PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --10.உரையாசிரியர்கள்
DAKSHIN BHARATH HINDII PRACHAR SABHA
PRAVEEN POORVARDH
தமிழ் இலக்கிய வரலாறு
10.உரையாசிரியர்கள்
உரையாசிரியர்கள்
தமிழ் இலக்கண இலக்கியங்களென்னும் கலைக்கோயிலை உரையாசிரியர்கள் பலர் தமது உரை எனும் நல்விளக்கேற்றியுள்ளனர்.
இளம்பூரணர் :
உரையாசிரியர் என்றே சிறப்பிக்கப்படுகிறார். இவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதி உள்ளார். இவர் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்தவர்.
"உளங்கூர் கேள்வி இளம்பூரணர்" எனவும் அழைக்கப்படுகிறார்.
பேராசிரியர்:
இவர் திருக்கோவையாருக்கு உரை எழுதியுள்ளார். இவரை சைவர் என்பர். தொல்காப்பியத்திற்கும், குறுந்தொகைக்கும் உரை எழுதியுள்ளார். இவரது கல்வி அறிவு அளவிடற்கரியது.
சேனாவரையர்:
சிவஞான முனிவரால் "வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்தவர்" என பாராட்டப்படுகிறார். இவரது உரைநடை விடைகளோடு அமைந்ததாக இருக்கும்.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதிய உரை உயர்ந்து விளங்குகிறது. இவரை படை தலைவர் என்பர்.
நச்சினார்க்கினியர்:
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார்.
குறுந்தொகையில் இறுதி இருபது செய்யுளுக்கு உரை எழுதியுள்ளார். இவரது உரையில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து மேற்கொள் காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
இவர் "அமுதவாயர்" என புகழப்படுகிறார்.
PRAVEEN POORVARDH---வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/praveenpoorvardhvalikutrathaiporutharulavendiyavai.html
பரிமேலழகர்:
திருக்குறளுக்கு உரைகண்டவர்களில் உயர்ந்து விளங்கும் இவர் காஞ்சியை சேர்ந்த வைணவ அந்தணர்.
மேற்கோள் காட்டுவதிலும், பிறர் உரையை மறுத்துப்பேசி தன்னுடைய கொள்கையை நிலை நாட்டுவதில் வல்லவர். பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார்.
அடியார்க்கு நல்லார்:
முத்தமிழும் கற்றுத் துறைபோகிய வித்தகர் அடியார்க்கு நல்லார். இவர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியுள்ளார்.
ஊர்சூழ் வரி வரையிலுமே இவரது உரை உள்ளது. இசை நூல்கள், நாடக நூல்கள் ஆகிய பலவற்றிலிருந்து மேற்கொள் காட்டியிருப்பது இவரது புலமையை காட்டும்.
சிவஞான போதத்திற்கு "சிவஞான போத மாபாடியம் " எனும் உரையை சிவஞான முனிவர் எழுதியுள்ளார். இவரே தொல்காப்பியத்திற்கு சூத்திர விருத்தி என்னும் உரைநூலும் எழுதியுள்ளார். பிரபந்த சாரம், மும்மணிக்கோவை, நவரத்தின மாலை முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.
PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு - 5.இரட்டைக் காப்பியங்கள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILIRATTAIKKAPPIYANGAL.html
PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-சங்ககாலம் ஒரு பொற்காலம்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARU.html
லேபிள்கள்: PRAVEEN POORVARDH-TAMIL ILAKIYA VARALARU


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு