திங்கள், 4 டிசம்பர், 2023

PRAVEEN UTTARARDH--कबीरदास- दोहे -----HINDI POEM-----கபீர்தாஸ்-----KABIRDAS DHOHE

PRAVEEN UTTARARDH

कबीरदास 

कंठस्थ दोहे  ----1 से 10 तक 
கபீர்தாஸ் 


अछै पुरुष इक पेड़ है, नीरंजन वाकी डार |
तिरदेवा साखा भये, पात भया संसार ||




கடவுள் ஒரு மரமாகவும், உருவமில்லாத பிரம்மம் அந்த மரத்தின் கிளையாகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற மூன்று தெய்வங்களும் கிளைகளாகவும், இந்த உலகமே அந்த மரத்தின் இலையாகவும்  இருக்கின்றது. 

चार भुजा के भजन में, भूली परे सब संत |
कबिरा सुमिरै तासूको, जाके भुजा अनंत ||

எல்லா துறவிகளும் நான்கு கரங்களை உடைய கடவுளின் பக்தியில் தன்னையே மறந்து விடுகின்றனர். ஆனால் நான் எண்ணிலடங்கா கரங்களை உடைய அந்த உருவமில்லா  பிரம்மத்தை வணங்குகிறேன். 


सगुण की सेवा करौ, निर्गुण का करू ज्ञान |
निर्गुण सगुण के परे , तहैं हमारा ध्यान ||

ஒருசிலர் உருவமுள்ள கடவுளுக்கு வணங்குகின்றனர். ஒரு சிலர் பிரம்மத்தை பற்றி அரிய விளைகின்றனர். ஆனால் நான் அந்த இரண்டுக்கும் மேலே  உள்ள  பரப்பிரம்மத்திலேயே என்னுடய கவனம் உள்ளது. 


जाको राखै सांइयाँ, मारी न सककै कोय |
बाल न बांका करि  सकै, जो जग बैरी होय ||

கடவுளின் ஆசியுள்ள ஒருவனை உலகமே எதிர்த்தலும் அவனுடைய தலை முடியை கூட  யாராலும் அசைக்க  முடியாது.


तेरा  साँई तुजझ में, ज्यों पहुपन में बास |
कस्तूरी का मिरग ज्यों, फिर फिर दूँदे घास ||

பூக்களுக்குளே   நறுமணம் உள்ளது போல, கஸ்தூரி மான் புல்லில் மீண்டும் மீண்டும் அந்த நறுமணத்தைத் தேடி வீணாகக் கலங்குவது போல, உன்னுடைய கடவுள் உனக்குலே தான் இருக்கிறார் அவரை வெளியே தேடாதே.  


ज्यों तिल माहीं तेल है , ज्यों चकमक में आगि |
तेरा  साँई तुजझ में, जागि सकै तो जागि ||

எள்ளுக்குள் எப்படி எண்ணை இருக்கிறதோ, ஒரு கல்லில் எப்படி நெருப்பு ஒளிந்து இருக்கிறதோ, அது போல கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறான் அவனை வெளிய தேடாதே.. 

नाम रतन धन पाइकै, गाँठी बांध न खोल |
नाहिं पन नहिं पारखू , नहिं गाइक नहिं मोल ||

கடவுளின் நாமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அது நவரத்தினத்தை போல, அந்த முடிச்சை அவிழ்த்து விடாதே, அதனுடைய மதிப்பிற்க்கு  எல்லையே இல்லை.   

सभी रसायन हम करी, नहीं नाम सम कोय |
रंचक घट में संचरै , सब तन कंचन होय ||

கடவுளினுடைய நாமத்தை உச்சரித்து கொண்டே இருப்பதால் என்னுடய உடலே தங்கத்தை போல ஜொலிக்க ஆரம்பித்து விட்டது. 

जैसा माया मन रामयो , तैसो नाम रमाय |
तारा मंडल बेधिकै , तब अमरापुर जाय ||

நம் மனம் எப்படி மாயையால் கவரப்பட்டு உள்ளதோ அது போல, கடவுளுடைய நாமத்தில் நம் மனம் நிலைத்தது என்றால், இந்த நட்சத்திர மண்டலத்தை பிளந்து கொண்டு சொர்க்கலோகத்தை அடையலாம்.

पानी ही ते हिम भया , हिम ही गया बिलया |
कबिरा जो था सोइ भया , अब कुछ कहा न जाय || 

பனி, நீரில் இருந்து தான் உருவாகிறது. மீண்டும் அது நீராக மாறி நீராவி ஆக மாறுகிறது. அது போல, பரமாத்வில் இருந்து தான் ஜீவாத்மா தோன்றியது. மீண்டும் அது   பரமாத்வுடனே கலக்கும். இந்த விஷயங்களை வர்ணிப்பது இயலாது. 

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு