VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள் 5.மதுரை மாநகர்
VISHARAD POORVARDH
இலக்கிய கனிகள்
5.மதுரை மாநகர்
மதுரை மாநகரின் சிறப்பை விவரிக்கவும்?
முன்னுரை:
"நற்றுரை மாந்தர் போற்றும் பார்மன்னுதொன்மைப் புகழ் கொண்டது பாண்டிநாடு" என்பது சேக்கிழரின் திருவாக்கு. இந் நாட்டின் பெருமை சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டு உள்ளது.
கூடல், ஆலவாய், கடம்பவனம், கன்னிபுரம், முதலான பல பெயர்களை கொண்ட புகழ் கொண்ட மதுரை மாநகரின் சிறப்புகளை இங்கு காண்போம்.
மதுரை மாநகரின் சிறப்பு :
பத்துப்பாட்டுள் ஒன்றான மதுரை காஞ்சியில் உலக நிலையாமை நெடுஞ்செழியனுக்கு உணறதுவாதற்காக மாங்குடி மருதனார் அவர்களால் மதுரை நகர் குறித்து கூறுவதை காணலாம்.
ஆழந்துள்ள நீரையுடைய கிடங்குகளும், விண்ணுற ஓங்கிய மதில்களும், வலிமை மிகுந்த வாயில்களும், மேகம் தவழும் மலை போன்ற உயர்ந்த மாடங்களும் பெற்று விளங்குகிறது மதுரை மாநகர் .
கல்வி, கொடை , தவம் முதலிய நற்செயல்களுக்காக எடுக்கபெற்ற கொடிகளும் மதுரை நற்செயல்களுக்காக எடுக்கப் பெற்ற கொடிகளும் மதுரையில் அருவிகள் போல அசைகிறது.
மதுரையின் தொழில்வளம் :
அழகிய மணிகளுக்குத் துளையிடும் சிலர். பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர் சிலர். பூவும் , புகையும் விற்பர் சிலர். அரிய ஓவியம் வரைவோரும் அங்கு இருந்தனர். மடிபுடவைகளை நான்கு தெருக்களிலும் நின்று விற்பர் சிலர்.
நறுமணம் கமழும் பூக்களைப் மதுரைக கடைத்தெருக்களில் சிலர் விற்பர். பல வகையான மாலைகளை விற்பர் சிலர். பண்ணிறம் கொண்ட நறுமானமுடியாய பொற் சுண்ணங்களை விற்பர் சிலர். வேறு சிலர் பாக்குடன், வெற்றிலையும் விற்பர் சிலர்.
மதுரை நகரை ஒரு தராசுத் தட்டிலும், உலக பொருள்கள் அனைத்தையும் மற்றொரு தட்டிலும் வைத்தால் மதுரையின் தட்டு தாழ்ந்து காணப்படும் எனடிரூ மதுரை நகரின் சிறப்பை பரிபாடல் பகர்கிறது.
"அலந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
மிக்குப் புகழேய்திய பெரும்பெயர் மதுரை"
என்று மதுரை காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.
நூல்கள் :
மதுரையின் சிறப்புளை குறித்து பாதுப்பாட்டில் மதுரை காஞ்சியில் மாங்குடி மருதனார் பாடியுள்ளார்.
திருமுருகற்றுப்படை, எட்டுத்தொகை போன்ற நூல்களில் பாடப்பட்டு உள்ளது.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பான் கல்வியின் சிறப்பினை குறித்து பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.
Visharad poorvardh-இலக்கிய கனிகள்-1. திருமந்திரம்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/visharad-poorvardh-1.html
விழா:
மதுரையில் கோவில்களில் திருவிழாக்கள் இனிது நடைபெற்றது. மேகம் போன்று வரையாமற் கொடுக்கும் செல்வரும், பூந்தொடி மகளிரும் விழாக்களை காண சென்றனர்.
உணவுச்சாலை:
மதுரையில் சோறிடும் சாலைகள் பல இருந்தன.. பலா , வாழை, முந்திரி போன்ற கனிகளும், இலைக்கறிகளையும், ஊண் கலந்த சோற்றையும், பலவகை கிழங்குகளையும் அங்கு படைப்பார். மதுரையில் இட்லி, மற்றும் மதுரை மல்லி மிகவும் பிரசித்தி பெற்றது.
மதுரை மாநகரின் முக்கிய இடங்கள் :
மீனாட்சி அம்மன் கோவில்:
மதுரை மாநகரில் மிகவும் பிரசித்து பெற்ற கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு சிவபெருமான் மற்றும் மீனாட்சி அம்மன் இருவருக்குமான கோவில் உள்ளது. இங்கு மீனாட்சி அம்மன் சன்னிதானம் முதன்மையாக உள்ளது.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனால் கட்டபட்டது.
இங்கு சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், அம்மன் தேரோட்டம், புட்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஜல்லிக்கட்டு :
வருடம் தோறும் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்று விளங்குகிறது.
அழகர் கோவில் :
மதுரையின் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவில் . இத்தலம் சோலை மலை , மாவிருங்குன்றம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. இக்கோவில் முத்தரையர் என்னும் மன்னரால் கட்டபட்டது.
இங்கு கருவறையின் பெருமாள் ஸ்ரீபரமஸ்வாமி எனப்படுகிறார். உற்சவமூர்த்தி அழகர், சுந்தரபெருமாள் ஆவார்.
திருமலை நாயக்கர் மஹால் :
மதுரையை ஆண்ட நாயக்க மன்னரால் கட்டபட்டது. இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
இந்த மஹாலில் உள்ள தூண்கள் மிகவும் புகழ் பெற்றது. இது 82 அடி உயரமும், 19 அடி அகலமும் கொண்டுள்ளது.
VISHARAD POORVARDH -மலர்ச்செண்டு -சீதை அனுமனது சந்திப்பு
https://todayisagooddayhindi.blogspot.com/2022/11/visharad%20poorvardh%20malarchendu%20kambaramayanam%20%20%20.html
முடிவுரை:
இவ்வாறாக சங்ககாலம் முதலே பல பெருமைகளையும், சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது மதுரை மாநகரம்.
லேபிள்கள்: Visharad poorvardh-Ilakkiya kanigal


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு