PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --7.ஆழ்வார்கள் பன்னிருவர்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVEEN POORVARDH
தமிழ் இலக்கிய வரலாறு 7.ஆழ்வார்கள் பன்னிருவர்
ஆழ்வார்கள்:
வைணவ சமயத்தின் முதன்மை தெய்வமாகிய திருமாலைப் பற்றி செய்யுட்களை இயற்றிவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர் அவர்களைப் பற்றி இங்கு காணலாம்.
முதலாழ்வார் மூவர்:
ஆழ்வார்களுள் காலத்தால் முற்பட்டவர்கள் பொய்கையார் இயற்றியது முதல் திருவந்தாதி , பூதத்தாழ்வார் பாடியது இரண்டாம் திருவந்தாதி , பேயாழ்வார் பாடியது மூன்றாம் திருவந்தாதி என்னும் மூவர் ஆவர்.
இவர்கள் திருமாலைக் கண்டு அனுபவித்த ஆனந்தமே திருப்பாடல்களாக உருப்பெற்றது.
திருமழிசையாழ்வார்:
திருமழிசை என்னும் தலத்தில் பிறந்தவர் திருமழிசையாழ்வார். திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன இவர் பாடியவை ஆகும்.
PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --10.உரையாசிரியர்கள்
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/PRAVEEN%20POORVARDH%20--%20%20%20--10.%20.html
நம்மாழ்வார்:
"வேதம் தமிழ் செய்த மாறன்" எனப் போற்றப்படும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் தோன்றியவர் ஆவர்.
இவரால் பாடப்பட்டவை திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பனவாகும்.
மதுரகவியாழ்வார்:
இவர் நம்மாழ்வாரையே தெய்வமெனக் கொண்டு அவரையே பாடிப் பரவியவர் ஆவார்.
இவர் பாடியது 'கண்ணின்நுண் சிறுத்தாம்பு' என்னும் நூலாகும்.
குலசேகராழ்வார்:
இவர் சேரமன்னராக இருந்தவர். இவர் அரச வாழ்க்கையை விட பெரிதும் ஈடுபட்டது திருமாலின் திருவடிகளே ஆகும்.
இவரது பாடல்கள் "பெருமாள் திருமொழி " ஆகும்.
பெரியாழ்வார்:
திருமாலுக்கு பல்லாண்டு பாடிய இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றினார். பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துக்கு இவரது பாடல்களே மூல காரணம் என்பர்.
ஆண்டாள்:
இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு திருமகள். சூடிக் கொடுத்த நாச்சியார் என்னும் திருப்பெயர் கொண்டவர்.
இவர் பாடியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை.
கண்ணனையே தன் கணவனாக கருதி வாழ்ந்தவர்.
தொண்டரடிப்பொடியாழ்வார்:
இவருடைய இயற்பெயர் விப்பிரநாராயணர். இவர் திருமண்டங்குடியைச் சேர்ந்தவர்.
இவர் பாடிய நூல்கள் திருமாலை , திருப்பள்ளியெழுச்சி ஆகியவை.
திருப்பாணாழ்வார்:
இவர் உறையூரில் பிறந்தவர். அமலனாதிப் பிரான் என்னும் நூலைப் பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார்:
திருக்குறையலூரில் பிறந்த இவருடைய இயற்பெயர் நீலன். பெரிய திருமொழி, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்னும் நூல்கள் இவர் பாடியவை ஆகும்.
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/Praveenpoorvardhpanniruthirumuraigal.html
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhuraiyasiriyargal.html
Praveen poorvardh--இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள்
லேபிள்கள்: PRAVEEN POORVARDH-TAMIL ILAKIYA VARALARU


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு