புதன், 23 மார்ச், 2022

PARICHAYA LESSON-13 -Past tense,था ,थे ,थी ,थीं ,இருந்தது.இருந்தன.

PARICHAYA

LESSON-13

था        थे       थी          थीं 


चेन्नई आज एक बड़ा शहर है |       

சென்னை இன்று ஒரு பெரிய நகரம். 

पहले यह एक छोटा गाँव था |         

 முன்பு  இது ஒரு சிறிய கிராமமாக இருந்தது.

पहले यहाँ छोटे छोटे घर थे |         

 முன்பு  இங்கு சிறிய சிறிய வீடுகள் இருந்தன.

आज यहाँ बड़े बड़े मकान हैं |       

ஆனால் இப்போது பெரிய பெரிய வீடுகள் இருக்கின்றன.


देवयानी , तुम कल कहाँ थी ?

 தேவயானி, நீ நேற்று எங்கே இருந்தாய் ?

मैं कल वाणी के घर में थी | 

நான் நேற்று வாணியின் இல்லத்தில் இருந்தேன்.

वहाँ क्या था ?

அங்கே என்ன இருந்தது.

वहाँ वाणी के भाई की शादी थी | 

அங்கே வாணியின் உடைய சகோதரனின் திருமணம் நடந்தது.

कया तुम्हारी माँ भी वहाँ थीं ?

உன்னுடைய அம்மாவும் கூட அங்கே இருந்தார்களா?

हाँ , मेरी माँ भी वहाँ थीं | 

ஆமாம் , என்னுடைய அம்மாவும் கூட அங்கே இருந்தார்.


कल स्कूल नहीं था | 

நேற்று பள்ளிக்கூடம் இல்லை.

कल क्यों स्कूल नहीं था ?

நேற்று ஏன் பள்ளிக்கூடம் இல்லை ?

कल गाँधी-जयंती थी | 

நேற்று காந்தி ஜெயந்தி.

इसलिए कल स्कूल  था | 

அதனால் நேற்று பள்ளி இல்லை.


पिताजी आप कल शाम को कहाँ थे | 

அப்பா நீங்கள் நேற்று மாலை எங்கே இருந்தீர்கள்?

मैं कल शाम को टाउन-हाल में था | 

நான் நேற்று மாலை டவுன் ஹாலில் இருந்தேன்.

तुम्हारे मामाजी भी वहाँ थे | 

உன்னுடைய மாமாவும் அங்கே தான் இருந்தார்.

lesson explanation with book



टाउन-हाल में क्या था ?

டவுன் ஹாலில் என்ன இருந்தது ?

टाउन-हाल में एक बड़ी सभा थी | 

டவுன் ஹாலில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது.

सभा में मुख्य -मंत्री का भाषण था | 

கூட்டத்தில் முதல்வரின் சொற்பொழிவு இருந்தது.

भाषण कैसा था ? 

சொற்பொழிவு எப்படி இருந்தது ?

भाषण बहुत अच्छा था | 

சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது.


कल मोहन कहाँ था ?

நேற்று மோகன் எங்கே இருந்தான்?


book explanation



वह कल मैदान में था | 

அவன் நேற்று மைதானத்தில் இருந்தான்.

मैदान  में कल खेल था | 

மைதானத்தில் நேற்று விளையாட்டு இருந்தது.

खेल कैसा था | 

விளையாட்டு எப்படி  இருந்தது?

खेल बहुत अच्छा था | 

விளையாட்டு மிகவும் நன்றாக இருந்தது.


prathmic past tense tamil





https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/PARICHAYA%20LESSON-10%20future%20tense-.html


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/ParichayaLESSON-5---%20-%20%20%20.html


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PARICHAYALESSON3TAMIL.html

 


















லேபிள்கள்:

வியாழன், 17 மார்ச், 2022

PRAVEEN POORVARDH -கவிதை பூங்கா-2.சுற்றம் தாழல்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH 

கவிதை பூங்கா 
திருக்குறள் 
சுற்றம் தாழல் 


சுற்றம் தாழல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர்  கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:


முன்னுரை:


                    https://todayisagooddayhindi.blogspot.com/2022/04/thirukkural.html

                         இந்த கட்டுரையில் சுற்றம் தாழல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர்  கூறும் கருத்துக்களை காணலாம்.


சுற்றம் தாழல்  கருத்துக்கள்:


                            ஒருவன் வறுமையான நிலையில் ஏதும் இல்லாமல் துன்பப்படும் வேளையிலும் , அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பை கூறுவதும் அவனிடம்   உறவை பேணிக்காப்பது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.


                         ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றத்தார் மட்டும் அமைந்து விடுமானால் அது அவனுக்கு வளர்ச்சி குறையாத பல செல்வங்களை கொடுக்கும்.


                            சுற்றத்தாரோடு மனம் திறந்து உறவாடாதவன் வாழ்க்கை கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்து இருப்பது போன்றது.


                             தன் சுற்றத்தார் அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் தான் கொண்டுள்ள செல்வத்தை பெற்றதன் பலன் ஆகும்.


                    ஒருவன் தன் சுற்றத்தாருக்கு வேண்டியவற்றை கொடுத்தும், அவர்களிடம்  இனிய சொற்களை பேசியும் வாழ்ந்து வருவான் என்றால் , அவன் பல்வகை சுற்றத்தாரால் சூழப்படுவான்.


                   ஒருவன்  பெரும்கொடையாளியாகவும், சினத்தை விரும்பாதவனாகவும் இருப்பான் என்றால்  அவனை போல சுற்றம் உடையவர்கள்  இந்த பூமியில் வேறொருவர் இல்லை.


                          காக்கை தனக்குக் கிடைத்த உணவை மறைத்து தான் மட்டும் உண்ணாமல் தன் சுற்றத்தாரையும் அழைத்து உண்ணும் . இது போன்ற குணம் உடையவர்களுக்கே உயர்வு உண்டு.


                    சுற்றத்தார் அனைவரையும் ஒன்று போல எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப உபசரிப்பவன் ஒருவனாக இருப்பானாயின், அந்த சிறந்த குணத்தை எண்ணி அவனை விட்டு நீங்காமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.


PRAVEEN POORVARDH-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை-தேசிய கொடியின் சிறப்புகள்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/12/kavimanidhesigavinayagampillaidhesiyakodi.html


                        முன்பு ஆட்சியாளனின் குற்றத்தை காரணமாக கூறி பிரிந்து சென்றவர்கள், பிறகு அந்த குற்றம் இல்லாது போன பிறகு அவர்களாகவே திரும்ப வருவர். 


                          ஒரு காரணமும் இல்லாமல், தானாகவே தன்னை விட்டு  பிரிந்து சென்ற ஒருவனை அவன் மீண்டும் திரும்பி வந்தால், அவனை பொறுத்து சேர்த்து கொள்ள வேண்டும்.


 முடிவுரை:


                            இவ்வாறாக நாம் அனைவரும் அன்பு பாராட்டுதல், சுற்றம் பேணி வாழ்தல், ஒத்துப்போதல், ஆகிய நற்பண்புகளோடு வாழவேண்டும் என்னும் செய்திகளை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். 


thirukkural

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/praveen%20poorvardh%20kavidhai%20poonga%20thirukkural%20periyorai%20thunai%20kodal.html

               

    silappadhikaram


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHKAVIDHAIPOONGASILAPPADHIGARAM.html                

      

kutralakuravanji


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveenpoorvardhkavidhaipoongakutralakuravanji.html



                           











லேபிள்கள்: