PRAVEEN POORVARDH - கவிதைப் பூங்கா -குற்றாலக் குறவஞ்சி
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVEEN POORVARDH
கவிதைப் பூங்கா
6.குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக்கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியின் கருத்துக்களை தொகுத்து எழுதுக:
முன்னுரை:
குறம் எனப்படுவதே குறவஞ்சி ஆகும். மலைவாழ் மக்கள் குறவர் எனவும், பெண்டிர் குறவஞ்சி எனவும் அழைக்கப்பெற்றனர். சிற்றிலக்கியங்கள் எனச் சிறப்பிக்கப்படுவன தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பிள்ளைத்தமிழ் கலம்பகம், பள்ளு, அந்தாதி, குறம் முதலியன ஒரு சிலவாம் .
நூல் ஆசிரியர்:
திரிகூடராசப்பர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் எனும் ஊரில் பிறந்தார். ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். செய்யுள் இயற்றும் திறன் கைவரப் பெற்றவர். விரைந்து படும் ஆற்றல் பெற்றவர். திருக்குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடியுள்ளார்.
இவற்றுள் இசை விருந்தும் சொல் விருந்தும், பொருள் விருந்தும் தரவல்லது குற்றாலக் குறவஞ்சியாம்.
குற்றாலக்குறவஞ்சி:
விளக்கம்:
* ஆண்குரங்கு பெண்குரங்குக்கு பழம் கொடுத்துக் கொஞ்சி விளையாடும். அந்தப் பெண்குரங்கு அந்த பழத்தை வேண்டாம் என்று போட்டுவிடும். அப்படிப் போடும் பழங்களை எனக்குத் தரமாட்டாயா என்று வானுலகில் உள்ள கவிஞர்கள் வேண்டிக் கேட்பார்கள்.
காட்டு வேடர்கள் வானுலகத் தேவரைக் கண்ணால் ஏறெடுத்துப் பார்த்து அழைப்பர். வானத்தில் உள்ள சித்தர்கள் இந்த மலைக்கு இறங்கிவந்து காயச்சித்தி மூலிகைகளை விளைவிப்பர். தேனருவி அலை மேலே எழும்பி வானத்திலிருந்து ஒழுகும்.
அதனால் சூரியன் தேர் பூட்டி குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்.வளைந்துள்ள பிறைநிலாவை சூடியிருக்கும் குற்றாலநாதர் இருக்கும் மலை எங்கள் மலை.
* அருவி அலை முத்துகளைக் கழங்குகளாக எறிந்து விளையாடும். மேலும் அந்த அலை சிறுமியர் விளையாடும் மணல்வீடுகளை அடித்துச் செல்லும். நாங்கள் கிழங்குகளைத் தோண்டி எடுப்போம். காய்ந்த திணைகளை யானைத் தந்தங்களால் இடிப்போம். குரங்கு மாம்பழங்களைப் பறித்துப் பந்து போல் விளையாடும்.
செண்பகப் பூக்களின் தேன் மணம் வானுலகில் வீசும். நாங்கள் தேன் எடுப்போம் அதன் வளத்தைப் பாடிக்கொண்டே நடிப்போம். கொடை வழங்கும் ஈசர் குறும்பலாவின் ஈசர் வளம்பெருகும் குற்றாலமலை எங்கள் மலை.
* பாம்பு ஈன்றும் நாகமணி கோடி வெயில் போல வெளிச்சத்தை தரும். இந்த மலையில் மேயும் யானை நிலாவைக் கவளம் என்று எடுக்க வழி மறிக்கும்.
PRAVEEN POORVARDH -கவிதை பூங்கா-2.சுற்றம் தாழல்
https://todayisagooddayhindi.blogspot.com/2022/03/praveenpoorvardhsutramthalal.html
வேட்டுவர் தினை விளைவிக்கும் புனத்தில் குங்குமம், சந்தனம் மணம் மணக்கும். ஆடுகள் குதித்து விளையாடும்.காக்கை பறக்க முடியாத மலையில் மேகம் மேயும். ஈசர் பலா அடியில் தங்கும் குற்றால மலை எங்கள் மலை.
* கயிலை என்னும் வடக்கிலுள்ள மலைக்குத் தெற்கில் பொன்னாலான மலை போல் உள்ள மலை எங்கள் மலை.
தெற்கில் உள்ள சயிலம் என்னும் மலைக்கு வடக்கில் உள்ள மலை எங்கள் மலை.வயிரம், மாணிக்கம் ஆகியவை விளையும் எங்கள் மலையில் வானத்துச் சூரியன் குகைகளில் நுழையும்.
தூங்கும் பெருமால் தேடுகின்ற திரிகூடர் வாழும் மலை எங்கள் மலை.
* கொல்லிமலையின் உறவுக்கார மலை எங்கள் செல்லிமலை. விந்திய மலை எங்கள் தந்தை மலை. என் அண்ணன் வாழும் மலை இமயமலை ஆகும்.பழனிமலை எங்கள் கொழுந்தன் வாழும் மலை .
சாமிமலை என் மாமியார் வாழும் மலை. நாஞ்சில் நாட்டு வேள்வி மலை என் தோழி வாழும் மலை. மேகக் கூட்டங்கள் முழங்க மயில் ஆடும் திரிகூடமலை எங்கள் மலை.
* நாங்கள் வேறொரு குலத்தவனுக்குப் பெண் கொடுக்க மாட்டோம். வேறு குலத்து பெண்ணை மணந்துகொள்ள மாட்டோம். எப்போதுமே உறவின் பிடியிலிருந்து விடுபடாத குறவர் குலத்தவர் நாங்கள்.
அனைவரும் அஞ்சும்படி, தினைப்புனத்தில் வந்த யானையை ஓட்டி, வேங்கை மரமாக இருந்து நிழல் தந்ததால் அந்த வேலவனுக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தோம். எங்களிடம் உள்ள மலைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சீதனமாகக் கொடுத்தோம்.
சூரியனும், நிலாவும் சூழும் மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம். பரமர் திரிகூடமலை எங்கள் மலை.
முடிவுரை:
இவ்வாறாக குறவர் தங்கள் மலை வளத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறும் விதமாக இந்த குற்றாலக் குறவஞ்சி நூல் அமைந்துள்ளது.
லேபிள்கள்: Praveen Poorvardh-Kavidhai Poonga


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு