VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
VISHARAD POORVARDH
மலர்ச்செண்டு
இடைக்காலக்கவிமலர்கள்
காளமேகக் கவிமலர்கள்
காளமேகக் கவிமலர்களில் காளமேகப் புலவர் கூறியுள்ள கருத்துக்களை தொகுத்து எழுதுக:
முன்னுரை:
இந்த கட்டுரையில் நாம் காளமேகப் புலவரின் ஒரு சில தனி பாடல்களின் கருத்துக்களை காணலாம்.
ஆசிரியர் குறிப்பு:
காளமேகக் கவிமலர்கள் என்ற இத்தனிப் பாடலை இயற்றியவர் கவி காளமேகம் . இவருடைய காலம் 15 ஆம் நூற்றாண்டு. வைணவ சமயத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வரதன். இவர் நினைத்த மாத்திரத்தில் சொன்னபடியெல்லாம் பாடும் ஆற்றல் படைத்த கவிஞர்."சிலேடை" பாடுவதிலும் வல்லவர்.
கவிஞரின் படைப்புகள்:
மூவர் அம்மானை , திருவானைக்கா உலா, சித்திரமடல், பரப்பிரம்ம விளக்கம் என்னும் நூல்களை படைத்துள்ளார். இவருடைய தனிப்பாடல்கள் தமிழ் நாவலர் சரிதை, தனிச் செய்யுள் சிந்தாமணி, தனிப்பாடற்றிரட்டு, பெருந்தொகை ஆகிய நூல்களில் காணலாம்.
கவிஞரின் கவித்திறம் :
கவிஞர் தன் கவித்திறம் இம் என்று சொல்லும் முன்னே 700,800 பாடல்களையும், அம் என்று சொல்லும் முன்னே 1000 பாடல்களையும் படைக்கவல்ல ஆற்றல் உண்டு சிறுவனே.... சும்மா இருந்தாலும் இருப்பேன். பாடத்தொடங்கினால் பெரிய கார் மேகமாய் பொழிவேன்.
வால் எங்கே
கர்வம் கொண்ட புலவர்களை நோக்கி உலகம் போற்றும் புலவர்களே! நீங்கள் கவிராயர் என்றால் உங்களுடைய நீண்ட வால் எங்கே ? வயிறு எங்கே? முன்னால் இருக்கவேண்டியே கால் எங்கே? குழிவிழுந்த கண் எங்கே? என வினவுகிறார். (கவி-குரங்கு ) என்று பொருள்படும்படி எள்ளி நகையாடுகிறார்.
குடத்திலே கங்கை அடங்கும்:
ஆகாய கங்கையானது-கங்கை ,விண்ணுக்கும் அடங்காமலும் , இமய மலைக்கும் அடங்காமலும் , மண்ணுக்கும் அடங்காமலும், பெருக்கி ஓடி பயந்து வந்தாலும் அந்த கங்கையை பெண்ணாகிய உமா தேவியை தனது இடப்பக்கத்திலே வைத்துக்கொண்டிருக்கும் சிவபெருமானின் சடாமகுடத்திலே அடங்கி போய் விடும்.
ஈயேற மலை குலுங்கும்:
ஆயர் படியிலே கண்ணனாக அவதரித்து இருந்த நாராயணனை இடைச்சி மத்தால் அடித்ததால் வாயில் புண் ஏற்பட்டது. அதனால் அதில் ஈ மொய்க்க தொடங்கிய போதிலே வாரணங்கள் எட்டும் , மகாமேரு மலையும், ஏழு கடலும், ஏழு உலகமும் அசைவு கண்டது.
ஏனென்றால் இந்த உலகத்தை தன்னகத்தே வைத்துள்ள பெருமானின் உடல் அசைவதால் இவை அனைத்தும் குலுங்கின.
மத்தால் அடித்தது:
வாமனனாகி வந்து உலகனைத்தையும் தான் தாமரை திருவடிகளால் அளந்த வேத மனம் கமழும் திருவாயுடையவன் . கண்ணன் இவன் . பெருமையுடைய திருமால் இவன் என்றும் கருதாமல் அவனை இடைச்சி மத்தால் அடித்தாளே..
VISHARAD POORVARDH --மலர்ச்செண்டு --1.பெரியபுராணம்
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhperiyapuranam.html
நீ ஏழையானால்:
நீ எளியவனானால் தாண்டி (கங்கை) ஒருத்தி உன் தலைமீது ஏறிக்கொண்டாள் ஒருவன் தான் காலில் போட்டிருக்கும் செருப்பை கொண்டு உன்னை அடித்தான். வில் முறியும்படி உன்னை ஒருவன் அடித்தான். பெருமானை எளியவன் என்று கருதியே அவர்கள் இந்த செயலை செய்தனர் என்று கூறுகிறார்.
எந்த வீனை தீர்ப்பார்:
இது ஒரு நையாண்டி பாடலாக வேளுரரான சிவ பெருமானிடம் உனக்கே வாதக்காலாம். அவர் மைத்துனருக்கு நீரிழிவு நோயாம். அவர் பிள்ளைக்கு விநாயகனுக்கு தொந்தி வயிறு உள்ளவன்.
சிவபெருமான் காற்றே திருவடியான நடன நிலையில் இருக்கிறன் அதை தான் வாதக்கால் என்றும் , கடவுள் விஷ்ணு எப்போதுமே நீரிலே துயில்வதனால்=நீரிழிவு அவருக்கு நீரிழிவு என்றும் பாடுகின்றார். தன்னுடைய வீட்டு குறைகளையே தீர்க்க முடியாத உன்னால் எந்த வீனை தீர்க்க முடியும்?
ஆறுமுகன் பெருமை:
முருகப்பெருமானிடத்து உன்னுடைய தந்தை சிவன் பிச்சை எடுத்து உண்பவன். உன்னுடைய தாய் மலை நாட்டு நீலி ஆவாள். உன்னுடைய மாமன் கிருஷ்ணன் வெண்ணை திருடி தின்றவன். பெருவயிறு உடைய விநாயகன் உன்னுடைய அண்ணன் ஆவான். இவை தான் உன்னுடைய பெருமைகளா என பாடுகிறார்.
முடிவுரை:
இவ்வாறாக காளமேக புலவரினுடைய காளமேக கவிமலரின் கருத்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல்
VISHARAD POORVARDH -இலக்கிய கனிகள் -2.தம்பியர்
லேபிள்கள்: Visharad Poorvardh-Malarcchendu


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு