சனி, 30 டிசம்பர், 2023

VISHARAD UTTARARDH--- रहीम -सुधा ---HINDI POEM

 VISHARAD UTTARARDH


रहीम -सुधा 

 

कंठस्थ  दोहा -1 से 10 तक 



1.रहिमन प्रति सराहिये, मिले होत रंग दून |

ज्यों हरदी जरदी तजै , सपदी चून ||


ரஹீம் கூறுகிறார் மஞ்சளும், சுண்ணாம்பும் ஒன்று சேரும் போது , மஞ்சள் தன்னுடைய மஞ்சள் நிறத்தையும், சுண்ணாம்பு தன்னுடைய வெள்ளை  நிறத்தையும் விட்டுவிட்டு எப்படி சிவப்பு நிறமாக மாறுகிறதோ அது போல , நாம் அனைவரும் அனைவரின் வேறுபாடுகளை கலைந்து அன்பு பாராட்ட வேண்டும்.  


KABIRDAS DOHE
https://todayisagooddayhindi.blogspot.com/2023/12/KABIRDASDOHE.html

2. रहिमन लाख भली करौ, अगुनी न जाइ |

राग सुनत पय पियत हूँ, सांप सहज धरि खाइ ||


பாம்புக்கு நாம் என்னதான் புல்லங்குழலில் இசைத்து அதற்கு பால் ஊற்றினாலும் , அதனுடைய குணம் என்றுமே மாறாது. அது போல ஒருசில தீய குணங்களை உடைய மனிதரகளுக்கு என்னதான் நாம் லட்சம் நன்மைகள் செய்தாலும் அவர்களின் தீய குணம் என்றுமே மாறாது.  



3. रहिमन कहत सूपेट सों , क्यों न भयो तू पीठ |

भूखे मान बिगाराहू , भरे  बिगाराहू डीठ ||


நம்முடைய வயிறு எப்போதும் பசியோடு இருக்கும் போது அந்த பசியை போக்கிக் கொள்ள தீய செயல்கள் மற்றும் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடும். அதே வயிறு பசி நிரம்பியதும், சில தீய செயல்களில் ஈடுபடும். அதனாலேயே வயிரே நீ ஏன் என் முதுகாக இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.   


4.अंतर दाव लगी रहै, धुवाँ न प्रगटै सोई |

कै जिय आपन जानही , कै जिहि  बिति होइ ||


நம் மனதில் கவலை கொள்ளும் போது, அந்த கவலை நம் உள்ளே நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கும்.  ஆனால் அதன் புகை வெளியே தெரிவதில்லை. கவலை என்பது நமக்கு துன்பத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. 






5. जदयपि अवनि अनेक हैं, तोयवंत सर ताल |

रहिमन मांसरोवरहि , मनसा करत सराल ||


இந்த பூமியில் எத்தனையோ கிணறுகள், குளங்கள், ஆறுகள் இருந்தாலும், அன்னப்பறவையின் மனம் மானசரவோரை நோக்கியே இருக்கும். 


6. मांगे घटत रहीम पद, कितो करौ बड़ काम |

तीन पैग बसुधा करी,  तऊ बवानै नाम ||


நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நாம் ஒரு விஷயத்திற்க்காக மற்றவரிடம் கை நீட்டும் போது, நாம் தானாகவே சிறியவர்கள் ஆகி விடுவோம். விஷ்ணு பகவான் மூன்று அடியை கேட்டு பலி சக்கரவரதியிடம் செல்லும் போது தன்னை ஒரு சிறிய மனிதராக ஆக்கி கொண்டு சென்றார். 


7. जेहि रहीम तन मन लियो, कियो हिये बीच भोन |

तासों सुख-दुख कहन की, रही बात अब कोन ||


நான் கடவுளிடம் என்னுடைய உடல், மனம் என அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன். என்னுடைய சுக, துக்கங்களையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். இதற்கு மேல் வேறு எதுவும் வேண்டியதில்லை. 



8. रहिमन जिह्वा बावरी, कहि गइ सरग पताल |

आपु तो कहि भीतर गयी , जूती खात कपाल ||


நமது நாக்கு ஒரு முட்டாள். அது மற்றவர்களிடம் நல்லது தீயது என அனைத்தையும் பற்றி பேசி விட்டு வாய்க்குள்ளே சென்று விடும். ஆனால் அதன் பிறகு அதற்க்குறிய பலனை அடைவது நம்முடைய தலை தான் என நாக்கை பற்றி ரஹீம் விவரிக்கிறார்.  




9. रहिमन विपदाहू  भली , जो थोरे दिन होइ |

हित अनहित या जगत में , जानि परत सब कोइ ||


ரஹீம் கூறுகிறார் நமக்கு கஷ்ட காலம் கொஞ்ச காலம் நீடிப்பதால் நல்லதே.. ஏனெனில், நம்முடைய கஷ்ட காலத்தின் போது தான், நமக்கு நல்லது நினைப்பவர்கள் யார் ,  நமக்கு தீயது நினைப்பவர்கள் யார் யார் என்று அறிய முடியும். 



10. देनहार कोऊ और है, भजेत सो दिन रैन |

लोग भरम हम पै धरैं, या ते नीचे नैन || 


ரஹீம் கடவுள் தன்னை மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக என்னை அனுப்பி வைத்தார். நான் மக்களுக்கு செய்யும் உதவிகளுக்காக மக்கள் என்னை புகழ்ந்து கூறுகின்றனர். இதன் காரணமாக நான் என்னுடைய கண்களை தாழ்த்தி கொள்கிறேன்.  அந்த புகழ்  அனைத்தும் கடவுளுக்கு உரியவை. 


 

லேபிள்கள்: ,

புதன், 27 டிசம்பர், 2023

VISHARAD UTTARARDH कबीरदास कंठस्थ दोहा -1 से 10 तक

 VISHARAD UTTARARDH


कंठस्थ  दोहा -1 से 10 तक 



 1.सीलवंत सबतें  बड़ा , सर्व रतन की खानी |

तीन लोक की संपदा, रही सील में आनी ||


       பணிவு என்பது அனைத்து நற்பண்புகளின் சுரங்கம் ஆகும். பணிவாக இருப்பதால் ஒருவன் மூவுலகத்தின் செல்வத்தையும் அவனால் அடைய முடியும்.



2.


छिमा बड़न को चाहिए, छोटन  को उत्पात |

कहा विष्णु को घटि गयो , ली भृगु मारी लात ||


     மன்னிக்கும் குணம் என்பது மிகவும் உன்னதமான விஷயம். தவறு செய்வது என்பது சிரியவர்களின் இயல்பு. தவறுகளை மன்னிப்பது என்பது பெரியவர்களின் குணம். ஒருமுறை பிருகு முனிவர் பகவான் விஷ்ணுவை உதைத்தார். ஆனால் விஷ்ணு பிருகுவை மன்னித்தார். அது தான் பெரியவர்களின் இயல்பு. 

  


3. जो जल बाढ़ नाव में, घर में बाढ़ दाम |

ढोउ हात उलीचिये , यह सज्जन कौ काम  ||


     படகில் தண்ணீர் நிரம்புவாதல், படகுக்கு ஆபத்து அதிகரித்து, படகு மூழ்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது இரு கைகளை கொண்டு அள்ளி அவற்றை வெளியேற்ற வேண்டும்.   அதே போல இல்லத்தில் செல்வம் அதிகமாகும் போதும் அவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். 


4. हाड़ बड़ा हरि भजन कर , द्रव्य बड़ा कुछ देहु |

अकल बड़ी उपहार कर, जेवन को फल येहु ||


      மனிதனே, உன்னை நீ உயர் குடி மனிதனாக கருதினால், கடவுளை தொழு . நீ பணக்காரனாக இருந்தால் அந்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவு. நீ புத்திசாலியாக இருந்தால் மற்றவர்களுக்கு உன்னுடைய அறிவை பரப்பு. அதன் மூலமே நீ இந்த உலகத்தில் பிறந்ததற்கான பலனை அடைவாய். 



5. चाह गयी चिंता मेटी, मनुवाँ बेपरवाह |

जिनको कछु न चाहिए , सोई साहंसाह ||

     

    இந்த உலகத்தில் எதையும் விரும்பாதவர்கள் அரசர்களுக்கே அரசர்கள் ஆவார். ஏனென்றால் அவர்கள் எதற்கும் ஆசைப்படாத போது அவனே கவலைகள் இல்லாதவன் ஆவான் . எனவே அவர்களின் மனமும் கவலையற்றது.

  

6. रूखा सूखा खाइकै ,ठंडा पानी पीव |

देखि बिरानी चुपड़ी , मत ललचावे जीव ||

     

       நாம் எப்போதும் நமக்கு கிடைத்தவற்றை கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். நமக்கு காய்ந்து போன உலர்ந்த சப்பாத்திகள் மற்றும் குளிர்ந்த நீர் மட்டும் கிடைத்தாலும் அதை மட்டும் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும். அதை விடுத்து வேறு ஒருவருக்கு வெண்ணை தடவிய சாப்பாத்தி கிடைத்திருப்பதை கண்டு பொறாமை கொள்ள கூடாது. 

  

7.माँगन गये सो मरि रहे , मरे तो माँगन जाहिँ |

तिनते पहले वे मरे , होत करत जो नाहिं ||


          பிச்சை எடுப்பது என்பது இறப்பதை விட மோசமானது. அப்படி இருக்க ஒருவன் எங்காவது பிச்சை எடுக்க சென்றால் அவன் இறந்தவருக்கு சமமானவர் ஆவார். அதே போல எவன் ஒருவன் இரவல் கேட்டு வந்த ஒருவருக்கு இல்லை என்று சொல்பவர் கேட்பவருக்கு முன்பே இறந்து விட்டது போல அர்த்தம்.

 

8.  माँगन मरन समान है, मत कोइ मांगाो भीख |

माँगन ते मरना भला , यह सतगुरु की सीख ||


     பிச்சை எடுப்பது என்பது இறப்பதற்கு சமம். எனவே யாரிடமும் பிச்சை எடுக்காதீர்கள். கேட்பதை விட இறப்பதே மேல் என்பது சத்குருவின் போதனை . 

 

9. मरि जाऊँ माँगूँ  नहीं  , अपने  तन के काज |

परमारथ के कारने , मोहि  न आवै लाज ||


        நான் என் வயிற்றுக்காக பிறரிடம் சென்று இரவல் கேட்க மாட்டேன். ஆனால் மற்றவர்களுக்காக இரவல் கேட்பதற்கு நான் வெட்க படுவதில்லை.  


10. धीरे धीरे रे मना , धीरे सब कुछ होय |

माली सींचै सौ घड़ा , तृ आये फल होय ||

 

      எந்த  ஒரு செயலாக இருந்தாலும் அதற்கான சரியான நேரம் வரும் போது தான் முடியும். மனதில் பொறுமை இருந்தால் எல்லா செயலும் முடியும். ஒரு தோட்டக்காரன் ஒரு மரத்திற்க்கு நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் சரியான கால நிலை வரும் போது தான் காய் காய்க்கும். அதே போல எல்லாவற்றிக்கும் அதற்குரிய காலம் வரும் வரை பொறுமையாக இருக்க  வேண்டும்.   


லேபிள்கள்: ,

திங்கள், 4 டிசம்பர், 2023

PRAVEEN UTTARARDH--कबीरदास- दोहे -----HINDI POEM-----கபீர்தாஸ்-----KABIRDAS DHOHE

PRAVEEN UTTARARDH

कबीरदास 

कंठस्थ दोहे  ----1 से 10 तक 
கபீர்தாஸ் 


अछै पुरुष इक पेड़ है, नीरंजन वाकी डार |
तिरदेवा साखा भये, पात भया संसार ||




கடவுள் ஒரு மரமாகவும், உருவமில்லாத பிரம்மம் அந்த மரத்தின் கிளையாகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற மூன்று தெய்வங்களும் கிளைகளாகவும், இந்த உலகமே அந்த மரத்தின் இலையாகவும்  இருக்கின்றது. 

चार भुजा के भजन में, भूली परे सब संत |
कबिरा सुमिरै तासूको, जाके भुजा अनंत ||

எல்லா துறவிகளும் நான்கு கரங்களை உடைய கடவுளின் பக்தியில் தன்னையே மறந்து விடுகின்றனர். ஆனால் நான் எண்ணிலடங்கா கரங்களை உடைய அந்த உருவமில்லா  பிரம்மத்தை வணங்குகிறேன். 


सगुण की सेवा करौ, निर्गुण का करू ज्ञान |
निर्गुण सगुण के परे , तहैं हमारा ध्यान ||

ஒருசிலர் உருவமுள்ள கடவுளுக்கு வணங்குகின்றனர். ஒரு சிலர் பிரம்மத்தை பற்றி அரிய விளைகின்றனர். ஆனால் நான் அந்த இரண்டுக்கும் மேலே  உள்ள  பரப்பிரம்மத்திலேயே என்னுடய கவனம் உள்ளது. 


जाको राखै सांइयाँ, मारी न सककै कोय |
बाल न बांका करि  सकै, जो जग बैरी होय ||

கடவுளின் ஆசியுள்ள ஒருவனை உலகமே எதிர்த்தலும் அவனுடைய தலை முடியை கூட  யாராலும் அசைக்க  முடியாது.


तेरा  साँई तुजझ में, ज्यों पहुपन में बास |
कस्तूरी का मिरग ज्यों, फिर फिर दूँदे घास ||

பூக்களுக்குளே   நறுமணம் உள்ளது போல, கஸ்தூரி மான் புல்லில் மீண்டும் மீண்டும் அந்த நறுமணத்தைத் தேடி வீணாகக் கலங்குவது போல, உன்னுடைய கடவுள் உனக்குலே தான் இருக்கிறார் அவரை வெளியே தேடாதே.  


ज्यों तिल माहीं तेल है , ज्यों चकमक में आगि |
तेरा  साँई तुजझ में, जागि सकै तो जागि ||

எள்ளுக்குள் எப்படி எண்ணை இருக்கிறதோ, ஒரு கல்லில் எப்படி நெருப்பு ஒளிந்து இருக்கிறதோ, அது போல கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறான் அவனை வெளிய தேடாதே.. 

नाम रतन धन पाइकै, गाँठी बांध न खोल |
नाहिं पन नहिं पारखू , नहिं गाइक नहिं मोल ||

கடவுளின் நாமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அது நவரத்தினத்தை போல, அந்த முடிச்சை அவிழ்த்து விடாதே, அதனுடைய மதிப்பிற்க்கு  எல்லையே இல்லை.   

सभी रसायन हम करी, नहीं नाम सम कोय |
रंचक घट में संचरै , सब तन कंचन होय ||

கடவுளினுடைய நாமத்தை உச்சரித்து கொண்டே இருப்பதால் என்னுடய உடலே தங்கத்தை போல ஜொலிக்க ஆரம்பித்து விட்டது. 

जैसा माया मन रामयो , तैसो नाम रमाय |
तारा मंडल बेधिकै , तब अमरापुर जाय ||

நம் மனம் எப்படி மாயையால் கவரப்பட்டு உள்ளதோ அது போல, கடவுளுடைய நாமத்தில் நம் மனம் நிலைத்தது என்றால், இந்த நட்சத்திர மண்டலத்தை பிளந்து கொண்டு சொர்க்கலோகத்தை அடையலாம்.

पानी ही ते हिम भया , हिम ही गया बिलया |
कबिरा जो था सोइ भया , अब कुछ कहा न जाय || 

பனி, நீரில் இருந்து தான் உருவாகிறது. மீண்டும் அது நீராக மாறி நீராவி ஆக மாறுகிறது. அது போல, பரமாத்வில் இருந்து தான் ஜீவாத்மா தோன்றியது. மீண்டும் அது   பரமாத்வுடனே கலக்கும். இந்த விஷயங்களை வர்ணிப்பது இயலாது. 

லேபிள்கள்: ,