செவ்வாய், 30 நவம்பர், 2021

PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்


PRAVEEN POORVARDH


தமிழ் இலக்கிய வரலாறு 




சங்ககாலம் 

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 




முன்னுரை :



             பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை அடி ,பொருள் என்னும் முறையால் வகைப்படுத்தித் தொகுக்கப்பெற்ற நூல்களே 
எட்டுத்தொகையாகும்.
      நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,கலித்தொகை,அகநானூறு என்னும் ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்களாகும்.
           பதிற்றுப்பத்து,பரிபாடல்,புறநாநூறு என்னும்  மூன்றும் புறப்பொருள் பற்றிய நூல்களாகும்.


எட்டுத்தொகை வகைகள் 


நற்றிணை :



          9 அடி முதல் 12 அடி வரை அமைந்துள்ள இந்நூல்  400 பாடல்களைக்  கொண்டுள்ளது 
பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். தனிமகனார்,விழிக்காண்
பேதைப்பெருங்கண்ணனார் என்பவர் அவர்களுள் சிலர்.

குறுந்தொகை :


             4 அடி  முதல் 8அடி  வரையுள்ள இந்நூல் 400 பாடல்கள் கொண்டுள்ளது.
200 க்கும்  மேற்பட்ட புலவர்கள் இப்பாடல்களை எழுதி உள்ளனர்.

ஐங்குறுநூறு :


    3 அடி  முதல் 6 அடி வரை அமைந்துள்ள இந்நூல் 501 பாடல்களை கொண்டுள்ளது.இந்நூல் முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை  எனும் ஐந்து திணைகள்  ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல்களை கொண்டுள்ளது,
புலவர்கள் :

மருதத்தை ஓரம்போகியார் 
நெய்தலை அம்மூவனார்,
குறிஞ்சியை கபிலர் 
பாலையை ஆந்தையாரும் 
முல்லையை  பேயனாரும்  
பாடியுள்ளனர்.


பதிற்றுப்பத்து :



       சேரமன்னர் பதின்மரைப் பத்துப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு பதிற்றுப்பத்தாகும் .முதல் பத்தும் ,இறுதி பத்தும்  நீங்கலாக ஏனைய எட்டுப்பத்துக்களே இப்போது கிடைத்துள்ளது .குமட்டூர்க் கண்ணனார்,காப்பியனார்,பரணர்,நச்செள்ளையார்,கபிலர்,அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பாடியுள்ளனர்.சேரமன்னனின் வரலாற்றை அறிந்துகொள்ள இது பெரிதும் உதவுகின்றன.


பரிபாடல் :


         பரிபாடல் என்பது ஒருவகைப் பாவாகும் .இந்நூலுக்கு பரிமேலழகர் உரை எழுதி உள்ளார்.இந்நூல் முருகன்,திருமால் போன்ற கடவுளரையும்,மதுரை நகரினையும் பற்றிய பாடல்களை கொண்டுள்ளது.


கலித்தொகை :

     

                       இந்நூலின் ஒவ்வொரு பாடலும் ஒரு சிறுகதை என கூறலாம்.ஐவகை திணைகளை பற்றி பாடப்பட்டுள்ளது.கபிலர்,நல்லந்துவனார் போன்றோரால் பாடப்பட்டுள்ளது.

அகநானூறு :


                     13 அடி  முதல் 31 அடி வரை உள்ள பாடல்களை கொண்டுள்ள இந்நூல் நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகிறது.
இந்நூல் களிற்றியானை நிரை ,மணிமிடை பவளம்,நித்திலக்கோவை என்னும் மூன்று  பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


PRAVEEN POORVARDH---வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை
https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/praveenpoorvardhvalikutrathaiporutharulavendiyavai.html


புறநானூறு:


  கோவூர் கிழார்,ஒளவையார் முதலான புலவர்களின் பாடல்களுடன்,அரசோச்சிய காவலரது  பாடல்களையும் கொண்டுள்ளது.
தமிழ் வேந்தரின் கொடை ,வீரம் அறிய இந்நூல் உதவும்.


பத்துப்பாட்டு :


         பத்துப்பாட்டிற்கு நச்சினார்க்கினியர் சிறந்த முறையில் உரை எழுதி உள்ளார்.


திருமுருகாற்றுப்படை :


       பத்துப்பாட்டில் முதலாவதாக வரும் இந்நூலினை புலவராற்றுப்படை எனவும் கூறப்படுகிறது .வீடு பெற்றானோருவன் வீடுபெற விழைந்த ஒருவனை முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது இந்நூலாகும்.


பொருநாற்றுப்படை:

         
         முடத்தாமக்கண்ணியார் என்னும் பெண்பாற்புலவர் .இந்நூல் 248வரிகளை கொண்டுள்ளது.கரிகால் பெருவளத்தானைச்     சிறப்பித்துப் பாடியது பொருநாற்றுப்படை.      கரிகலானது கொடைச் சிறப்பும்,வெற்றிச்சிறப்பும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.


PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-சங்ககாலம் ஒரு பொற்காலம் 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARUSANGAKALAMORUPORKALAM.html


சிறுபாணாற்றுப்படை :



 யாழ்ப்பாணர் சிறுபாணர் ,பெரும்பாணர் என இரு வகையினராவர்.வஞ்சி,உறையூர்.மதுரை ஆகிய ஊர்களின் சிறப்பு,கடையெழு வள்ளல்களை பற்றிய செய்திகள் முதலானவற்றை இந்நூலில் காணலாம்.

பெரும்பாணாற்றுப்படை :


       தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ள இந்நூல் 500 அடிகளைப் பெற்றுள்ளது.இது பாணாறு எனவும் கூறப்படும்.


முல்லைப்பாட்டு :


                 நப்பூதனார் பாடிய இந்நூல் பத்துப்பாட்டில் அளவால் சிறியது .103 அடிகளைக் கொண்டுள்ளது. முல்லைத் திணைக்குரிய இருத்தல் என்னும் ஒழுக்கத்தினை இந்நூல் சிறப்பித்து கூறுவதால் முல்லைப்பாட்டு என்னும் பெயர் பெற்றது.

       

மதுரைக்காஞ்சி :


                     தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியுள்ளார்.திருப்பரங்குன்ற விழா,அந்தி விழா,திருவோண விழா,நன்னன் பிறந்த விழா முதலான விழாக்களை இந்நூல் இனிது விளக்கும்.

 

 நெடுநல்வாடை :


                                          
                 தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியுள்ள இந்நூல் 188 அடிகளைக் கொண்டுள்ளது.


குறிஞ்சிப்பாட்டு :



         ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ்க்ச்சுவையினை உணர்த்திக்   கபிலர் பாடியுள்ள நூல் குறிஞ்சிப்பட்டாகும் .இந்நூல் 261 அடிகளைக்  கொண்டுள்ளது.



பட்டினப்பாலை:



            சோழன் கரிகாற்பெருவலைதனைக் கடியலுற் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் பாடிய நூலே பட்டினப்பாலையாகும்.
301 அடிகளை கொண்டுள்ளது.


மலைபடுகடாம் :



            583 அடிகளைக் கொண்ட இந்நூல் கூத்தராற்றுப் படை எனவும் அழைக்கப் பெறும் .


முடிவுரை:



                  இவ்வாறாக பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் தமிழ் புலவர்களின் பாடல்கள் மூலம் அரசர்களின் சிறப்பு,கொடை ,வீரம் மற்றும் மக்களின் வாழ்க்கை ஐந்திணைகளின் சிறப்பு,தமிழ் விழாக்கள் ,அதன் சிறப்பு போன்ற பல விஷயங்களை பற்றி நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது.                                       










லேபிள்கள்:

திங்கள், 29 நவம்பர், 2021

VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல்


                       VISHARAD POORVARDH
                                                
மலர்ச்செண்டு 
  
                                      தென்றல் 


பாரதிதாசனின் தென்றலின் கருத்துக்களை தொகுத்து எழுதுக :


முன்னுரை :

              
      கவிஞன் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்ட தென்றல் என்ற கவிதையில்  கூறப்பட்டுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பாரதிதாசன் :


        கவிஞன் பாரதிதாசன் அவர்கள் 1891 ஆம் ஆண்டு புதுவையில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம். பாரதியின்
சீடனாகி அவர்மேல் கொண்ட அன்பால் தன்பெயரைபாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். இயற்கையை வர்ணிப்பதில் பாரதிதாசன்
 இணையற்ற கவிஞர்.

கவிஞரின் படைப்புகள் :


         பாரதிதாசன் கவிதைகள் ,பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், தமிழியக்கம், குடும்ப விளக்கு,நல்ல தீர்ப்பு, அமைதி, காதல்
நினைவுகள், தேனருவி ஆகியவை கவிஞரின் சிறந்த படைப்புகள் .

மென்காற்றும் வன்காற்றும் :


              அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பூமியில் கூத்தாடிக்கின்றாய் காற்றே ..வலிமையான பொருட்களை தூள் 
தூளாக  செய்யும் காற்றே .அனிச்சம் பூ நோகாது  நுழைந்து  செல்கின்றாய் காற்றே .
 

தென்னாடு பெற்ற செல்வம் :


         உன்னோடு  ஒப்பிடும் போது இம்மக்கள் ஒரு சிறு பகுதிக்  கூட  இல்லை. தென்னாடு பெற்ற செல்வமே உன்னுடைய இன்பத்தை வேறு 
எங்கு தெரிய செய்தாய்.

VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள் 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html

தென்றலின் நலம் :


         குளிர்ந்த சந்தன மணம் வீசும் இமயமலையில் குளிர்ந்து அங்கு நறுமணம் உண்டுபண்ணும்  மலர்களின் நடுவே மனத்தினை உண்டும் ,
வண்டின் மனம் வீசி நாளும் வளர்கிறாய் தென்றலே .. அப்படிப்பட்ட உன்னை  வாழ்த்தாதவர் யாரும் இல்லை.

அசைவின் பயன் :


             உன்னுடைய அரும் பெரும் உருவத்தை நான் கண்டதில்லை . எப்படி பெற்ற அன்னையின் அனபை நம் கண்ணால் காணமுடியாது.ஆனாலும் 
அவளுடைய அன்பை நம்மால் உணர முடியுமோ அதுபோல  உன்னுடைய ஒரு ஒரு அசைவுமே என்னை சிலிர்க்க செய்கிறது.  உயிர் கூட்டத்தை 
இணைப்பது அன்புதானே .

தென்றலின் குறும்பு :

    
         உலைத்தீயை ஊதுகின்றாய் ..அந்த உலைத்தீயில் ஊதும் கொல்லனின் தோளில்  குளிர்ந்த காற்றை தவழச்செய்கிறாய்.
          பெண்களின் உடையை நீ உன்னுடைய குளிர்ந்த தென்றலினால் விளக்கினாலும் உன்னை யாரும் விளக்க மாட்டார்கள்.

குழந்தையும் தென்றலும் :


            மலரினை போன்ற அழகிய பூங்கொத்துக்கள் போல பூத்துக்குலுங்கும் குழந்தையின் நெற்றியில் உன்னுடைய குழல் இசையை மீட்டுகின்றாய். குழந்தையை அன்பின் கொழுந்தாக கருதி அதனுடைய மேனியெங்கும் ஊடுருவி கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறாய் 

தென்றலின் இன்பம் :  


          இனியதொரு குளிராக கோடை வெப்பத்துக்கு மருந்தாகி சோர்வினை நீக்குகிறாய் .பின்னர் பருந்தாகி வானில்  பறந்தோடி பாடுகின்றாய்.

தென்றலின் பயன் :


                நான் எழுதிக் கொண்டிருக்கும் போது வழக்கம் போல நீ அங்கே வந்து உன்னுடைய குளிர்ந்த காற்றை வீசினாய் . பின்பு நான் 
எழுதிக்கொண்டிருந்த தாளை கிளப்பி விட்டாய். அந்த தாளை ஏன் கிளப்பினாய் என்று கேட்டேன். அதன் புழுதியை துடைத்தேன் என்றாய்
மீண்டும் நீ என்னுள் கூடினாய்  

தென்றலுக்கு நன்றி : 


                         பாக்குமரம் ,தென்னை மரம்,மணம் கமழும் சந்தனமரமும் பிறக்கின்ற பொதிகை அன்னையே உனைதந்தாள் . தமிழையும் 
தந்தாள். தமிழ் எனக்கு அகத்தும் ,தென்றல் காற்றே நீ எனக்கு புறமும் இன்பம் அமையச் செய்வதை நன் கனவில் கூட மறக்க மாட்டேன்.

முடிவுரை :

   
              இவ்வாறாக கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தென்றலின் உடைய சிறப்பு, அதன் பயன், தென்றலினுடைய குறும்பு, அதனுடைய இன்பம் 
ஆகியவற்றை இந்த கவிதையில் வர்ணித்துள்ளார். 
                    
visharad poorvardh-மலர்ச்செண்டு-பாரத சமுதாயம் 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/vishardpoorvardhbharathasamudhayam.html
               
VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார் 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/vishardpoorvardhthilagavadhiyar.html

VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள் 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html










லேபிள்கள்:

வெள்ளி, 26 நவம்பர், 2021

visharad poorvardh-மலர்ச்செண்டு-பாரத சமுதாயம்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA


VISHARD POORVARDH


                                          மலர்ச்செண்டு

 இக்காலக்கவிமலர்கள் 

                             பாரத சமுதாயம் 

 

பாரதியார் பாடிய பாரத சமுதாயம் பாடலின் கருத்துக்களை தொகுத்து எழுதுக ?


முன்னுரை :


பாரதியார்:


              பாரதியார் எட்டியபுரத்தில் 1882 சின்னச்சாமி லக்குமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். தன்னுடைய பட்டுத்திறத்தாலே நாட்டுணர்வைத் துண்டித் தமிழ்த்தாயைத்
தலைநிமிர வைத்த மஹாகவிஞன். தாய் நாட்டுணர்வையும் தமிழுணர்வையும் தரமுடன் தந்து விடுதலைக்குரல் எழுப்பிய
 வித்தகன் அவர் கவிதைகளில் "சுவை புதிது! பொருள் புதிது !

வளம் புதிது !"

                 

   தேசியம், விடுதலை உணர்வு, தாய்மொழிப்பற்று, வரலாறு,


 வீரம்,வேதனை,தொலைநோக்கு ஆகிய அனைத்தும் அவன்

 கவிதைக்கடலில் அங்கங்கே தனித்தனி நீரோட்டங்களை ஓடும்.


பாரதியாரின் படைப்புகள் :


     கண்ணன் பாட்டு,குயில் பாட்டு ,பாஞ்சாலி சபதம் போன்ற பல படைப்பை படைத்துள்ளார். பாரதியாரின் கட்டுரைகளும்,
 கவிதைகளும் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும்.


பாரத சமுதாயம் :


VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல் 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/VISHARADPOORVARDHMALARCHENDUTHENDRAL.html

விளக்கம் :


  •   வேற்றுமை ஒற்றுமை கருதாத முப்பது கோடி
  ஜனங்களின் முழுமைக்கும் பொது உடைமை  கொண்ட ஒப்பில்லாத பாரதம் மறுமலர்ச்சி பெற்ற புதுமையை உலகுக்கு வழங்கும் பாரத சமுதாயம் வாழ்க .


  •       மனித உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் உண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்கை இனியுண்டோ அழகிய சோலைகள் நீண்ட நெடிய பசுமையான வயல்கள் கொண்ட                                                   நாடு                                      கனி,கிழங்குகள் தானியங்கள் கணக்கின்றி விளையும் 

நாடு.. கணக்கின்றி விளையும் நாடு.. நித்தம் நித்தம் கணக்கின்றி

 தரும் நாடு.


  •          இனியொரு விதி செய்வோம் .அதை நாளும் காப்போம் .

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் உலகத்தினை

 அழித்திடுவோம்.


  •           எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்கிறான்

 கண்ணபெருமான்.


  •            எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஒன்றென கருதும் நம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே பாரத சமுதாயம் வாழ்க வாழ்க என பாடுகிறார் .


முடிவுரை :


இந்த பாரத சமுதாயம் பாடலில் பாரதியார் நம் பாரத சமுதாயத்தின் சமத்துவதையும் ,பாரதத்தின் பெருமைகளையும் பாடியுள்ளார்.





             







லேபிள்கள்:

வியாழன், 25 நவம்பர், 2021

Visharad poorvardh-இலக்கிய கனிகள்-1. திருமந்திரம்

 

Dakshin Bharat Hindi prachar Sabha


visharad poorvardh 


               இலக்கிய கனிகள்


                               திருமந்திரம்


திருமூலரின் திருமந்திரம் கூறும் உண்மைகளைத் தொகுத்து எழுதுக?


முன்னுரை:

              திருமூலநாயனார் பாடியருளிய திருமந்திரம் பத்தாம் 

திருமுறையாகும்.இது சைவ சித்தாந்தத்தின் முதல் நூல் என்று 

கருதப்படுகின்றன.திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர் 

முதலானவர்கள் சைவத்தினை பரப்புவதற்கு அடிப்படையாய் 

அமைந்தது திருமந்திரமாகும்.

இச்சிவயோகியார்:

சிவயோகம்:

              அகத்திய முனிவரின் நண்பரான இச்சிவயோகியார்

 முனிவரைக் கண்டு அளவளாவ  விரும்பி பொதியமலை நோக்கி 

புறப்பட்டார். வழியில் காசி திருப்பருப்பதம், திருக்காளத்தி ,

திருவாலங்காடு முதலான பதிகளை தரிசித்துத் 

திருவாவடுதுறையை அடைந்தார்.

மூலன் உடலில் புகுதல் :

          சாத்தனுர் என்னும் ஊருக்கு அருகே பசுக்கள் சில  

உயிரற்ற ஒரு மனித உடலை சூழ்ந்து நின்று கண்ணீர் வடிப்பதை 

கண்டார். அவற்றை மேய்த்துவரும் மூலன் என்பவன் பாம்பு கடி 

பட்டு உயிர் நீங்கி தரையில் கிடந்தான்.அப்பசுக்களின் துயரினை 

நீக்குவதற்காக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்து தமது 

உயிரை மூலன் உடலில் புகுத்தினார்.மூலன் உயிர் பெற்று 

எழுந்தது கண்டு மகிழ்ந்த பசுக்கள் அவரை மோந்து கனைத்தன. 

பிறகு மகிழ்ச்சிப் பெருக்கோடு பசுக்கள் தாமே ஊரை நோக்கிச் 

சென்றன.

               மாலைப்பொழுதுயாகியும்  தனது கணவன் மூலன் வீடு

 திரும்பாததால் கவலையுற்ற மூலனின் மனைவி தெருவில் நின்று

 கொண்டிருந்த திருமூலரை தனது கணவன் என கருதி அழைக்க

 எனக்கு உன்னுடன் தொடர்பு ஒன்றும் இல்லை என்று கூறி ஊர்

 பொது மடத்தினுள் புகுந்தார். சிவயோகத்தில் அமர்ந்திருந்த

 திருமூலர் தமது உடலை சென்று தேட அது காணப்பெறவில்லை.

                    சிவபெருமான் ஆகமங்களின் உண்மையின் பொருளை 

தமிழில் அருளிச் செய்ய வேண்டியே  தம் உடலை மறையச் 

செய்தார் என்னும் உண்மையை உணர்ந்த திருமூலர் 

திருவாவடுதுறையை அடைந்து ஒரு அரசமரத்தின் கீழ் 

சிவயோகத்தில் இருந்து ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் 

பாடல்களை உலகம் உய்ய பாடினார்.


திருமந்திரம் :

                   திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை கொண்ட நூலாகும் .

 சாத்திர நூலாகவும் தோத்திர நூலாகவும் விளங்கும் திருமந்திரம் 

அற நூல் ஆகவும் இருத்தலை நூலினை நன்கு பயில்வோர்

 உணர்வர்.

VISHARAD POORVARDH -இலக்கிய கனிகள் -2.தம்பியர் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHILLAKIYAKANIGALTHAMBIYAR.html

திருமந்திரமும் திருக்குறளும்:

ஆக்கம் :

திருக்குறள் :

                 " காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 

                           அன்னநீ ரார்க்கே உள"

           இந்தக் குறளில் காக்கை தனக்கு கிடைத்த உணவை தான் 

மட்டும்  உண்ணாது தன் இனத்தையும் கூவி அழைத்து 

உண்ணும் இயல்பு உடையது காக்கை.

                   இப்பேறு உடையோர்க்கு ஆக்கம் மேன்மேலும் பெருகும்.

என்னும் கருத்து திருக்குறளில் நன்கு விளக்கப்படுகின்றது.

இதே கருத்தை திருமூலரும் திருமந்திரத்தில் இவ்வாறு 

எடுத்துரைக்கிறார்.

                   "காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே "

                 என்னும் தொடரில் நாளும் உண்பதையே உண்டும் ,

உணவில் ஆசை நீங்காது கிடக்கும் மக்களை குறிப்பதே

 உணரலாம்.


வறுமை:

          வறுமையைப் பற்றி திருக்குறளில்

                    " இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்                                           இன்மையே இன்னா  தது"

               கொடிதினும் கொடிது வறுமை கொடிது அதை விடக்

 கொடியது வேறொன்றும் இல்லை.

                நெருப்பினில் கிடந்து துயிலுவது என்பது எளிது.ஆனால் 

வறுமையில்  வாடுவோன்  துயிலுவது என்பது ஒரு நாளும்

 இல்லை என்று கூறப்பட்டுள்ளது.


திருமந்திரம்:

           கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை

           நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே.

             கொடையும்,கொண்டாட்டமும் நடைப்பிணமாக நாட்டில் 

இயங்கும் வறியவனுக்கு இல்லை. இவ்வாறு திருமந்திரத்தில் 

வறுமையின் வாழ்வு குறித்து எடுத்துக் காட்டப்படுகிறது.


நிலையாமை :

                    "நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் 

                  பெருமை உடைத்திவ் வுலகு"

                நமது வாழ்க்கை பிறப்பு,இறப்பு என்னும் இரண்டு

 எல்லைக்கு உட்பட்டது.  நமது இளமை காலம் என்பது நீர்க்குமிழி

 போன்றது. எப்போது எமன் வருவான் என்று சொல்லுதல்

 முடியாது ஆகவே வாழும் சில நாட்களில் மனிதப் பண்பு கெடாது

 இருத்தல்  சிறந்தது ஆகும்.


திருமந்திரம் :

            "இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் 

             கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே"

          ஒருவன் தனது இல்லத்தில் உணவு உண்டு விட்டு சிறிது 

நேரம் தனது மனைவியுடன் பேசி இருந்து விட்டு  இடப்பக்கம்  

சிறிது வலி இருப்பதாக கூறி படுத்தார் அவருக்கு அது 

நெடுந்தூக்கமாக அமைந்துவிட்டது. நேற்று இருந்த ஒருவன் 

இன்று இல்லை.இவ்வாறாக நிலையாமையை குறித்து 

திருக்குறளிலும் திருமந்திரத்திலும் ஒத்த கருத்துக்கள் 

கூறப்பட்டுள்ளது.


ஆசை:

திருக்குறள் :

                 " செல்வம் என்பது சிந்தையின் நிறைவே 

                         அல்கா நல்குரவு அவாவெனப்படுமே.


           வறுமை என்பது பொருள் இல்லாமை மட்டும் அல்ல. நீங்காத

ஆசை கொண்டுள்ளவர்களுக்கும் துன்பம் என்றுமே நீங்காது.

ஆசை இல்லாதவருக்கும் என்றும் துன்பம் இல்லையாம் என்பது

 குமரகுருபரர் வாக்கு.


திருமந்திரம்:


                "ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

                   ஆசை விடவிட ஆனந்தமே "


             என்ற வரிகளில் ஆசையை அழிப்பதால் பேரின்பமும்

 ஆசையே வளர்ப்பதால் பெருந்துன்பம் உண்டாகும்  ஆசையே

 துன்பத்திற்கு காரணம். ஆசையை விட்டொழிப்பதால்

 பேரானந்தம் உண்டாகும் என்று திருமூலர் கூறுகின்றார்.


உடம்பு:


                 உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்கின்றார் 

திருமூலர்

          ஏனென்றால் உடலாகிய கோயிலில் இறைவன் எழுந்தருளி

 உள்ளான். ஆகவே அகமும் புறமும் தூய்மையாக்கி உடலை

 வளர்க்குமாறு கூறுகின்றார்.


உண்மையை உரைக்கும் திருமந்திரம்:

              விறகினில் நெருப்பும்,

             பாலினில் நெய்யும் ,

             மலரினில் மணமும் 

               இருத்தலை அனைவரும் அறிவர்.
         

                ஆனாலும் அவை கண்ணுக்குத் தெரிவதில்லை.


         சீவனில் சிவம் கலந்திருப்பதும் இது போன்ற கண்ணுக்குத்

 தெரியாத உண்மையாகும்.


        இதை 

        "பூவினில் கந்தம  பொருந்திய வாறு போல 

            சிவனும் குள்ளே சிவமணம் பூத்தது"

        என்னும் வரிகளில்  விளக்குகிறார்.


               ஐம்பொறிகளை அடக்கி ஆள்வதால் ஒருவன்

 பேரின்பத்தை அடையலாம் எனும் உண்மையை


       "பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு"

           என்ற பாடல் வரிகளில்   எடுத்துரைக்கிறார்.


முடிவுரை

               இந்த அரிய திருமந்திரத்தை  அவ்வையார் பிராட்டி

               "திருவா     சகமும் திருமூலர் சொல்லும் 

                    ஒருவா சகமென் றுணர்"

என்று கூறுவதை நம்மால் காண முடிகிறது.

           

            இவ்வாறாக பல அரிய உண்மைகளையும்,

   தத்துவங்களையும், உவமைகளையும், கருத்துக்களையும்

 திருமந்திரத்தில் நம்மால் காண முடிகிறது.




 








லேபிள்கள்:

திங்கள், 22 நவம்பர், 2021

Praveshika-Tamil Pozhil-1-Thirukkural-2.Natpu Aariyadhal --நட்பு ஆராய்தல் --திருக்குறள்

                                        

                        PRAVESHIKA                                          

                    நட்பு ஆராய்தல் 

                       திருக்குறள் 


நட்பாராய்தல் பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுக ?

                     https://todayisagooddayhindi.blogspot.com/2022/04/thirukkural.html

                        பொருட்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு அதிகாரமே

 நட்பாராய்தல் . அதில் அவர் கூறும் கருத்துக்களை இங்கு

 காண்போம் .


விளக்கம் :


                        ஆராயாது நட்புக் கொள்ளுதல் போன்ற 

கேட்டினைத் தருவது வேறு ஒன்றில்லை.


                       ஆராய்ந்து நட்புகொள்ளாதவன 

இறுதியில்  தான் இறப்பதற்குக்காரணமான 

துன்பத்தைத்  தானே உண்டாக்கிக்

 கொள்வான்.


                     ஒருவனுடைய குணம்,குடிப்பிறப்பு 

அவனிடமுள்ள குற்றம்,குறைவற்ற சுற்றம் ஆகிய 

இவற்றை ஆராய்தறிந்த பிறகே அவனோடு 

நட்புக்  கொள்ள வேண்டும்.


                         நல்ல குடியில் பிறந்து தன் மீது 

சொல்லப்படும் பழிக்கு அஞ்சுபவன் உடைய 

நட்பை விலைக் கொடுத்தாவது கொள்ள

 வேண்டும்.
 

                       நாம்  தவறு செய்ய நினைத்தால் நம் மனம் 

நோகும்படி சொல்லியும்,அப்படி தவறு செய்து 

விட்டால் நம்மை  இடித்துரைத்து கண்டித்தும் 

உலகு வழக்குகளை அறிந்து செய்யும் 

ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை  அறிந்து நட்பு 

கொள்ளவேண்டும்.


                      தீமை வந்தால்  அதிலும் ஒரு நன்மை 

உண்டு.அந்த தீமை தான் நண்பர்கள் 

எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் 

கருவி ஆகும்.


                        ஒருவருக்குப்  பேறு  என்பது அறிவிலார் 

நட்பினை கைவிட்டு அவரை   நீங்குவதேயாகும் .

 

                     ஊக்கம் தளரும் தொழிலைச்செய்ய, நாம் 

நினையாதிருக்க வேண்டும்.நமக்குத் துன்பம் 

வருங்கால் நம்மைக் கைவிடுவார் நட்பினை  

நம் கொள்ளாதிருக்க வேண்டும்.



PRAVESHIKA -தமிழ் பொழில்-1 -10.செல்வச் சிறுமியர் களிப்பு 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA%20-%20-1%20-10.%20%20%20.html

                    ஒருவர் கெடுகின்ற காலத்து அவரை விட்டு 

நீங்குவபவரின்  நட்பானது எமன் 

கொல்லுங்காலத்தில் நினைத்தாலும் கூட 

உள்ளத்தை வருந்த கூடிய   வகையில் அமையும்.



                    உலகத்தோடு பொருந்த வாழ்கின்ற 

குற்றமற்ற   பெரியோரின் நட்பினையே நாம் 

பெற வேண்டும்.அவ்வாறு உலகத்தோடு 

பொருந்தா ட்பினை அவர் வேண்டும் ஒன்றைக்

 கொடுத்தாவது அந்த நட்பினை விட்டு விட 

வேண்டும்.


                        இவையே  திருவள்ளுவரின் 

நட்பாராய்தல் என்ற அதிகாரத்தில் 

கூறப்பட்டுள்ள கருத்துக்களாகும்.




 PRAVESHIKA-TAMIL POZHIL-திருக்குறள்- நட்பு

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/blog-post_18.html


PRAVESHIKA --தமிழ் பொழில்-2 --10.ஆதிரை

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikaaadhirai.html








லேபிள்கள்: