புதன், 27 டிசம்பர், 2023

VISHARAD UTTARARDH कबीरदास कंठस्थ दोहा -1 से 10 तक

 VISHARAD UTTARARDH


कंठस्थ  दोहा -1 से 10 तक 



 1.सीलवंत सबतें  बड़ा , सर्व रतन की खानी |

तीन लोक की संपदा, रही सील में आनी ||


       பணிவு என்பது அனைத்து நற்பண்புகளின் சுரங்கம் ஆகும். பணிவாக இருப்பதால் ஒருவன் மூவுலகத்தின் செல்வத்தையும் அவனால் அடைய முடியும்.



2.


छिमा बड़न को चाहिए, छोटन  को उत्पात |

कहा विष्णु को घटि गयो , ली भृगु मारी लात ||


     மன்னிக்கும் குணம் என்பது மிகவும் உன்னதமான விஷயம். தவறு செய்வது என்பது சிரியவர்களின் இயல்பு. தவறுகளை மன்னிப்பது என்பது பெரியவர்களின் குணம். ஒருமுறை பிருகு முனிவர் பகவான் விஷ்ணுவை உதைத்தார். ஆனால் விஷ்ணு பிருகுவை மன்னித்தார். அது தான் பெரியவர்களின் இயல்பு. 

  


3. जो जल बाढ़ नाव में, घर में बाढ़ दाम |

ढोउ हात उलीचिये , यह सज्जन कौ काम  ||


     படகில் தண்ணீர் நிரம்புவாதல், படகுக்கு ஆபத்து அதிகரித்து, படகு மூழ்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது இரு கைகளை கொண்டு அள்ளி அவற்றை வெளியேற்ற வேண்டும்.   அதே போல இல்லத்தில் செல்வம் அதிகமாகும் போதும் அவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். 


4. हाड़ बड़ा हरि भजन कर , द्रव्य बड़ा कुछ देहु |

अकल बड़ी उपहार कर, जेवन को फल येहु ||


      மனிதனே, உன்னை நீ உயர் குடி மனிதனாக கருதினால், கடவுளை தொழு . நீ பணக்காரனாக இருந்தால் அந்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவு. நீ புத்திசாலியாக இருந்தால் மற்றவர்களுக்கு உன்னுடைய அறிவை பரப்பு. அதன் மூலமே நீ இந்த உலகத்தில் பிறந்ததற்கான பலனை அடைவாய். 



5. चाह गयी चिंता मेटी, मनुवाँ बेपरवाह |

जिनको कछु न चाहिए , सोई साहंसाह ||

     

    இந்த உலகத்தில் எதையும் விரும்பாதவர்கள் அரசர்களுக்கே அரசர்கள் ஆவார். ஏனென்றால் அவர்கள் எதற்கும் ஆசைப்படாத போது அவனே கவலைகள் இல்லாதவன் ஆவான் . எனவே அவர்களின் மனமும் கவலையற்றது.

  

6. रूखा सूखा खाइकै ,ठंडा पानी पीव |

देखि बिरानी चुपड़ी , मत ललचावे जीव ||

     

       நாம் எப்போதும் நமக்கு கிடைத்தவற்றை கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். நமக்கு காய்ந்து போன உலர்ந்த சப்பாத்திகள் மற்றும் குளிர்ந்த நீர் மட்டும் கிடைத்தாலும் அதை மட்டும் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும். அதை விடுத்து வேறு ஒருவருக்கு வெண்ணை தடவிய சாப்பாத்தி கிடைத்திருப்பதை கண்டு பொறாமை கொள்ள கூடாது. 

  

7.माँगन गये सो मरि रहे , मरे तो माँगन जाहिँ |

तिनते पहले वे मरे , होत करत जो नाहिं ||


          பிச்சை எடுப்பது என்பது இறப்பதை விட மோசமானது. அப்படி இருக்க ஒருவன் எங்காவது பிச்சை எடுக்க சென்றால் அவன் இறந்தவருக்கு சமமானவர் ஆவார். அதே போல எவன் ஒருவன் இரவல் கேட்டு வந்த ஒருவருக்கு இல்லை என்று சொல்பவர் கேட்பவருக்கு முன்பே இறந்து விட்டது போல அர்த்தம்.

 

8.  माँगन मरन समान है, मत कोइ मांगाो भीख |

माँगन ते मरना भला , यह सतगुरु की सीख ||


     பிச்சை எடுப்பது என்பது இறப்பதற்கு சமம். எனவே யாரிடமும் பிச்சை எடுக்காதீர்கள். கேட்பதை விட இறப்பதே மேல் என்பது சத்குருவின் போதனை . 

 

9. मरि जाऊँ माँगूँ  नहीं  , अपने  तन के काज |

परमारथ के कारने , मोहि  न आवै लाज ||


        நான் என் வயிற்றுக்காக பிறரிடம் சென்று இரவல் கேட்க மாட்டேன். ஆனால் மற்றவர்களுக்காக இரவல் கேட்பதற்கு நான் வெட்க படுவதில்லை.  


10. धीरे धीरे रे मना , धीरे सब कुछ होय |

माली सींचै सौ घड़ा , तृ आये फल होय ||

 

      எந்த  ஒரு செயலாக இருந்தாலும் அதற்கான சரியான நேரம் வரும் போது தான் முடியும். மனதில் பொறுமை இருந்தால் எல்லா செயலும் முடியும். ஒரு தோட்டக்காரன் ஒரு மரத்திற்க்கு நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் சரியான கால நிலை வரும் போது தான் காய் காய்க்கும். அதே போல எல்லாவற்றிக்கும் அதற்குரிய காலம் வரும் வரை பொறுமையாக இருக்க  வேண்டும்.   


லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு