PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு - 5.இரட்டைக் காப்பியங்கள்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVEEN POORVARDH
தமிழ் இலக்கிய வரலாறு 5.இரட்டைக் காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் :
முன்னுரை:
தமிழ்க் காப்பியங்களுள் முதற்பெரும் நூலக வைத்து மதிக்கப்பெறும் பெருமை கொண்டது. சிலப்பதிகாரம் ஆகும். இந்நூலோடு காலத்தாலும், வரலாற்றாலும் தொடர்புடையது மணிமேகலை காப்பியம் ஆகும். இவ்விரு நூல்களுமே இரட்டைக்காப்பியங்கள் எனப்படும். அவ்விரு நூல்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
சிலப்பதிகாரம்:
இது இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. இந்நூல் குடிமக்களைத் தலைவராக கொண்டுள்ளதால் குடிமக்கள் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது. "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" எனவும் அழைக்கப்படும் இந்நூல் வணிகர் மரபைச் சேர்ந்த கோவலன்,கண்ணகி ஆகியோரைக் காவியத் தலைவர்களாகப் பெற்றுள்ளது.
முத்தமிழ் காப்பியம் ஆன இந்த நூல் மூன்று உண்மைகளை விளக்குவதற்காக எழுதப்பட்டது என நூலின் பதிகம் கூறுகின்றது.
நூல் அமைப்பு:
புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை, காதை என்னும் சிறு பிரிவினையும் கொண்டுள்ளது.
சிலம்பு வரலாறு:
சோழ நாட்டில் புகார் நகரில் பெருங்குடி வணிகர் மரபில் தோன்றிய கோவலன் என்பவன் அதே நகரை சேர்ந்த கண்ணகியை திருமணம் செய்து கொண்டான். இனிது இல்லறம் நடத்தி வந்தான். ஆனால் ஊழ்வினை காரணமாகக் கோவலன், மாதவி என்பவளோடு சேர்ந்து தன் செல்வத்தை இழந்தான். இறுதியில் மாதவியை வெறுத்து கண்ணகியுடன் பாண்டிநாடு சென்றான். ஆனால் மதுரையில் கோவலன் பாண்டியனால் ஆராயாது கொல்லப்பட்டான்.
இதனை அறிந்த கண்ணகி தன் கற்பின் திறத்தால் மதுரையை எரித்து தெய்வமானாள். இதுவே சிலம்பு வழங்கும் வரலாறு. கோவலனை ஆராயாது கொன்றது உணர்ந்த பாண்டியன் உயிர் துறப்பது "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்னும் உண்மையினை விளக்கும்.
சிலம்பு கூறும் வரிப்பாடல்கள் மிகச் சிறந்த இசைப்பாடல்களாகும். பழந்தமிழரின் இசை, நாடகக் கலைகளை நன்கு அறிந்து கொள்ள சிலம்பு பெரிதும் துணை நிற்கின்றது.
ஆசிரியர் சமண சமயத்தைச் சார்ந்தவராயினும் பிற சமயக் கடவுளையும் புகழ்ந்து பாடுதல் அக்காலத்திய சமயப் பொறையினை இனிது விளக்கும்.
மணிமேகலை:
கோவலனுக்கும், மாதவிக்கும் தோன்றிய மணிமேகலை என்னும் மங்கை நல்லாளைக் காப்பியத் தலைவியாகப் பெற்றுள்ள இந்நூல் அவளது பெயரையேப் பெற்றுள்ளது. "மணிமேகலை துறவு" எனவும் இந்நூல் அழைக்கப்படும். கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இதன் ஆசிரியர் ஆவார் .
சிறைச் சாலையை அறச்சாலையாக்குதல், பசி நீக்குதல், பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு முதலான சீர்த்திருத்தங்களை இந்நூல் நன்கு எடுத்து உரைக்கிறது. இந்நூல் பௌத்த சமயக் கருத்துக்களை விளக்குகிறது. பசிப்பிணி படுத்தும் பாட்டினையும் அதனைத் தீர்த்தோர் அடையும் சிறப்பினையும் விளக்குகிறது.
ஆதிரை என்னும் கற்பின் நல்லாள் வரலாறு இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது.
PRAVEEN POORVARDH--தமிழ் இலக்கிய வரலாறு --6.பன்னிரு திருமுறைகள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/Praveenpoorvardhpanniruthirumuraigal.html
முடிவுரை:
இவ்வாறாக பல சிறப்புகளைக் கொண்டுள்ள சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை இவை இரண்டுமே இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
லேபிள்கள்: PRAVEEN POORVARDH-TAMIL ILAKIYA VARALARU


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு