புதன், 15 டிசம்பர், 2021

PRAVEEN POORVARDH -கவிதைப் பூங்கா-சிலப்பதிகாரம்

 DAKSHIN BHARATH HINDI PARACHAR SABHA

PRAVEEN POORVARDH


சிலப்பதிகாரம்

மதுரைக்காண்டம் 

அடைக்கலக் காதை 


கோவலனின் உயர் பண்புகளாக  மாடலமறையவன் கூறுவன யாவை:
(அ )
சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்ட அடைக்கலக்காதை குறித்து பாடநூலின் துணைக் கொண்டு விளக்குக:



முன்னுரை:

சிலப்பதிகாரம்:


                    இது இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. இந்நூல்  குடிமக்களைத்  தலைவராக கொண்டுள்ளதால் குடிமக்கள் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.   "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" எனவும் அழைக்கப்படும் இந்நூல் வணிகர் மரபைச் சேர்ந்த கோவலன்,கண்ணகி ஆகியோரைக் காவியத் தலைவர்களாகப்  பெற்றுள்ளது.

                     முத்தமிழ் காப்பியம் ஆன இந்த நூல் மூன்று உண்மைகளை விளக்குவதற்காக எழுதப்பட்டது என நூலின் பதிகம் கூறுகின்றது. 


நூல் அமைப்பு:


                         புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை, காதை என்னும் சிறு பிரிவினையும் கொண்டுள்ளது. 


நூல் விளக்கும் உண்மை:


                         "அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்"

                         "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்"

                          "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்"


கோவலன்:


                  கோவலன் பூம்புகாரில் சிறப்பாக வாழ்ந்து வந்தான். கோவலனின் கடந்த கால வாழ்க்கையை பற்றி நன்கு அறிந்தவர் தலைச்செங்கானம் சார்ந்த மறையவன் மாடலன் என்பவர் . அவர் கவுந்தியடிகளிடம் கோவலனின் சிறப்பான பழைய வாழ்க்கையை பற்றி விவரிக்க தொடங்கினார்.


கோவலனின்  சிறப்புகள்:


மணிமேகலை:

 

                         மாதவி ஆடற் செல்வி. அரசனால் பாராட்டப் பெற்றவள்; பரிசுகள் பெற்றவள். அவளை திருமணம் செயது கொண்டு  இன்பமாக வாழ்க்கை நடத்தினான் கோவலன்.  மாதவி குழந்தைப் பேறு பெற்றாள். மணிமேகலை' என்று  அக்குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. மணிமேகலா தெய்வம் அவன் மதித்த குலதெய்வம் .


கருணை மறவன்:


             குழந்தை பெயர்  சூட்டுதலைத் தொடர்ந்து தானம் செய்ய முற்பட்ட போது நரைமுதுயாக்கை உடைய அந்தணர்  ஒருவர்  தண்டு கால் ஊன்றி நடந்து வந்தான். பாகனைத் தூக்கி எறிந்து விட்டு வேகமாக வந்த யானை ஒன்று இந்த முதியவனைத் துதிக்கையில் கொண்டு துயரத்தில் ஆழ்த்தியது. உயிருக்குப் போராடிய அந்தணரைக் காப்பாற்றத் தன் உயிரைப் பொருட்படுத்தாது கோவலன் அதன் கையகத்தில் பாய்ந்து அவனை மீட்டான்.  

                அவனைக் “கருணை மறவன்” என்று அருகில் இருந்தவர்கள் பாராட்டினர். இந்நிகழ்ச்சியின் மூலம் கோவலனின் உடல்கொடையை நம்மால் உணர முடிகிறது.


PRAVEEN POORVARDH - கவிதைப் பூங்கா -குற்றாலக்  குறவஞ்சி 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveenpoorvardhkavidhaipoongakutralakuravanji.html


செல்லாச்செல்வன்:


                       மற்றொரு நிகழ்ச்சி. படுத்துக் கிடந்த குழந்தையை  கடிக்கவந்த பாம்பினைக் கொன்று வீழ்த்திய கீரிப்பிள்ளை அதன் வாயில் செங்குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்து விட்டது என்று தவறாகக் கருதி அதனை அடித்தாள் ஒருத்தி.  அது துடித்துச் செத்தது. பாவச் செயல் செய்த அவளைக் கணவன் மன்னிக்காமல் அது தீரும் வரை அவளைச் சேர்வது இல்லை என்று ஊரைவிட்டு நீங்கினான்.

                      பாவம்தீரப் பவித்திரம்  செய்ய அவனுக்குப் பொருள் தேவைப்பட்டது. அப்போது வடமொழியில் எழுதிய வாசகம் ஒன்று “கருமம் தொலைத்துப் பலன் அடைவீர்” என்று எழுதித் தந்தான். ஏட்டை நீட்டினாள். 

                      காசு கொடுத்து மாசு நீக்க யாரும் முன் வரவில்லை என்பதை அறிந்த  கோவலன் பொருள் கொடுத்து உதவினான். பிரிந்த அந்த பெண்ணினுடைய கணவன் அவளுடன்  வந்து ஒன்று சேர்ந்தான். சிதைந்த வாழ்க்கை சீர்பெறச் செய்த செம்மலாக விளங்கி னான்.

                   'செல்லாச் செல்வன்' என்று அவனை அனைவரும் அழைத்துச் சிறப்புச் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்கு கோவலனின் உடைய பொருட்கொடையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


இல்லோர் செம்மல் :


                   பத்தினி ஒருத்திமேல் பழிச்சொல் கூறி அவள் வாழ்க்கையைக் கெடுத்தான் ஒரு கயவன். இவ்வாறு பொய் கூறுபவர்களை அடித்து கொல்லும்  பூதம் பாசம் கொண்டு அவனைக் கட்டி இழுத்துச் சென்றது. இந்த விஷயத்தை அறிந்த அவனுடைய தாய் பாசத்தால்  அப்பூதத்திடம் முறையிட்டாள். 

                         “என் உயிர் கொண்டு அவன் உயிர் தருக” என வேண்டிக்கொண்டாள். 

                         “இழிமகன் ஒருவன் உயிர்க்கு ஈடாக நல் உயிரைக் கொள்ளும் நயப்பாடு இங்கு இல்லை” என்று கூறி அவனை அவள்கண்முன் அடித்துக் கொன்றது.  

                      மனம் ஒடிந்து திக்கற்று போன அந்த தாய்க்கு  திசை காட்டும் ஒளிக் கதிராகக் கோவலன் இருந்து அத் தாய்க்கும் மற்றும் அவனைச் சார்ந்து கிடந்த சுற்றத்தவர்க்கும் மிக்க பொருள் கொடுத்து அவர்கள் நல்வாழ்வு வாழ வழிசெய்தான்.  

                     அதனால் 'இல்லோர் செம்மல்' என்று நல்லோர் அவனைப் பாராட்டிக் கூறினர். இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் கோவலனின் உயிர்க்கொடையை அறிந்து கொள்ளலாம்.


முடிவுரை:


                இவ்வாறாக கோவலனின் சிறப்பைப் பற்றி மாடலன், கவுந்தியடிகளிடம் எடுத்துக் கூறினான். 



VALIVADHAIPPADALAM


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhvaliramanaiigandhukurudhal.html


TAMIL ILAKKIYAVARALARU


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARUPADHINONKEELKKANAKKU.html


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARUSANGAKALAMORUPORKALAM.html





லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு