சனி, 1 அக்டோபர், 2022

PRAVESHIKA-தமிழ் பொழில் -1- புறநானுறு

புறநானூறு துணை கொண்டு கபிலரும் பாரியும் விளக்குக ?


  முன்னுரை:

 

               பறம்பு என்ற நாட்டிற்கும், மற்றும் பறம்பு மலைக்கும் தலைவனாக விளங்கியவன் பாரி . இவன் வேளிர் குல தலைவன். மூவேந்தரும் ஒன்றிணைந்தாலும் முற்றுகையிட்டும் கைப்பற்ற முடியாத பறம்பு தலைவன்.

               எனினும் அவர்களால் வஞ்சகமாக அழிக்கப்பட்டவன். 

             அத்தகைய சிறப்பு வாய்ந்த பாரியை பற்றி புலவர் கபிலர் புகழ்ந்து பாடிய செய்யுள்கள் கற்போர் உள்ளங்களை கலங்க செய்வதாக அமைந்து இருக்கிறது.  

                  அந்த செய்யுளை பற்றி இங்கு காண்போம்.


கபிலரும் பாரியும் :


தெய்வமும் பாரியும் :

  

                  நல்லவை ஆனாலும் தீயவை ஆனாலும்,  குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவானாலும் ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் தெய்வங்கள் "யாம் அவற்றை ஏற்க மாட்டோம்" என்று கூறாமல் அதனை விரும்பி ஏற்கும். 


 PRAVESHIKA---தமிழ் பொழில்-1---8.முரசு 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikamurasubharathiyar.html

                    அதுபோல அறிவில்லாதவரும், அற்ப  குணத்தாராயினும் பாரியை பாடி  புகழ்ந்து சென்றால், அவர்களுக்கும் கூட உவந்து வழங்குவதையே பாரி தனது கடமையாக கருதும் பெருவண்மை  உடையவன்.


மாரியும், பாரியும் :


                     செந்நாப்புலவர்கள் அனைவரும் 'பாரி பாரி' என்று அவனையே புகழ்கின்றார்களே? வழங்குவது பாரி ஒருவன் அல்லவே? உலகம் காப்பதற்கு இங்கு மாரியும் உள்ளதன்றோ? 


          இங்கு புலவர் கபிலர் பாரியை இகழ்ந்தது போல புகழ்ந்து உள்ளார்.


பறம்பும் பாரியும் :

                   

                  குறத்தி அடுப்பில் வைத்து எரித்த கடைக்கொள்ளி சந்தன மரமாதலின் அதில் இருந்து வெளிவரும் நறுமண புகை வேங்கை பூங்கொம்பில் ஊடே சென்று பரவி நிற்கும். அத்தகைய மலைச்சாரலை உடைய பறம்பினை பாடி வருவோர்க்கெல்லாம்  பங்கிட்டு கொடுத்த பேரருள் உடையவன் பாரி. பரிசிலர் இரந்தால், வாரேன் என்று கூட சொல்லாது அப்போதே அவர் உடமையாகி விடுபவன் பாரி.


மூவேந்தர் முன் கபிலர் :


                          மூங்கில் நெல்லும், பலாப்பழமும், வள்ளிக்கிழங்கும், தேனும் ஆகிய நான்கும் உழவு செய்யாமலே தானாக விளையக்கூடிய பெருமை உடையது பறம்பு நாடு.  வானளாவிய உயரமும், அகலமும் உடைய நாடு. மலையினுடைய சுனைகள் வான்மீன் போன்று எண்ணற்று விளங்கும். 

               எனவே மரத்துக்கு ஒரு யானை என நீங்கள் கட்டியிருந்தாலும்,  எல்லா இடமும் தேரால் நிறைந்து இருந்தாலும், பாரியை உங்களால் வெல்ல இயலாது. நீங்கள் மூவரும் ஒன்று சேர்ந்தாலும் அவனை வெல்ல இயலாது. ஆகவே நீங்கள் பாடி பரிசு பெரும் பரிசிலர் போல யாழிசையுடன், விறலியர் சூழ ஆடியும், பாடியும் சென்றால் அவன் நாட்டையும், மலையையும் உங்களுக்கு பரிசாக வழங்குவான். அதுவே சிறந்த வழி என்று கபிலர் கூறுகிறார்.


யாமும் பாரியும் :


                               வஞ்சனை இல்லாது எதிர்த்து நின்று பகைவரை கொல்லும் பெரும்படையை உடையவர்கள் தான் நீங்கள் மூவரும். இருப்பினும் உங்களால் பாரியை வெல்ல முடியாது. முந்நூறு ஊர்கள் உடைய இந்த நாட்டில் அனைவரும் அவனிடம் பரிசு பெற்று சென்று உள்ளனர்.  நீங்களும் பாடி வந்தால் யாமும் பாரியும் உள்ளோம். அவனுடைய பறம்பு மலையும் இருக்கிறது. 

             இங்கு கபிலர் தன்னையும் பாரியினுடைய செல்வமாக கூறும் உள்ளத்தினை காண முடிகிறது.


விறலிக்கு எளிது :


                  பெரிய கரிய மலையான இந்த பறம்பை  வெல்வது எளிதல்ல. அதனை வேலால் வெல்லுவது வேந்தர்க்கு ஒருபோதும் இயலாத காரியம். ஆனால் விறலியோ பாடி வந்தால் இதனை அடைவது எளிது.


                     

முடிவுரை :


            இந்த பாடல் அனைத்திலுமே புலவர் கபிலர் அவர்கள் பாரியின் பெருமைகளை சிறப்புகளை போற்றி புகழ்ந்து உள்ளார்.







 

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு