் அழகாக வர்ணித்துள்ளார்.


காரைக்காலம்மையார்
:


                         சோழ நாட்டில் தனதத்தன்  என்ற வணிகனுக்கு மகளாக பிறந்தவர் காரைக்காலம்மையார். இவரது இயற்பெயர் புனிதவதி. இவர் பேச தொடங்கிய நாள்  முதலே சிவபெருமானின் பெருமைகளை பேசி வந்தார். நாகபட்டினத்தை சேர்ந்த பரமதத்தன்  என்பவரோடு இமனைவியிடம் வருக்கு திருமணம் நிகழ்ந்தது. 

               ஒருமுறை  அவர் தன் மனைவியிடம் இரண்டு மாங்கனிகளை வழங்கினார். அவற்றுள்  ஒன்றை சிவனடியருக்கு வழங்கினார் காரைக்கால் அம்மையார். பிறகு கணவன் வந்ததும் அவருக்கு ஒரு மாங்கனியை வழங்கினார். அதை உண்ட கணவர்  இன்னொரு மாம்பழத்தையும் கேட்டார். உடனே அம்மையார்  இறைவனை துதிக்க அவர் கையில் அதிமதுரக்கனி வந்து சேர்ந்தது. 

                  அந்த கனியின் சுவை மிகுதியை உணர்ந்த கணவர் மனைவியிடம் கேட்க அவர் நடந்தவற்றை கூறினார்.  அவைகளை கேட்ட  பரமதத்தன் தன்  மனைவி மனிதபிறவி அல்ல தெய்வப்பிறவி எனக்கருதி அவரை விட்டு பிரிந்தார்.  அவர் அயல்நாடு சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்து குழந்தை பெற்று அதற்கு புனிதவதி என பெயர் சூட்டினார். 

                 கணவர் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்ற காரைக்காலம்மையாரை அவரது கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இவர் மனிதபிறவி அல்ல நற்பேரும்தேய்வம் என குறி அவரது காலில் விழுந்து வணங்கினான். 

                தன் கணவனின் சொல்லை கேட்ட அம்மையார் இறைவனை வேண்டி பேய் வடிவு பெற்று, கயிலை சென்று பரமனைக் காண விழைந்தாள். பிறகு இறைவனின் திருவடிகளை வணங்கி சிவபூஜை செய்து  " அற்புதத் திருவந்தாதி" எனும் நூலை பாடினார். 

                சிவ பெருமானின் பெருமைகளை விளக்கி  "திருஇரட்டை மணிமாலை " நூலினையும் பாடினார். 

              தலையினால்  நடந்து கயிலை சென்று அங்கு சிவனின் உருவத்தை மற்றும் அவரது திருநடனத்தை  கண்டு மகிழ்ந்தார் பிறகு மூத்த திருப்பதிகம் நூலை பாடி கடவுளை துதித்தார். 


ஆண்டாள்:


                 பாண்டி நாட்டில்  பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான விஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரின் திருமகளாக தோன்றியவர் ஆண்டாள்.

                    பெரியாழ்வார் அனுதினமும் இறைவனை தியானித்து, அவரது அருட்செயல்களையும், பெருமைகளையும் பாடுவதிலும், கடவுளுக்கு நந்தவனம் அமைத்து மலர் மலை கட்டி கடவுளுக்கு சூட்டி மகிழ்வார். 

                தம் தந்தையின் பாடல்களை கருத்தூன்றி படித்து பழகிய காரணத்தினால் கூதியின் உள்ளத்தில் கண்ணனே உருவமே பொலிவுடன் இருந்தது. அவர் கண்ணனையே திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினார். 

                  பெரியாழ்வார் நாளும் கடவுளுக்காக காட்டும் துளசி மாலையை தினமும் தான்  சூடிக்கொண்டு கண்ணாடி முன் நின்று கொண்டு அழகு பார்த்து வந்தார். இது அவரது தந்தைக்கு தெரியாது ஆகையால் அவரும் அந்த மாலையையே கடவுளுக்கு படைத்தார். 

                 பிறகு ஒருமுறை அவர் கோதையின் இந்த செயலை பார்த்து விட்டார். உடனே அவர் வேறு மாலையை கட்டி கடவுளுக்கு சூட முடிவு செயதார். ஆனால் கடவுள் அவருடைய கனவில் தோன்றி கோதை அணிந்த மாலையை தான் அணிந்து கொள்ள விரும்புவதாக கூறினார். பிறகு அந்த மாலையே பெருமானுக்கு படைக்கப்பட்டது. 

               அன்று முதல் "சூடிக்  கொடுத்த சுடர்க்கொடி" என அழைக்கப்பெற்றார். ஆண்டாள் பாடி அருளியவ்வை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பவை. கன்னிப்பெண்கள் நோற்கும் பாவை நோன்பினை விளக்குவதே திருப்பாவையாகும்.


முடிவுரை: 

 

                   இவ்வாறாக பல பெண்பாற்புலவர்கள் புலமை நலம் நிறைந்து  சங்ககாலத்தில் வாழ்ந்து உள்ளனர் என்பதை இந்த கட்டுரையின் மூலம் நம் அறிந்து கொள்ளலாம்.  


PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikanammakkalkavingargandhipadippinai.html


PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikaaamuthasurabiaaputhiran.html


லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு