திங்கள், 28 நவம்பர், 2022

VISHARAD POORVARDH -மலர்ச்செண்டு -சீதை அனுமனது சந்திப்பு

VISHARAD POORVARDH


 மலர்ச்செண்டு 

காப்பிய கவிமலர் 

கம்பராமாயணம் 





சீதை மற்றும் அனுமனது சந்திப்பு குறித்து தொகுத்து எழுதுக:


முன்னுரை:


             கம்பராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது. இந்நூல் பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிடகிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும்  ஆறு பெரும் காண்டங்களை கொண்டுள்ளது. 

           இங்கு நாம் காண போகும் பகுதி சுந்தர காண்டத்தில் ஆறாவது பகுதி ஆன சூளாமணிப் படலாமாகும்.  இங்கு நாம் சீதையின் துயர் போக்க எண்ணிய அனுமனது எண்ணம், சீதா தேவியின் கற்பு மேம்பாடு, போன்றவற்றை காணலாம். 


அனுமனது விண்ணப்பம்:


                இராவணன் கவர்ந்து சென்ற இடத்தில் சீதை மிகவும் துயர் கொண்டாள். அந்த சமயத்தில் அங்கு சென்றான் அனுமன். அங்கு சீதையிடம்   தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு  உங்களை மீட்ட  பிறகு இராவணனை கொள்வது சிறந்தது ஆகாது. நீங்கள் இங்கே படும் துயரை நான் எவ்வாறு இராமபிரனிடம் சொல்ல முடியும்?  நீங்கள் என தோள் மீது அமர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை இப்போதே இராமபிரனிடம் உங்களை கொண்டு சேர்க்கிறேன் என்று கூறினான். 
  

சீதையின் மறுப்புரை:


          அனுமனது விண்ணப்பத்தை கேட்ட சீதை நீ கூறுவது உன்னுடைய வீரத்திற்கு உகந்தது அல்ல.  நீ ஐம்புலங்களை  அடக்கியவன் என்றாலும், ஆடவன், உன் தோள் மீது அமர்வது என் பெண்மைக்கு இழுக்கு" என்றாள்.  

    இலங்கை  அரக்கியரின் இவ்விடம் எலும்பு மலையாக மாறவிட்டால் என்னுடய பெருமையை எவ்வாறு உணர்த்துவேன். என் சொல்லால் இந்த உலகையே எரித்து விடமுடியும். ஆனால் அவ்வாறு செய்தால் அது இராமனுக்கு இழுக்காகும்.  இராமனின் திருமேனியை மட்டுமே தீண்டும் நான் வேறு ஒருவரை தீண்ட மாட்டேன் என்று அனுமனிடம் உரைத்தாள். 


சீதையை புகழ்ந்து கூறுதல்:


 
                 சீதையின் வார்த்தைகளின் மூலம் அவளுடைய கருத்துக்களை முழுமையாக உணர்ந்து கொண்டான் அனுமன். வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் பேராண்மை அவளிடம் காணப்பட்டது. இராவணனுடய கொடுஞ்செயலுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. பிறகு பிரிவு துயரால்  வாடும் இராமனுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை கனிந்த மொழிகளால் அனுமனிடம் சொல்லி அனுப்பினாள். 

VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்   5.மதுரை மாநகர் 
https://todayisagooddayhindi.blogspot.com/2022/10/MADHURAI%20MANAGAR%20.html

இராமனுக்கு சீதையின் செய்தி :

  
       என்னை கரம் பிடித்த நாளில் "இப்பிறவியில் நான் இரண்டு பெண்களை மணக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார். "அவரோடு இருந்து அரசு ஆளவும், உடன் வீற்றிருக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை.  இருப்பினும் அடுத்த பிறவியிலும்  நான் அவரது மனைவியாக வரம் அளிக்க வேண்டும்.
 நான் இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிருடன் இருப்பேன் அதற்குள் அவர் என்னை மீட்க வேண்டும் என இராமனிடம் கூறுமாறு சீதை கூறினாள்.

சீதையை அனுமன் தேற்றுதல்:


    
            மரணத்தை பற்றி சிந்திக்க இது நேரம் இல்லை. ஊண் உறக்கம் இல்லாமல் தவிக்கும் இராமபிரனுக்கு நீங்கள் இருக்கும் இடம் அறியாத குறை தவிர படை எடுக்க தடை ஏதும் இல்லை என்று ஆறுதல் கூறினான். சீதை என்னும் நெருப்பின் மேல் இராமனது  அன்பு என்னும் பெரும் காற்று வீசுவதால் இந்த இலங்கை நகரமே பொன்னை போல உருகப் போகிறது என்றான். நான் இராமனை கண்டவுடனே, இராமனும், சுக்கீரவனும் வருவதற்கு முன்பே குரங்குகள் இங்கு வந்து ஆர்ப்பரிக்கும். வானரப்படைகள் இங்கு வந்து தங்கும் எனவும் அனுமன் கூறினான். 

சீதை சூளாமணி அளித்தல்:


   சீதை அனுமனிடம் தன் தலையில் சூடியிருந்த சூடாமணியை எஎடுத்து அவனிடம் தந்தாள். 
" இது எங்கள் மணநாளை நினைவுபடுத்தும் அடையாளம் " என்றாள். அது சீதையின் ஆடையில் முடித்து வைக்கப்பட்டிருந்தது.  இறுதியில் அனுமன் சீதையை மூன்று முறை வலம் வந்து அவளின் ஆசியை பெற்று அங்கிருந்து புறப்பட்டான். 



 
      















லேபிள்கள்:

திங்கள், 14 நவம்பர், 2022

PRAVESHIKA தமிழ்பொழில்-முத்தபள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் உரையாடல

PRAVESHIKA


தமிழ்பொழில்-1 

7. முக்கூடற்பள்ளு 



 முத்தபள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் இடையே நடந்த உரையாடலை தொகுத்து எழுதுக:


முன்னுரை:


            பள்ளு என்பது தொண்ணூறறு ஆறு  வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இங்கு முக்கூடல் அழகர் மீது பாடாப்பெற்றதால் இந்நூல் முக்கூடல் பள்ளு எனப்பெறும். 

          முக்கூடலில் வாழும் பள்ளனது மூத்த மனைவி முக்கூடல் பள்ளி திருமாலை கடவுளாகக் கொண்டவர்.  இளைய மனைவி மருதூர்ப்பள்ளி சிவபெருமானை வழிபடுபவர். இவ்விருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் இலக்கிய நலம்  நிறைந்தது. 


முக்கூடலின் சிறப்பு :


          முக்கூடலில் மேகங்கள் கோபுரத்திற்கு இணையாக  உயர்ந்து நிற்கும். கொடிகளோ வானத்தை மூடி நிற்கும். சோலைகள் அண்டச்சுவரை ஒட்டி நிற்கும். தேவர்களின் தலைவனாகிய செண்டலங்கரார் அழகர் எழுந்து அருளிய முக்கூடலே எங்கள் ஊர். 

         அழகர் எழுந்து அருளிய முக்கூடலில் ஒளிபொருந்திய இரத்தின கற்கள் வீதிகளில் கிடக்கும். வண்டுகள் இனிமையாக பாடி  இரும்பையும் உருக்கும். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை சாதிகள் நீதி, நேர்மையை நிலைநாட்டும் சிறப்பு வாய்ந்தது. குளங்களில் நீர் எடுக்கும் போது வாளை மீன்கள் குடங்களில் புகுந்து அவற்றின் கழுத்தை நெருக்கும். இளைய எருமைகள் மலர்களை மேய்ந்து போதை கொள்ளும். எங்கும் குளிர்ந்த மலர்கள் மலர்ந்து இருக்கும். 

        இவையே முக்கூடலின் சிறப்பு ஆகும். 


மருதூரின் வளம்:


         சங்குகள் மேடைகளில் எங்கும்  உலவும். மீன்களோ  அரங்குகள் இடையே தாவிச்செல்லும். வானலவு உயர்ந்த மரங்கள் சந்திரனோடு உராயும். அதனால் தெருக்களில் மகரந்த துள்கள் தூவப்பெறும். சோலைகளின் இடையே இளம் பச்சைக்கிளிகள் இருக்கும். 

        கடலில் தோன்றிய ஆலகால விஷயத்தை உண்ட மருதீசர் எழுந்து அருளிய மருதூரே இளைய பள்ளி. 

       ஊமத்த மலரினை நாளும் அணிகின்ற சிவபெருமான் எழுந்து அருளிய மருதூரில் முத்துக்கள் நீர் பாய்கின்ற மடைகளை அடைக்கும். ஆலைகள் சாலைகளில் கரும்பினை உடைத்து சாறு எடுக்கும். கடல் அலைகளின் ஆரவார ஓசையையும் அடக்கும் அளவுக்கு பேரிகை என்ற தோல் கருவி ஓசை எழுப்பும். நாள்தோறும் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் ஊருக்கு அழகு சேர்க்கும். பல்வகை செல்வங்களும் மருதூரில்  கிடைக்கும்.


      இவ்வாறு பல வகை சிறப்புகளை கொண்டது மருதூர். 


PRAVESHIKA-தமிழ் பொழில் -1- புறநானுறு 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/10/PRAVESHIKA%20TAMILPOLIL%20PURANANOORU.html

ஆசூர் வடகரை நாட்டின் சிறப்பு:


               ஆசூர்  வடகரை நாட்டில் உயர்ந்த தென்னை மரங்களின் காய்களை அருகில் உள்ள பாக்குமரங்கள் தாங்கும். பாக்கு மரமோ தன்னுடய காய்களை மாமரத்தினை தாங்க செய்யும். மாமரங்களோ தன்னுடய மாபழங்களை பலா மரத்தின் மேல் சாய்க்கும்.

      பலா மரங்களோ தன்னுடைய பழங்களை வாழை மரத்தின் மேல் சாய்க்கும். 

இதிலிருந்து ஆசூர் வடகரை நாட்டின் தென்னை, பாக்கு, வாழை, பலா மரங்கள் அதிகம் என்பது நமக்கு நன்கு புலப்படுகிறது. 


          ஆசூர் வடகரை நாட்டில் மக்கள் யாரிடமும் எந்த களங்கமும், குற்றமும் இல்லை. சந்திரன் ஒன்றிற்கே அங்கு களங்கம் உண்டு. தூண்களில் கட்டபடுகின்ற யானைக்கு மட்டுமே மதம் உண்டு. மக்கள் யாருக்கும் கடம் என்பது இல்லை.  இங்கு கடம் என்பதன் அர்த்தம்  கடன்  என்பது ஆகும். ஆனால் இங்கு உள்ள மக்கள் யாருக்கும் கடன் பட்ட வாழ்க்கை இல்லை. 

            வானத்தில் உள்ள பறவைகளுக்கே {சிறை} உண்டு. மக்கள் யாருக்கும் சிறை வாழ்க்கை கிடையாது. 

          நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகளுக்கே திரி உண்டு. மக்கள் யாருக்குமே மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. 

        உலைக் களத்தில் இருக்கும் கொல்லருடைய அமமியே குறைப்பட்டிருக்கும் ஆனால் மக்கள் யாருக்கும் எந்த குறையும் இல்லை. 

         செய்யுள்களில் தான் அரிய பொருள் மறைந்து இருக்கும். மக்கள் வாழ்க்கையில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. பூங்கொம்புகளே மெலிந்து இருக்கும். மக்கள் யாருக்கும் எந்த மெலிவும் இருக்காது. 

       இவை அனைத்துமே ஆசூர் வடகரை நாட்டின் பல்வேறு சிறப்புகள் ஆகும். 


சீவல மங்கைத் தென்கரை நாட்டின் சிறப்புகள் :


            சீவல மங்கைத் தென்கரை நாட்டில் சூரிய காந்தி மலரே வெயிலில் காயும். மக்கள் யாரும் வெயில் காய மாட்டார்கள். தயிர் மட்டுமே மத்தை கொண்டு கடையும் போது கலங்கும். மக்கள் யாரும் மனம் கலங்க மாட்டார்கள். நிமிடங்களும், வாரமும் மட்டுமே அழியும். மக்கள் யாருக்கும் எந்த அழிவும் இல்லை. காய்ந்த செந்நெல் பயிரே முதிர்ந்ததும் தலை வணங்கும். மக்கள் யாரும் எதிரி போன்றவர்களுக்கு தலை வணங்க மாட்டார்கள். முனிவர் உள்ளமே தனித்திருக்கும். மக்கள் யாரும் தனித்து இருக்க மாட்டார்கள். சந்தனக்கட்டை ஒன்றே நாளும் தேய்க்கப்படுவதால் தேயும். மக்கள் யாருக்கும் எந்த குறையும் இல்லை. 

  

      தாமரை மலர்கள் தன் தலையை நீட்டி இஞ்சியை தொடும். இஞ்சியோ  மஞ்சளின் கழுத்தை மெல்ல தொடும். மஞ்சளோ செந்நெல் பயிரோடு சேர்ந்து இருக்கும். 

       இதன் மூலமாக சீவல மங்கைத் தென்கரை நாட்டின் நீர்வளம், நிலவளம் நன்கு புலனாகிறது. அங்கு தாமரை, இஞ்சி, மஞ்சள், கரும்பு போன்றவை மிகுதி என அரிய முடிகிறது. 

         இவை அனைத்துமே சீவல மங்கைத் தென்கரை நாட்டின் சிறப்புகள் ஆகும். 


முடிவுரை:


      இவ்வாறாக மூத்த பள்ளியும், இளைய பள்ளியும் தங்களுடைய நாட்டு வளங்களை கூறுவதாக இந்த உரையாடல் அமைகிறது. இந்த உரையாடல் இலக்கிய நலம் நிறைந்ததாக இருக்கிறது.     






லேபிள்கள்:

புதன், 9 நவம்பர், 2022

GRAMMATICAL TERMS/இலக்கணச் சொற்கள் /व्याकरण शब्द

 GRAMMATICAL TERMS

இலக்கணச் சொற்கள்

व्याकरण शब्द 

masculine  


 ஆண்பால் 


पुल्लिंग 


  femnine 


  பெண்பால்


    स्त्रीलिंग  

singular

ஒருமை


एकवचन  


    plural

  பன்மை

   बहुवचन  


 tense

காலம்

काल  




present

நிகழ்காலம்

वर्तमानकाल  


past

இறந்தகாலம்

भूतकाल  


future

எதிர்காலம்

भविष्यतकाल 

லேபிள்கள்: