திங்கள், 14 நவம்பர், 2022

PRAVESHIKA தமிழ்பொழில்-முத்தபள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் உரையாடல

PRAVESHIKA


தமிழ்பொழில்-1 

7. முக்கூடற்பள்ளு 



 முத்தபள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் இடையே நடந்த உரையாடலை தொகுத்து எழுதுக:


முன்னுரை:


            பள்ளு என்பது தொண்ணூறறு ஆறு  வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இங்கு முக்கூடல் அழகர் மீது பாடாப்பெற்றதால் இந்நூல் முக்கூடல் பள்ளு எனப்பெறும். 

          முக்கூடலில் வாழும் பள்ளனது மூத்த மனைவி முக்கூடல் பள்ளி திருமாலை கடவுளாகக் கொண்டவர்.  இளைய மனைவி மருதூர்ப்பள்ளி சிவபெருமானை வழிபடுபவர். இவ்விருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் இலக்கிய நலம்  நிறைந்தது. 


முக்கூடலின் சிறப்பு :


          முக்கூடலில் மேகங்கள் கோபுரத்திற்கு இணையாக  உயர்ந்து நிற்கும். கொடிகளோ வானத்தை மூடி நிற்கும். சோலைகள் அண்டச்சுவரை ஒட்டி நிற்கும். தேவர்களின் தலைவனாகிய செண்டலங்கரார் அழகர் எழுந்து அருளிய முக்கூடலே எங்கள் ஊர். 

         அழகர் எழுந்து அருளிய முக்கூடலில் ஒளிபொருந்திய இரத்தின கற்கள் வீதிகளில் கிடக்கும். வண்டுகள் இனிமையாக பாடி  இரும்பையும் உருக்கும். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை சாதிகள் நீதி, நேர்மையை நிலைநாட்டும் சிறப்பு வாய்ந்தது. குளங்களில் நீர் எடுக்கும் போது வாளை மீன்கள் குடங்களில் புகுந்து அவற்றின் கழுத்தை நெருக்கும். இளைய எருமைகள் மலர்களை மேய்ந்து போதை கொள்ளும். எங்கும் குளிர்ந்த மலர்கள் மலர்ந்து இருக்கும். 

        இவையே முக்கூடலின் சிறப்பு ஆகும். 


மருதூரின் வளம்:


         சங்குகள் மேடைகளில் எங்கும்  உலவும். மீன்களோ  அரங்குகள் இடையே தாவிச்செல்லும். வானலவு உயர்ந்த மரங்கள் சந்திரனோடு உராயும். அதனால் தெருக்களில் மகரந்த துள்கள் தூவப்பெறும். சோலைகளின் இடையே இளம் பச்சைக்கிளிகள் இருக்கும். 

        கடலில் தோன்றிய ஆலகால விஷயத்தை உண்ட மருதீசர் எழுந்து அருளிய மருதூரே இளைய பள்ளி. 

       ஊமத்த மலரினை நாளும் அணிகின்ற சிவபெருமான் எழுந்து அருளிய மருதூரில் முத்துக்கள் நீர் பாய்கின்ற மடைகளை அடைக்கும். ஆலைகள் சாலைகளில் கரும்பினை உடைத்து சாறு எடுக்கும். கடல் அலைகளின் ஆரவார ஓசையையும் அடக்கும் அளவுக்கு பேரிகை என்ற தோல் கருவி ஓசை எழுப்பும். நாள்தோறும் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் ஊருக்கு அழகு சேர்க்கும். பல்வகை செல்வங்களும் மருதூரில்  கிடைக்கும்.


      இவ்வாறு பல வகை சிறப்புகளை கொண்டது மருதூர். 


PRAVESHIKA-தமிழ் பொழில் -1- புறநானுறு 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/10/PRAVESHIKA%20TAMILPOLIL%20PURANANOORU.html

ஆசூர் வடகரை நாட்டின் சிறப்பு:


               ஆசூர்  வடகரை நாட்டில் உயர்ந்த தென்னை மரங்களின் காய்களை அருகில் உள்ள பாக்குமரங்கள் தாங்கும். பாக்கு மரமோ தன்னுடய காய்களை மாமரத்தினை தாங்க செய்யும். மாமரங்களோ தன்னுடய மாபழங்களை பலா மரத்தின் மேல் சாய்க்கும்.

      பலா மரங்களோ தன்னுடைய பழங்களை வாழை மரத்தின் மேல் சாய்க்கும். 

இதிலிருந்து ஆசூர் வடகரை நாட்டின் தென்னை, பாக்கு, வாழை, பலா மரங்கள் அதிகம் என்பது நமக்கு நன்கு புலப்படுகிறது. 


          ஆசூர் வடகரை நாட்டில் மக்கள் யாரிடமும் எந்த களங்கமும், குற்றமும் இல்லை. சந்திரன் ஒன்றிற்கே அங்கு களங்கம் உண்டு. தூண்களில் கட்டபடுகின்ற யானைக்கு மட்டுமே மதம் உண்டு. மக்கள் யாருக்கும் கடம் என்பது இல்லை.  இங்கு கடம் என்பதன் அர்த்தம்  கடன்  என்பது ஆகும். ஆனால் இங்கு உள்ள மக்கள் யாருக்கும் கடன் பட்ட வாழ்க்கை இல்லை. 

            வானத்தில் உள்ள பறவைகளுக்கே {சிறை} உண்டு. மக்கள் யாருக்கும் சிறை வாழ்க்கை கிடையாது. 

          நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகளுக்கே திரி உண்டு. மக்கள் யாருக்குமே மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. 

        உலைக் களத்தில் இருக்கும் கொல்லருடைய அமமியே குறைப்பட்டிருக்கும் ஆனால் மக்கள் யாருக்கும் எந்த குறையும் இல்லை. 

         செய்யுள்களில் தான் அரிய பொருள் மறைந்து இருக்கும். மக்கள் வாழ்க்கையில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. பூங்கொம்புகளே மெலிந்து இருக்கும். மக்கள் யாருக்கும் எந்த மெலிவும் இருக்காது. 

       இவை அனைத்துமே ஆசூர் வடகரை நாட்டின் பல்வேறு சிறப்புகள் ஆகும். 


சீவல மங்கைத் தென்கரை நாட்டின் சிறப்புகள் :


            சீவல மங்கைத் தென்கரை நாட்டில் சூரிய காந்தி மலரே வெயிலில் காயும். மக்கள் யாரும் வெயில் காய மாட்டார்கள். தயிர் மட்டுமே மத்தை கொண்டு கடையும் போது கலங்கும். மக்கள் யாரும் மனம் கலங்க மாட்டார்கள். நிமிடங்களும், வாரமும் மட்டுமே அழியும். மக்கள் யாருக்கும் எந்த அழிவும் இல்லை. காய்ந்த செந்நெல் பயிரே முதிர்ந்ததும் தலை வணங்கும். மக்கள் யாரும் எதிரி போன்றவர்களுக்கு தலை வணங்க மாட்டார்கள். முனிவர் உள்ளமே தனித்திருக்கும். மக்கள் யாரும் தனித்து இருக்க மாட்டார்கள். சந்தனக்கட்டை ஒன்றே நாளும் தேய்க்கப்படுவதால் தேயும். மக்கள் யாருக்கும் எந்த குறையும் இல்லை. 

  

      தாமரை மலர்கள் தன் தலையை நீட்டி இஞ்சியை தொடும். இஞ்சியோ  மஞ்சளின் கழுத்தை மெல்ல தொடும். மஞ்சளோ செந்நெல் பயிரோடு சேர்ந்து இருக்கும். 

       இதன் மூலமாக சீவல மங்கைத் தென்கரை நாட்டின் நீர்வளம், நிலவளம் நன்கு புலனாகிறது. அங்கு தாமரை, இஞ்சி, மஞ்சள், கரும்பு போன்றவை மிகுதி என அரிய முடிகிறது. 

         இவை அனைத்துமே சீவல மங்கைத் தென்கரை நாட்டின் சிறப்புகள் ஆகும். 


முடிவுரை:


      இவ்வாறாக மூத்த பள்ளியும், இளைய பள்ளியும் தங்களுடைய நாட்டு வளங்களை கூறுவதாக இந்த உரையாடல் அமைகிறது. இந்த உரையாடல் இலக்கிய நலம் நிறைந்ததாக இருக்கிறது.     






லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு