PRAVEEN POORVARDH---வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVEEN POORVARDH
வாலி வதைப் படலம்
வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை யாவை?
முன்னுரை:
வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை:
- சிறிய எண்ணங்களையே எண்ணாத வாலி இராமனை நோக்கி, நம்பி, நீ உயிர்களுக்கெல்லாம் தாயை போலவும், அறம் , நடுநிலைமை, சால்பு என்ற குணங்களின் வடிவம் போலவும் காட்சி தருகிறாய். உனது உயர்ந்த நன்நெறியை நாய் போன்ற எங்களால் உணர முடியுமா? ஆதலால் என்னுடைய செயலை பொறுத்துக் கொள்வாயாக என வேண்டினான்.
- எமது தலைவனான இராமபிரபுவே, என்னை ஒன்றும் அறியாத குரங்கு என்று கருதி நான் கூறிய பழிச் சொற்களை உன் உள்ளத்தில் கொள்ளாதே. எனது கொடிய இந்த பிறவிக்கு அருமருந்தான தலைவனே நான் கூறும் வேண்டுகோளை கேட்பாயாக .
- நாய் போல இருந்த என் ஆவி போகும் நேரத்தில் எனக்கு அறிவைத் தந்தாய். நீ மும்முர்த்திகளுக்கான அதிகாரணனான ஸ்ரீமன்நாராயணன் ஆவாய். பாவம், அறம் , பகை, உறவு எல்லாம் நீயே என்று இராமபிரானை புகழ்ந்து கூறினான்.
- முப்புரம் எரிந்த சிவபெருமான் முதலிய தேவர்கள் எனக்கு அருளிய வரங்களை எல்லாம் பழுதுபடச் செய்தும் குற்றமில்லாத வலிமை மிக்க எனது மார்பைத் துளைத்தும் என் உயிரை உட்கொண்ட உனது அம்பே சிறந்ததாகும். அதனை விட சிறந்த அறம் வேறேதுமில்லை.
- மிக்க வலிமை உடைய சிவபிரான் தன்னைத் துதிப்பவர்களுக்கு சிறந்த வரங்களை விடாமல் கொடுத்தல் ஒழிவில்லாத ஒப்பற்ற உன் திருநாமம் ஒன்றைக் கூறும் பேரன்பு உடைமையால் உண்டாகும்.
- எல்லா உயர்திணை, அஃறிணைப் பொருள்களும் ஆறுவகைப் பருவங்களும், அப்பொழுது மலரும் மணமும் போல எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்திருப்பவனே. நீ எத்தகையவன், உன் தன்மை யாது என என் அறிவினால் அறிந்தேன். ஆகையால் உன்னால் கிடைக்கும் இந்த முத்தி எனக்கு கிடைப்பது மிகப்பெரிய அருமை.
- அழிவற்ற அறத்தையே வடிவாக உள்ள உன்னை கண்டுகொண்டேன். பண்டு தொட்டு என்னை தொடர்ந்து வரும் தீமைகள் இனி தொடராது. ஏனேனில் எனது தீமைகளுக்கெல்லாம் உன்னுடைய இந்த தண்டனையே எனக்கு முக்தி அளிக்கும்.
- என்னை கொல்வதற்காக என் தம்பி உன்னை அழைத்து வந்து சிறு குரங்குகளுடன் ஆலோசித்து இந்த ஆட்சியை அவன் பெற்று அழியா வீட்டுலகில் வாழும் சிறப்பை எனக்கு வழங்கினான். இது எனக்கு கிடைத்த சிறந்த உதவி ஆகும்.
- சித்திரத்தில் வரைந்த வடிவம் போல இருக்கும் அழகிய வடிவத்தை உடையவனே! எளியவன் ஆன நான் உன்னிடம் வேண்டக்கூடிய வரம் ஒன்றுள்ளது. அது யாதெனில் என் தம்பி சுக்கிரவன் பூக்களில் உள்ள தேனை குடித்துவிட்டு தீச்செயல்களைச் செய்வானாயினும் அவன் மேல் கோபம் கொண்டு என்மீது ஏவிய இயம அம்பினை ஏவாதே என வேண்டினான்.
- இராமபிரானே உன்னிடம் நான் பிச்சையாக கேட்க கூடிய இன்னொரு வரம் ஒன்றுள்ளது . உன் தம்பியர், என் தம்பியான சுக்கிரீவனை உன் அண்னனை கொன்றவன் என்று பழிக்காமல் பார்த்துக்கொள்வாயாக. இது என் வினை பயனாகும். இதை யாராலும் வெல்ல முடியாது.
- பிறகு அனுமனை பற்றி கூறுகையில் இந்த அனுமனை உன்கையில் உள்ள வில்லுக்கு சமமாக எண்ணுவாய். என் தம்பி சுக்கிரீவனை உன் தம்பியாக நினைப்பாயாக. இவர்களை போல உனக்கு உதவக் கூடியவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். இவர்களுடைய உதவியினால் நீ சீதா பிராட்டியை தேடித் பெறுவாயாக என்றான்.
முடிவுரை:
- Praveen poorvardh--இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள்
- https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhvalivadhaipadalamramanvaliyayaikollakaranam.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhvaliramanaiigandhukurudhal.html
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHVALIVADHAIPPADALAM.html
லேபிள்கள்: PRAVEEN POORVARDH-VALIVADHAIPPADALAM


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு