செவ்வாய், 30 மே, 2023

VISHARAD POORVARDH-ஆண்டாள் திருப்பாவை

 visharad poorvardh

மலர்ச்செண்டு

பக்திகவிமலர்கள் 

ஆண்டாள் திருப்பாவை 


ஆண்டாள்:


       ஆண்டாள் பன்னிரு ஆள்வார்களில் ஒருவர் ஆவார். இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு திருமகள். இவர் சூடிகொடுத்த நாச்சியார் எனும் திருப்பெயரால் வழங்கப்படுகிறார்.   இவர் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற இவருடைய படைப்புகள் நாலயிரத்திவ்ய பிரப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. 

     இவர் கண்ணனை தன் கணவனாக கருதி வாழ்ந்தார். இவர் பாடிய திருப்பாவையில் இடம் பெற்றுள்ள பாடலின் விளக்கத்தை  இந்த கட்டுரையில் காணலாம். 



திருப்பாவை:


          சிறப்புமிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளம் மிக்க வசிக்கும் சிறுமிகளே, அணிகலன்களை அணிந்து இருக்கும் கன்னி பெண்களே! மார்கழியில் முழு நிலவொளி வீசும் இந்த நல்ல நாளில் நாம் நீராட போவோம். 
   
          கரிய நிறத்தினை உடைய யசோதா பிராட்டியின் சிங்கம் போன்ற மகனும் ஆன, சிவந்த கண்களை உடையவன், 
        சூரியனை போன்ற பிரகாசமான முகத்தை உடையவனுமான,  
       நாராயணனின் அம்சமான கண்ணபிரான்,          கூர்மையான வேளுடன் நம்மை பாதுகாத்து வரும் அரிய தொழிலை  செய்யும் நந்தகோபலன் நமக்கு அருள் தர காத்து இருக்கிறான். 
       
         அவனை நாம் பாடி புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். 

  
          திருமால் கண்ணாக அவதரித்த   சிறப்புமிக்க ஆயர் பாடியில் வாழும் சிறுமிகளே! நாம் இந்த உலகில் இருந்து விடுப்பட்டு, பரந்தமானின் திருவடியை அடைவதற்காக, பாவையை வணங்கி விரதம் இருக்கும் வழிமுறையை கேளுங்கள். 
   
         நெய் உண்ணக்கூடாது. பால் அருந்த கூடாது. அதிகாலையில் நீராட வேண்டும். கண்ணுக்கு மை இடக்கூடாது. மலர் சூடக்கூடாது. தீய செயல்களை மனதாலும் நினைக்க கூடாது. பிறரை பற்றி கோள் சொல்ல கூடாது. துறவிகளுக்கும், இல்லாதவர்களுக்கும் அவர்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு தர்மம் செய்ய வேண்டும்.
    
              வாமன அவதாரத்தின் மூலமாக  மூன்றடிகளால் விண்ணையும், மண்ணையும் அளந்து தன்னுடையது ஆக்கிய உத்தமனாகிய நம் பரந்தமான் கண்ணபிரானின் சிறப்பை பாடி, பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன்னாள் நீராட செல்வோம் சிறுமிகளே. இந்த விரதம் இருப்பதால் மாதம் மூன்று முறை மழை பெய்யும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் வளரும். 
     
          குவளை மலர்களில் புள்ளிகளை உடைய வண்டுகள் தேன் குடிக்க கிறங்கி கிடக்கும். வள்ளல் குணம் உடைய  பசுக்கள் பால் நிரம்ப சுரக்கும். என்றுமே  வற்றாத இத்தகைய செல்வத்தை இந்த சிறப்பு மிக்க விரதம் நமக்கு தரும். 
    
          மேகத்திற்கு அதிபதியே, உன்னிடம் ஒரு சொட்டு நீரை கூட வைத்து கொள்ளாதே! 
           கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு , உலகத்தை ஆளும் கண்ணனின் கரு நிறம் போல கருத்து,  வலிமையான தோள்களை உடைய அந்த பத்மநாபனின் கையில் உள்ள சக்கரத்தை  போல மின்னலை வீசி,  
           வலம்புரி சங்கு போல இடி போன்ற ஒலி எழுப்பி, என்றுமே வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல மழை பொழிவாயாக!
       
             அம்மழையால் நாங்கள் இங்கு மகிழ்வுடன் வாழ்வோம். 
         மார்கழி நீராடலுக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்வடைய செய்வயாக.. 
   
             ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் திருமகனாகியவனும், வியப்புக்கு உரிய செயல்களை செய்பவனும், மதுரபுரியில் அவதரித்தவனும், பெருகி ஓடும் யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன, யசோதா தாய் இடுப்பில்   கயிறை கட்ட அது ஏற்படுத்திய தழும்பை உடையவனும் ஆன கண்ணனை தூய்மையான நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். 
  
        அவனை மனதில் இருத்தி அவன் புகழ் படினாலே நாம் செய்த பாவங்களும், செய்கின்ற பாவங்களும் தீயினில் புகுந்து தூசு போல காணாமல் போய் விடும்.

       
  




  

    

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு