VISHARAD UTTARARDH--- रहीम -सुधा ---HINDI POEM
VISHARAD UTTARARDH
रहीम -सुधा
कंठस्थ दोहा -1 से 10 तक
1.रहिमन प्रति सराहिये, मिले होत रंग दून |
ज्यों हरदी जरदी तजै , सपदी चून ||
ரஹீம் கூறுகிறார் மஞ்சளும், சுண்ணாம்பும் ஒன்று சேரும் போது , மஞ்சள் தன்னுடைய மஞ்சள் நிறத்தையும், சுண்ணாம்பு தன்னுடைய வெள்ளை நிறத்தையும் விட்டுவிட்டு எப்படி சிவப்பு நிறமாக மாறுகிறதோ அது போல , நாம் அனைவரும் அனைவரின் வேறுபாடுகளை கலைந்து அன்பு பாராட்ட வேண்டும்.
2. रहिमन लाख भली करौ, अगुनी न जाइ |
राग सुनत पय पियत हूँ, सांप सहज धरि खाइ ||
பாம்புக்கு நாம் என்னதான் புல்லங்குழலில் இசைத்து அதற்கு பால் ஊற்றினாலும் , அதனுடைய குணம் என்றுமே மாறாது. அது போல ஒருசில தீய குணங்களை உடைய மனிதரகளுக்கு என்னதான் நாம் லட்சம் நன்மைகள் செய்தாலும் அவர்களின் தீய குணம் என்றுமே மாறாது.
3. रहिमन कहत सूपेट सों , क्यों न भयो तू पीठ |
भूखे मान बिगाराहू , भरे बिगाराहू डीठ ||
நம்முடைய வயிறு எப்போதும் பசியோடு இருக்கும் போது அந்த பசியை போக்கிக் கொள்ள தீய செயல்கள் மற்றும் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடும். அதே வயிறு பசி நிரம்பியதும், சில தீய செயல்களில் ஈடுபடும். அதனாலேயே வயிரே நீ ஏன் என் முதுகாக இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.
4.अंतर दाव लगी रहै, धुवाँ न प्रगटै सोई |
कै जिय आपन जानही , कै जिहि बिति होइ ||
நம் மனதில் கவலை கொள்ளும் போது, அந்த கவலை நம் உள்ளே நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கும். ஆனால் அதன் புகை வெளியே தெரிவதில்லை. கவலை என்பது நமக்கு துன்பத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.
5. जदयपि अवनि अनेक हैं, तोयवंत सर ताल |
रहिमन मांसरोवरहि , मनसा करत सराल ||
இந்த பூமியில் எத்தனையோ கிணறுகள், குளங்கள், ஆறுகள் இருந்தாலும், அன்னப்பறவையின் மனம் மானசரவோரை நோக்கியே இருக்கும்.
6. मांगे घटत रहीम पद, कितो करौ बड़ काम |
तीन पैग बसुधा करी, तऊ बवानै नाम ||
நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நாம் ஒரு விஷயத்திற்க்காக மற்றவரிடம் கை நீட்டும் போது, நாம் தானாகவே சிறியவர்கள் ஆகி விடுவோம். விஷ்ணு பகவான் மூன்று அடியை கேட்டு பலி சக்கரவரதியிடம் செல்லும் போது தன்னை ஒரு சிறிய மனிதராக ஆக்கி கொண்டு சென்றார்.
7. जेहि रहीम तन मन लियो, कियो हिये बीच भोन |
तासों सुख-दुख कहन की, रही बात अब कोन ||
நான் கடவுளிடம் என்னுடைய உடல், மனம் என அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன். என்னுடைய சுக, துக்கங்களையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். இதற்கு மேல் வேறு எதுவும் வேண்டியதில்லை.
8. रहिमन जिह्वा बावरी, कहि गइ सरग पताल |
आपु तो कहि भीतर गयी , जूती खात कपाल ||
நமது நாக்கு ஒரு முட்டாள். அது மற்றவர்களிடம் நல்லது தீயது என அனைத்தையும் பற்றி பேசி விட்டு வாய்க்குள்ளே சென்று விடும். ஆனால் அதன் பிறகு அதற்க்குறிய பலனை அடைவது நம்முடைய தலை தான் என நாக்கை பற்றி ரஹீம் விவரிக்கிறார்.
9. रहिमन विपदाहू भली , जो थोरे दिन होइ |
हित अनहित या जगत में , जानि परत सब कोइ ||
ரஹீம் கூறுகிறார் நமக்கு கஷ்ட காலம் கொஞ்ச காலம் நீடிப்பதால் நல்லதே.. ஏனெனில், நம்முடைய கஷ்ட காலத்தின் போது தான், நமக்கு நல்லது நினைப்பவர்கள் யார் , நமக்கு தீயது நினைப்பவர்கள் யார் யார் என்று அறிய முடியும்.
10. देनहार कोऊ और है, भजेत सो दिन रैन |
लोग भरम हम पै धरैं, या ते नीचे नैन ||
ரஹீம் கடவுள் தன்னை மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக என்னை அனுப்பி வைத்தார். நான் மக்களுக்கு செய்யும் உதவிகளுக்காக மக்கள் என்னை புகழ்ந்து கூறுகின்றனர். இதன் காரணமாக நான் என்னுடைய கண்களை தாழ்த்தி கொள்கிறேன். அந்த புகழ் அனைத்தும் கடவுளுக்கு உரியவை.
லேபிள்கள்: HINDI DHOHE, HINDI POEM


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு