வெள்ளி, 28 அக்டோபர், 2022

Grammer WORDS/GRAMMAR REALATED WORDS IN HINDI TAMIL ENGLISH

 இலக்கணம் சம்மந்தமான வார்த்தைகள் 

grammer words

व्याकरण  संबंध शब्द 


written

 எழுத்து மொழி

 लिकित भाषा 


spoken 

பேச்சு மொழி  

कथित भाषा  



letter 

எழுத்து

 वर्ण 


word 

வார்த்தை 

शब्द 


sentence 

சொற்றொடர் 

वाक्य  

லேபிள்கள்:

புதன், 19 அக்டோபர், 2022

VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள் 5.மதுரை மாநகர்

VISHARAD POORVARDH

இலக்கிய கனிகள் 

5.மதுரை மாநகர் 


மதுரை மாநகரின் சிறப்பை  விவரிக்கவும்?

 


முன்னுரை:


            "நற்றுரை மாந்தர் போற்றும் பார்மன்னுதொன்மைப் புகழ் கொண்டது பாண்டிநாடு" என்பது சேக்கிழரின் திருவாக்கு. இந் நாட்டின் பெருமை சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டு உள்ளது.  

            கூடல், ஆலவாய், கடம்பவனம், கன்னிபுரம், முதலான பல பெயர்களை கொண்ட புகழ் கொண்ட மதுரை மாநகரின் சிறப்புகளை இங்கு காண்போம். 


மதுரை மாநகரின் சிறப்பு :


              பத்துப்பாட்டுள்  ஒன்றான மதுரை காஞ்சியில் உலக நிலையாமை நெடுஞ்செழியனுக்கு உணறதுவாதற்காக மாங்குடி மருதனார் அவர்களால் மதுரை நகர்  குறித்து கூறுவதை காணலாம். 

          ஆழந்துள்ள நீரையுடைய கிடங்குகளும், விண்ணுற ஓங்கிய மதில்களும், வலிமை மிகுந்த வாயில்களும், மேகம் தவழும் மலை போன்ற உயர்ந்த மாடங்களும்  பெற்று விளங்குகிறது மதுரை மாநகர் . 

           கல்வி, கொடை , தவம் முதலிய நற்செயல்களுக்காக எடுக்கபெற்ற கொடிகளும் மதுரை நற்செயல்களுக்காக எடுக்கப் பெற்ற கொடிகளும் மதுரையில் அருவிகள் போல அசைகிறது. 



மதுரையின் தொழில்வளம் :


                      அழகிய மணிகளுக்குத் துளையிடும் சிலர். பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர் சிலர். பூவும் , புகையும் விற்பர் சிலர். அரிய ஓவியம் வரைவோரும் அங்கு இருந்தனர். மடிபுடவைகளை நான்கு தெருக்களிலும் நின்று விற்பர் சிலர். 


                 நறுமணம் கமழும் பூக்களைப் மதுரைக கடைத்தெருக்களில் சிலர் விற்பர். பல வகையான மாலைகளை விற்பர் சிலர். பண்ணிறம்  கொண்ட நறுமானமுடியாய பொற்  சுண்ணங்களை விற்பர் சிலர். வேறு சிலர் பாக்குடன், வெற்றிலையும் விற்பர் சிலர். 


             மதுரை நகரை ஒரு தராசுத் தட்டிலும், உலக பொருள்கள் அனைத்தையும்  மற்றொரு தட்டிலும் வைத்தால் மதுரையின் தட்டு தாழ்ந்து காணப்படும் எனடிரூ மதுரை நகரின் சிறப்பை பரிபாடல் பகர்கிறது. 



"அலந்துகடை  யறியா  வளங்கெழு  தாரமொடு

மிக்குப்  புகழேய்திய  பெரும்பெயர்  மதுரை"


என்று மதுரை காஞ்சியில் கூறப்பட்டுள்ளது. 


நூல்கள் :


            மதுரையின் சிறப்புளை குறித்து பாதுப்பாட்டில் மதுரை காஞ்சியில் மாங்குடி மருதனார் பாடியுள்ளார். 

          திருமுருகற்றுப்படை, எட்டுத்தொகை போன்ற நூல்களில் பாடப்பட்டு உள்ளது. 

         ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பான் கல்வியின் சிறப்பினை குறித்து பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.  

Visharad poorvardh-இலக்கிய கனிகள்-1. திருமந்திரம்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/visharad-poorvardh-1.html

விழா:


              மதுரையில் கோவில்களில் திருவிழாக்கள் இனிது நடைபெற்றது. மேகம் போன்று வரையாமற் கொடுக்கும் செல்வரும், பூந்தொடி மகளிரும் விழாக்களை காண சென்றனர். 


உணவுச்சாலை:


             மதுரையில் சோறிடும் சாலைகள் பல இருந்தன.. பலா , வாழை, முந்திரி போன்ற கனிகளும், இலைக்கறிகளையும், ஊண் கலந்த சோற்றையும், பலவகை கிழங்குகளையும் அங்கு படைப்பார். மதுரையில் இட்லி, மற்றும் மதுரை மல்லி மிகவும் பிரசித்தி பெற்றது. 


மதுரை மாநகரின் முக்கிய இடங்கள் :           


மீனாட்சி அம்மன் கோவில்:


            மதுரை மாநகரில் மிகவும் பிரசித்து பெற்ற கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு சிவபெருமான் மற்றும் மீனாட்சி அம்மன் இருவருக்குமான கோவில் உள்ளது. இங்கு மீனாட்சி அம்மன் சன்னிதானம் முதன்மையாக உள்ளது. 

      பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனால் கட்டபட்டது. 

        இங்கு சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், அம்மன் தேரோட்டம், புட்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


ஜல்லிக்கட்டு :


               வருடம் தோறும் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்று விளங்குகிறது.


அழகர் கோவில் :


                   மதுரையின் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவில்  . இத்தலம் சோலை மலை , மாவிருங்குன்றம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது.    இக்கோவில் முத்தரையர் என்னும் மன்னரால் கட்டபட்டது. 

            இங்கு கருவறையின்  பெருமாள் ஸ்ரீபரமஸ்வாமி  எனப்படுகிறார். உற்சவமூர்த்தி அழகர், சுந்தரபெருமாள் ஆவார். 


திருமலை நாயக்கர் மஹால் :


                மதுரையை ஆண்ட நாயக்க மன்னரால் கட்டபட்டது. இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.  


            இந்த மஹாலில் உள்ள தூண்கள் மிகவும் புகழ் பெற்றது. இது 82 அடி உயரமும், 19 அடி அகலமும் கொண்டுள்ளது. 

VISHARAD POORVARDH -மலர்ச்செண்டு -சீதை அனுமனது சந்திப்பு

https://todayisagooddayhindi.blogspot.com/2022/11/visharad%20poorvardh%20malarchendu%20kambaramayanam%20%20%20.html

முடிவுரை:


                     இவ்வாறாக சங்ககாலம் முதலே பல பெருமைகளையும், சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது மதுரை மாநகரம்.









         


லேபிள்கள்:

வியாழன், 6 அக்டோபர், 2022

ABBRIVATIONS

ABBRIVATIONS


 DBMS 


DATA BASE SYSTEM


CA


COMPUTER ARCHITECTURE


CITU


CENTRE OF INDIAN TRADE UNIONS


ECG


ELECTRO CARDIO GRAM


FTP 


FILE TRANSFER PROTOCOL


GUI


GRAPHICAL USER INTERFACE


GSM


GLOBAL SYSTEM FOR MOBILE COMMMUNICATION


லேபிள்கள்: ,

சனி, 1 அக்டோபர், 2022

PRAVESHIKA-தமிழ் பொழில் -1- புறநானுறு

புறநானூறு துணை கொண்டு கபிலரும் பாரியும் விளக்குக ?


  முன்னுரை:

 

               பறம்பு என்ற நாட்டிற்கும், மற்றும் பறம்பு மலைக்கும் தலைவனாக விளங்கியவன் பாரி . இவன் வேளிர் குல தலைவன். மூவேந்தரும் ஒன்றிணைந்தாலும் முற்றுகையிட்டும் கைப்பற்ற முடியாத பறம்பு தலைவன்.

               எனினும் அவர்களால் வஞ்சகமாக அழிக்கப்பட்டவன். 

             அத்தகைய சிறப்பு வாய்ந்த பாரியை பற்றி புலவர் கபிலர் புகழ்ந்து பாடிய செய்யுள்கள் கற்போர் உள்ளங்களை கலங்க செய்வதாக அமைந்து இருக்கிறது.  

                  அந்த செய்யுளை பற்றி இங்கு காண்போம்.


கபிலரும் பாரியும் :


தெய்வமும் பாரியும் :

  

                  நல்லவை ஆனாலும் தீயவை ஆனாலும்,  குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவானாலும் ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் தெய்வங்கள் "யாம் அவற்றை ஏற்க மாட்டோம்" என்று கூறாமல் அதனை விரும்பி ஏற்கும். 


 PRAVESHIKA---தமிழ் பொழில்-1---8.முரசு 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikamurasubharathiyar.html

                    அதுபோல அறிவில்லாதவரும், அற்ப  குணத்தாராயினும் பாரியை பாடி  புகழ்ந்து சென்றால், அவர்களுக்கும் கூட உவந்து வழங்குவதையே பாரி தனது கடமையாக கருதும் பெருவண்மை  உடையவன்.


மாரியும், பாரியும் :


                     செந்நாப்புலவர்கள் அனைவரும் 'பாரி பாரி' என்று அவனையே புகழ்கின்றார்களே? வழங்குவது பாரி ஒருவன் அல்லவே? உலகம் காப்பதற்கு இங்கு மாரியும் உள்ளதன்றோ? 


          இங்கு புலவர் கபிலர் பாரியை இகழ்ந்தது போல புகழ்ந்து உள்ளார்.


பறம்பும் பாரியும் :

                   

                  குறத்தி அடுப்பில் வைத்து எரித்த கடைக்கொள்ளி சந்தன மரமாதலின் அதில் இருந்து வெளிவரும் நறுமண புகை வேங்கை பூங்கொம்பில் ஊடே சென்று பரவி நிற்கும். அத்தகைய மலைச்சாரலை உடைய பறம்பினை பாடி வருவோர்க்கெல்லாம்  பங்கிட்டு கொடுத்த பேரருள் உடையவன் பாரி. பரிசிலர் இரந்தால், வாரேன் என்று கூட சொல்லாது அப்போதே அவர் உடமையாகி விடுபவன் பாரி.


மூவேந்தர் முன் கபிலர் :


                          மூங்கில் நெல்லும், பலாப்பழமும், வள்ளிக்கிழங்கும், தேனும் ஆகிய நான்கும் உழவு செய்யாமலே தானாக விளையக்கூடிய பெருமை உடையது பறம்பு நாடு.  வானளாவிய உயரமும், அகலமும் உடைய நாடு. மலையினுடைய சுனைகள் வான்மீன் போன்று எண்ணற்று விளங்கும். 

               எனவே மரத்துக்கு ஒரு யானை என நீங்கள் கட்டியிருந்தாலும்,  எல்லா இடமும் தேரால் நிறைந்து இருந்தாலும், பாரியை உங்களால் வெல்ல இயலாது. நீங்கள் மூவரும் ஒன்று சேர்ந்தாலும் அவனை வெல்ல இயலாது. ஆகவே நீங்கள் பாடி பரிசு பெரும் பரிசிலர் போல யாழிசையுடன், விறலியர் சூழ ஆடியும், பாடியும் சென்றால் அவன் நாட்டையும், மலையையும் உங்களுக்கு பரிசாக வழங்குவான். அதுவே சிறந்த வழி என்று கபிலர் கூறுகிறார்.


யாமும் பாரியும் :


                               வஞ்சனை இல்லாது எதிர்த்து நின்று பகைவரை கொல்லும் பெரும்படையை உடையவர்கள் தான் நீங்கள் மூவரும். இருப்பினும் உங்களால் பாரியை வெல்ல முடியாது. முந்நூறு ஊர்கள் உடைய இந்த நாட்டில் அனைவரும் அவனிடம் பரிசு பெற்று சென்று உள்ளனர்.  நீங்களும் பாடி வந்தால் யாமும் பாரியும் உள்ளோம். அவனுடைய பறம்பு மலையும் இருக்கிறது. 

             இங்கு கபிலர் தன்னையும் பாரியினுடைய செல்வமாக கூறும் உள்ளத்தினை காண முடிகிறது.


விறலிக்கு எளிது :


                  பெரிய கரிய மலையான இந்த பறம்பை  வெல்வது எளிதல்ல. அதனை வேலால் வெல்லுவது வேந்தர்க்கு ஒருபோதும் இயலாத காரியம். ஆனால் விறலியோ பாடி வந்தால் இதனை அடைவது எளிது.


                     

முடிவுரை :


            இந்த பாடல் அனைத்திலுமே புலவர் கபிலர் அவர்கள் பாரியின் பெருமைகளை சிறப்புகளை போற்றி புகழ்ந்து உள்ளார்.







 

லேபிள்கள்: