PRAVEEN POORVARDH-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை-தேசிய கொடியின் சிறப்புகள்
PRAVEEN POORVARDH
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
தேசிய கொடியின் சிறப்புகளாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கூறும் கருத்துக்கள் யாவை?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கூறும் தேசிய கொடியின் சிறப்புகள்:
முன்னுரை:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் நம் தேசிய கொடியின் சிறப்புகளாக கூறியுள்ள கருத்துக்களை இங்கு காணலாம்.
ஆசிரியர் குறிப்பு:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் ஜூலை மாதம், 27, 1876 ஆம் ஆண்டு சிவதாணுப் பிள்ளை, ஆதி லட்சுமி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார்.
எம். ஏ படித்த பிறகு தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார்.
கவிமணியின் நூல்கள் :
கவிமணி அவர்கள் ஆசிய ஜோதி, மலரும் மாலையும், உமர் கய்யாம் பாடல்கள், காந்தளூர் சாலை போன்ற பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார் .
தேசிய கொடியின் சிறப்புகள்:
உலகிலே சிறந்த உயர்ந்த மலை இமயமலை ஆகும். அதன் உச்சியிலே பறக்கிறது நமது தேசிய கொடி. வீரர்கள் துணிந்து ஏறி நட்ட கொடி. அனைவரும் வணங்கிடும் கொடி.
கங்கையை விட புனிதமான கொடி. கதரின் இனிய மணம் கமழும் கொடி. மங்கையர் நோன்பு இருந்து நெய்த கொடி. அவர்களின் வாழ்வு தழைக்க வந்த மங்கள கொடி. மின்னல் இடித்தாளும் அஞ்சாத உயர்ந்த கொடி. தன்னை மிதித்து எறிந்த வீரர்களும் இன்று தாழ்ந்து தலைவணங்கும் கொடி.
சத்தியம் தவறாமல் காக்கும் கொடி. சாதி சமய வழக்கங்களை போக்கும் கொடி. உத்தம வீரர்களும், பத்தினிகளும் தங்களுடைய உயிருக்கு உயிராக போற்றும் கொடி.
Praveen Poorvardh-Kavidhai Poonga-பெரியோரைத் துணைக் கோடல்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/praveen%20poorvardh%20kavidhai%20poonga%20thirukkural%20periyorai%20thunai%20kodal.html
காந்திமகான் அவர்கள் வாழ்த்தி எடுத்த கொடி. தொண்டர்களின் கனவையும் நனவாக்கும் கொடி. நாட்டின் வளத்தை வளர்க்க வந்த மந்திர கொடி. தீய சோம்பலையும் துரத்தி ஓட்டும் கொடி.
கிழவரையும் குமரராக மாற்றும் கொடி. அழுதவனையும் சிரிக்க வைக்கும் கொடி. ஏழை அடிமையை கூட ஆளாக்கூடியவனாய் மாற்றும் கொடி. நம் தாய் நாட்டிற்காக சிறை சாலையில் தவம் செய்தவர்களுக்கு சிறந்த உபயமளிக்கும் கொடி. ஏழை அழுத கண்ணீர் துடைக்கும் கொடி. நித்தமும் உழைத்து முன்னேற நம்மை ஊக்கப்படுத்தும் கொடி.
உள்ளத்திற்கு ஊக்கத்தை அளிக்கும் கொடி. தேசத்திற்கான சேவையை செய்ய தூண்டும் கொடி. நம்மை ஆண் சிங்கமாகவே மாற்றும் கொடி. நம் நாடு நமதாக கண்ட கொடி. நம் தாய் திருநாட்டை நாமே அரசாள வைத்த கொடி. ஓட்டு குடிசையின் மீதும் ஆடும் கொடி. மானம் உருவாக வந்த கொடி. சிறப்பு மிக்க இதனை மாசடைய செய்வது பாவம் ஆகும்.
நாம் உடம்பில் உயிருள்ள வரையில் மிக ஊக்கமாய் இருந்து நாம் நம் கொடியை காத்திட வேண்டும்.
முடிவுரை:
இவ்வாறாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் நம் தாய் திருநாட்டின் தேசிய கொடியின் பல்வேறு சிறப்புகளை வழங்கி இருக்கிறார். அத்தகைய சிறப்பு மிக்க நம் தாய் திருநாட்டின் நம் தேசிய கொடியை போற்றி வணங்குவோம்
PRAVEEN POORVARDH-வாலி வதைப்படலம்-கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEEN%20POORVARDH-%20-%20%20%20.html
லேபிள்கள்: Praveen Poorvardh-Kavidhai Poonga


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு