VISHARAD POORVARDH---மலர்ச்செண்டு---சிங்கன் சிங்கி உரையாடல்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
VISHARAD POORVARDH
மலர்ச்செண்டுஇடைக்காலக்கவிமலர்கள் 2.குற்றாலக் குறவஞ்சி
குற்றாலக்குறவஞ்சியில் சிங்கன், சிங்கி இடையே நடந்த உரையாடலை தொகுத்து எழுதுக:
முன்னுரை:
குற்றாலக்குறவஞ்சியை இயற்றியவர் திரிகூட ராசப்ப கவிராயர். இவர் நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தை அடுத்திருக்கும் மேலகரம் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய காலம் 18- ஆம் நூற்றாண்டு. இந்நூல் குறவஞ்சி
என்னும் பிரபந்த வகையை சார்ந்தது. இந்நூலில் சிங்கன் சிங்கியின் உரையாடல் பெண்களின் அணிவகைகளும் அவற்றிற்கான உவமைகளும் எளிய கற்பனை செறிவோடு அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கன், சிங்கி உரையாடல்:
சிங்கன், சிங்கி இடையே நிகழ்ந்த உரையாடல்களை இங்கு காணலாம்.
சிங்கன் அவள் அணிந்துள்ள அணிகலன்களை பற்றி வினவ அதற்கு சிங்கியின் பதிலுமாக இந்த உரை அமைகிறது.
சிங்கன் சிங்கியிடம் இத்தனை நாள் என்னுடன் சொல்லாமல் எங்கே சென்றாய் சிங்கி என்று வினவினான்.
பூங்கொத்துக்கள் அணிந்துள்ள கூந்தலை உடைய பெண்களுக்கு விரிவாக குறி சொல்ல போனேனடா சிங்கா என மறுமொழி கூறினாள்.
உன்னை பார்க்கும் போது அதிசயமாக தோன்றுகிறது. ஆனால் சொல்லவும் பயமாக இருக்குதடி சிங்கி என்று கூற தோன்றிய விஷயத்தை பயமின்றி சொல்லடா சிங்கி என்றாள்.
உன் காலுக்கு மேலே பெரிய விரியன் கடித்துக் கொண்டு இருக்கிறது.
சிங்கி சேலத்து நாட்டிலே குறிசொல்லி பெற்ற சிலம்பு கிடக்குதடா சிங்கா .
சேலத்தார் இட்ட அந்த சிலம்புக்கு மேலாக, என்னவோ திருகளும், முறுகலுமாக இருக்கிறதே அது என்னடி சிங்கி?
அது கலிங்க நாடார் எனக்கு வரிசையாகக் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா .
நீண்டும், குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல நெளிந்த நெளிவு என்னடி சிங்கி? அது பாண்டியனார் மகள் விரும்பிக் கேட்ட குறிகளுக்காக இட்ட காலனியடா சிங்கா.
செத்த தவளையை ஏன் காலில் கட்டியிருக்கிறாய் சிங்கி? அது ஆண்டவன் குற்றாலரின் சிந்நிதிப் பெண்கள் எனக்கு அணிவித்த மணிக் கெச்சமடா சிங்கா.
VISHARAD POORVARDH -மலர்ச்செண்டு -சீதை அனுமனது சந்திப்பு
https://todayisagooddayhindi.blogspot.com/2022/11/visharad%20poorvardh%20malarchendu%20kambaramayanam%20%20%20.html
உன் சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி சுருண்டி கிடப்பதேன் சிங்கி? கண்டிய நாட்டிலே முன்பு நான் குறி கூறி பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா..
மென்மையான உன் அழகிய தொடைகளுக்கு மேலே வலைக்குருத்தை இப்படி விரித்து மடித்து வைத்தது யாரடி ?
திருநெல்வேலியார் தந்த சல்லடை சேலை அது. அதை நான் நெறிப்படுத்தி உடுத்தி இருக்கிறேன்.
எட்டு பறவைகள் குமுறுவது போன்று குரல் ஒலிக்கும், கழுகு போன்ற உன்னுடைய கழுத்திலே பத்து, எட்டு பாம்புகள் கிடக்கின்றனவே அது ஏதடி சிங்கி .
குட்டத்து நாட்டாரும், காயங்குளத்தாரும் இட்ட சவடியடா அது என,
அவனுடைய கேள்விகளுக்கு பதில் உரைத்தாள் சிங்கி.
VISHARAD POORVARDH-ஆண்டாள் திருப்பாவை
https://todayisagooddayhindi.blogspot.com/2023/05/%20%20%20VISHARAD%20POORVARDH.html
முடிவுரை:
இவ்வாறாக சிங்கன், சிங்கியுடைய உரையாடல் நடைபெறுகிறது.
VISHARAD POORVARDH- இலக்கிய கனிகள் -3.இலக்கிய கரும்பு
VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல்
லேபிள்கள்: Visharad Poorvardh-Malarcchendu


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு