திங்கள், 31 ஜனவரி, 2022

VISHARAD POORVARDH---மலர்ச்செண்டு---சிங்கன் சிங்கி உரையாடல்

DAKSHIN BHARATH  HINDI PRACHAR SABHA

VISHARAD POORVARDH

மலர்ச்செண்டு
இடைக்காலக்கவிமலர்கள் 
2.குற்றாலக் குறவஞ்சி 



குற்றாலக்குறவஞ்சியில் சிங்கன், சிங்கி இடையே நடந்த உரையாடலை தொகுத்து எழுதுக:



முன்னுரை:



              குற்றாலக்குறவஞ்சியை இயற்றியவர் திரிகூட ராசப்ப கவிராயர். இவர் நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தை அடுத்திருக்கும் மேலகரம் என்னும் ஊரில் பிறந்தார்.  இவருடைய காலம் 18- ஆம் நூற்றாண்டு.  இந்நூல் குறவஞ்சி 
என்னும் பிரபந்த வகையை சார்ந்தது. இந்நூலில் சிங்கன் சிங்கியின் உரையாடல் பெண்களின் அணிவகைகளும் அவற்றிற்கான உவமைகளும் எளிய கற்பனை செறிவோடு அமைக்கப்பட்டுள்ளது.


சிங்கன், சிங்கி உரையாடல்:


                       
                        சிங்கன், சிங்கி இடையே நிகழ்ந்த உரையாடல்களை இங்கு காணலாம்.  
                    சிங்கன் அவள் அணிந்துள்ள அணிகலன்களை பற்றி வினவ அதற்கு சிங்கியின் பதிலுமாக இந்த உரை அமைகிறது.

                   சிங்கன் சிங்கியிடம் இத்தனை நாள் என்னுடன் சொல்லாமல் எங்கே சென்றாய் சிங்கி என்று வினவினான். 
                 
                  பூங்கொத்துக்கள் அணிந்துள்ள கூந்தலை உடைய பெண்களுக்கு விரிவாக குறி சொல்ல போனேனடா சிங்கா என மறுமொழி கூறினாள்.

                 உன்னை பார்க்கும் போது அதிசயமாக தோன்றுகிறது. ஆனால் சொல்லவும் பயமாக இருக்குதடி சிங்கி என்று கூற தோன்றிய விஷயத்தை பயமின்றி சொல்லடா சிங்கி என்றாள்.

               உன் காலுக்கு மேலே பெரிய விரியன் கடித்துக் கொண்டு இருக்கிறது. 
              சிங்கி சேலத்து நாட்டிலே குறிசொல்லி பெற்ற சிலம்பு கிடக்குதடா சிங்கா .

              சேலத்தார் இட்ட  அந்த சிலம்புக்கு மேலாக,  என்னவோ திருகளும், முறுகலுமாக இருக்கிறதே அது என்னடி சிங்கி? 
               அது கலிங்க நாடார் எனக்கு வரிசையாகக்  கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா .

                 நீண்டும், குறுகியும் நாங்கூழ்ப்  புழுவைப் போல நெளிந்த நெளிவு என்னடி சிங்கி?  அது பாண்டியனார் மகள் விரும்பிக் கேட்ட குறிகளுக்காக இட்ட காலனியடா சிங்கா.

             செத்த தவளையை ஏன் காலில் கட்டியிருக்கிறாய் சிங்கி? அது ஆண்டவன் குற்றாலரின் சிந்நிதிப் பெண்கள் எனக்கு அணிவித்த மணிக் கெச்சமடா சிங்கா.

VISHARAD POORVARDH -மலர்ச்செண்டு -சீதை அனுமனது சந்திப்பு
https://todayisagooddayhindi.blogspot.com/2022/11/visharad%20poorvardh%20malarchendu%20kambaramayanam%20%20%20.html

               உன் சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி சுருண்டி கிடப்பதேன் சிங்கி? கண்டிய நாட்டிலே முன்பு நான் குறி கூறி பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா.. 
 
                மென்மையான உன் அழகிய தொடைகளுக்கு மேலே வலைக்குருத்தை இப்படி விரித்து மடித்து வைத்தது யாரடி ?           
                 திருநெல்வேலியார் தந்த சல்லடை சேலை அது. அதை நான் நெறிப்படுத்தி உடுத்தி இருக்கிறேன்.

                 எட்டு பறவைகள்  குமுறுவது போன்று குரல் ஒலிக்கும், கழுகு போன்ற உன்னுடைய கழுத்திலே பத்து, எட்டு  பாம்புகள் கிடக்கின்றனவே அது ஏதடி சிங்கி . 
                 குட்டத்து நாட்டாரும், காயங்குளத்தாரும் இட்ட சவடியடா அது  என,
அவனுடைய கேள்விகளுக்கு பதில் உரைத்தாள் சிங்கி.

VISHARAD POORVARDH-ஆண்டாள் திருப்பாவை 
https://todayisagooddayhindi.blogspot.com/2023/05/%20%20%20VISHARAD%20POORVARDH.html

முடிவுரை:


       
            இவ்வாறாக சிங்கன், சிங்கியுடைய உரையாடல் நடைபெறுகிறது.    


VISHARAD POORVARDH- இலக்கிய கனிகள் -3.இலக்கிய கரும்பு 



VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல் 


               

            
                  

 

                     
















லேபிள்கள்:

சனி, 29 ஜனவரி, 2022

PRAVESHIKA---தமிழ் பொழில்-1---8.முரசு

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

 PRAVESHIKA
தமிழ் பொழில்-1

8.முரசு 
சுப்பிரமணிய பாரதியார் 


பாரதியார் முரசு கொட்டி தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:


முன்னுரை:


                  பாரதியார் எட்டையபுரத்தில் 11,டிசம்பர், 1882 ஆம் ஆண்டு சின்னசாமி, லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் முண்டாசு கவிஞர், சக்தி தாசன் , வீர கவி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவரது முரசு என்ற கவிதையில் உள்ள கருத்துக்களை இங்கு காணலாம். 


முரசு கொட்டி தெரிவிக்கும் கருத்துக்கள்:


                          இதில் பாரதியார் அவர்கள் குடும்பம், பெண் இனம், உலகில் மக்கள் யாவரும் ஒன்று போன்ற கருத்துக்களை கூறியுள்ளார்.


                            ஒரு குடும்பத்தில் பொருளைத் தேடி அதை தினமும்  வளர்ப்பவன் தந்தை.  மற்ற எல்லா செயல்களையும் செய்து இல்வாழ்க்கை சிறந்திட செய்பவள் அன்னை. தாய், தந்தை இடும் கட்டளைகளை ஏற்று அவற்றை சிறப்பாக செய்து முடிப்பவர்கள் குழந்தைகள். இந்த மூவரும் ஒருமித்து வாழ்வதே நல்லதொரு குடும்பம். 

                   பல சாதி பிரிவுகள் சொல்லி, உயர்வு, தாழ்வு என்று  கூறி அதில் தினமும் சண்டைகள் செய்வர். சாதி சண்டைகள், சாதி கொடுமைகள் வேண்டாம். அன்புடன் அனைவரும் ஒற்றுமையுடன் செழித்து வாழ்வோம். 

                உலகைப்  படைத்த இறைவன் பெண்ணுக்கு இயற்கையாகவே அறிவை படைத்தான். அப்படி இருக்க சில அறிவிலிகள் பெண்களின் அறிவை கெடுத்தனர். ஆணும், பெண்ணும் இருக்கண்கள் போன்றவர்கள்.  இருக்கண்களில் ஒன்றை குத்தி ஒருகண் மட்டும் கொடுக்கும் பார்வை என்பது அழகாகது. பெண்களின் அறிவு வளர்ந்தால் இந்த உலகினுடைய அறியாமை விலகும்.

                உலகில் தெய்வங்கள் பலவற்றை சொல்லி பகைமை தீயை வளர்ப்பவர்கள் மூடர்கள். அந்தணர் தீயை வணங்குவர். இஸ்லாமியர்கள் நித்தம் திசை நோக்கி வணங்குவர். கிறித்தவர்கள் சிலுவையை வணங்குவர். இந்த உலகில் பரம்பொருள் ஒன்றே.  இதில் பற்பல சாதி சண்டைகள், மத சண்டைகள் வேண்டாம்.

                       ஒரு பூனை தான் பெற்ற குட்டிகளில் ஒன்று  சாம்பல் நிறம், ஒன்று பாம்பு நிறம், மற்றொன்று கருஞ்சாந்து நிறம், அடுத்த ஒன்று வெள்ளை நிறம்  போன்ற பல நிறங்கள் இருந்தாலும் அவை யாவும் பூனை என்ற ஒரே இனம் தான்.  அது போல இந்த உலகில் வாழும் மக்கள் நிறத்தால் வேறுபட்டாலும் அவர்கள்  யாவரும் ஒன்றே. அவர்களின் எண்ணங்கள், செய்கைகள் எல்லாமே ஒன்று தான்.  இந்த மனப்பக்குவம் ஏற்பட்டால்  இன்பங்கள் பெருகும். மக்கள் யாவரும் மற்றவர்களை உடன்பிறந்தவர்களைப் போல எண்ணி வாழ்ந்தால் நம்மிடம் சண்டை சச்சரவே இருக்காது.

                         உலகில் வாழும் மக்கள் எல்லாருக்கும் சோறு வேண்டும்.அதனால் தான் நம் உழுதுண்டு வாழ வேண்டும். வலியோர் மெலியோரை துன்புறுத்தக் கூடாது.  ஒரு குழந்தை மெலிந்து இருக்கிறது என்பதற்காக அதை மிதித்து கொன்று விடுவது அழகாகுது. அறிவை வளர்க்க வேண்டும். சிறியரை மேம்பட செய்தால் தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும். சமத்துவம், சகோதரத்துவம் பாதுகாக்க வேண்டும். 

                      வாழும் மனிதர்களுக்கு எல்லாம் பயிற்று கல்வி பல தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்று என்று அன்பில் திளைக்கட்டும்.

            

முடிவுரை:

       

                இவ்வாறாக பாரதியார் அவர்கள் முரசு கொட்டி உலக மக்களுக்கு அறிவுரைகளை வழங்குகிறார்.


PRAVESHIKA -தமிழ் பொழில்-1 -10.செல்வச் சிறுமியர் களிப்பு 

 https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKACHELVACHIRUMIYARKALIPUKAVIMANIDESIGAVINAYAGAMPILLAI.html


PRAVESHIKA --தமிழ்ப்  பொழில்-2--3.புலமைப் பெண்டிர் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikapulamaipendir.html








   

                            


                 











லேபிள்கள்:

வியாழன், 27 ஜனவரி, 2022

PARICHAYA --LESSON-7--क्या --हाँ---नहीं


PARICHAYA

LESSON-7

क्या --हाँ---नहीं               என்ன?    ஆமாம்        இல்லை 


आज कौन दिन है ?                    இன்று என்ன நாள் ?

आज सोमवार है |                        இன்று திங்கள் கிழமை 

क्या आज सोमवार है |                   என்ன இன்று திங்கள்கிழமையா ?

 हाँ,आज सोमवार है |                    ஆமாம், இன்று திங்கள் கிழமை 


यह किताब है |                                இது புத்தகம் 

क्या यह हिंदी किताब  है ?               என்ன இது ஹிந்தி புத்தகமா?

हाँ, यह हिंदी किताब  है|                   ஆமாம், இது ஹிந்தி புத்தகம்.

इस पुस्तक का नाम 'परिचय'  है |        இந்த புத்தகத்தினுடைய பெயர் பரிச்சய 


आप कौन हैं ?                               நீங்கள் யார்?

मैं राजू हूँ |                                      நான் ராஜு 

क्या आप डॉक्टर हैं |                       நீங்கள் மருத்துவரா ?

नहीं, मैं अध्यापक हूँ |                      இல்லை, நான் ஆசிரியர் .


आपका नाम क्या है ?                        உங்களுடைய பெயர் என்ன?

मेरा नाम महादेवी है |                          என்னுடைய பெயர் மஹாதேவி 

क्या आप कवयित्री हैं ?                       என்ன நீங்கள் கவிஞரா (பெண்பால் )?

हाँ, मैं कवयित्री हूँ |                             ஆமாம், நான் கவிஞர்.


क्या मेज़ पर घड़ी  है ?                         என்ன மேசையின்  மேல்  கடிகாரமா?

नहीं, मेज पर घड़ी नहीं है |                     இல்லை,  மேசையின்  மேல்  கடிகாரம் இல்லை.

मेज पर कलम और दवात हैं |               மேசையின்  மேல் பேனா மற்றும் பேனா மை  உள்ளது.



https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/Parichayalessontamil.html


https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/parichayalessontamilmeinaathahun.html




லேபிள்கள்:

திங்கள், 24 ஜனவரி, 2022

PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --7.ஆழ்வார்கள் பன்னிருவர்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

தமிழ் இலக்கிய வரலாறு
 
7.ஆழ்வார்கள் பன்னிருவர்

ஆழ்வார்கள்:


                 வைணவ சமயத்தின் முதன்மை தெய்வமாகிய திருமாலைப்  பற்றி செய்யுட்களை இயற்றிவர்கள்  ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர் அவர்களைப் பற்றி இங்கு காணலாம்.


முதலாழ்வார் மூவர்:


                        ஆழ்வார்களுள் காலத்தால்   முற்பட்டவர்கள்   பொய்கையார் இயற்றியது முதல் திருவந்தாதி , பூதத்தாழ்வார் பாடியது இரண்டாம் திருவந்தாதி , பேயாழ்வார் பாடியது மூன்றாம் திருவந்தாதி என்னும் மூவர் ஆவர். 

                              இவர்கள் திருமாலைக் கண்டு அனுபவித்த ஆனந்தமே திருப்பாடல்களாக உருப்பெற்றது. 


திருமழிசையாழ்வார்:


                      திருமழிசை என்னும் தலத்தில் பிறந்தவர் திருமழிசையாழ்வார்.  திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன இவர் பாடியவை ஆகும்.

PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --10.உரையாசிரியர்கள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/PRAVEEN%20POORVARDH%20--%20%20%20--10.%20.html

நம்மாழ்வார்:


                   "வேதம் தமிழ் செய்த மாறன்" எனப் போற்றப்படும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் தோன்றியவர் ஆவர். 

                          இவரால் பாடப்பட்டவை திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பனவாகும். 


மதுரகவியாழ்வார்:


                இவர் நம்மாழ்வாரையே தெய்வமெனக்  கொண்டு அவரையே பாடிப் பரவியவர் ஆவார்.         

                இவர் பாடியது 'கண்ணின்நுண் சிறுத்தாம்பு'  என்னும் நூலாகும்.


குலசேகராழ்வார்:


                     இவர் சேரமன்னராக இருந்தவர். இவர் அரச வாழ்க்கையை விட பெரிதும் ஈடுபட்டது  திருமாலின்  திருவடிகளே ஆகும். 

                  இவரது பாடல்கள்  "பெருமாள் திருமொழி " ஆகும்.


பெரியாழ்வார்:


                    திருமாலுக்கு பல்லாண்டு பாடிய இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றினார். பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துக்கு இவரது பாடல்களே மூல காரணம் என்பர். 


ஆண்டாள்:  


                   இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு திருமகள். சூடிக்  கொடுத்த நாச்சியார் என்னும் திருப்பெயர் கொண்டவர். 

                   இவர் பாடியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை. 

                   கண்ணனையே தன் கணவனாக கருதி வாழ்ந்தவர்.


தொண்டரடிப்பொடியாழ்வார்:


                   இவருடைய இயற்பெயர் விப்பிரநாராயணர். இவர் திருமண்டங்குடியைச் சேர்ந்தவர். 

                  இவர் பாடிய நூல்கள் திருமாலை , திருப்பள்ளியெழுச்சி ஆகியவை.


திருப்பாணாழ்வார்:


                     இவர் உறையூரில் பிறந்தவர்.  அமலனாதிப் பிரான்  என்னும் நூலைப் பாடியுள்ளார்.


திருமங்கையாழ்வார்:


                       திருக்குறையலூரில் பிறந்த இவருடைய இயற்பெயர் நீலன். பெரிய திருமொழி, சிறிய  திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்னும் நூல்கள் இவர் பாடியவை ஆகும்.


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/Praveenpoorvardhpanniruthirumuraigal.html


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhuraiyasiriyargal.html


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARUSANGAKALAMORUPORKALAM.html


Praveen poorvardh--இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhvalivadhaipadalamramanvaliyayaikollakaranam.html


 





லேபிள்கள்:

வெள்ளி, 21 ஜனவரி, 2022

PARICHAYA--LESSON-6--मेरा----मेरे ---मेरी -- என்னுடைய

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PARICHAYA

LESSON-6

पाठ-६
 
मेरा----मेरे ---मेरी -- என்னுடைய 




मैं गणेश हूँ |                நான் கணேஷ் 


मेरा भाई राजेश है |         என்னுடைய சகோதரன் ராஜேஷ் 


यह परिमला है |                 இவள் பரிமளா 


इसका नाम परिमला है |          இவளுடைய பெயர் பரிமளா 


prathmic lesson मेरा----मेरे ---मेरी -- என்னுடைய 



तुम दिनेश हो |               நீ தினேஷ் 


तुमहारा भाई रमेश है |                 உன்னுடைய சகோதரன் ரமேஷ் 


वह भरत  है |             அவன் பரத் 


उसका नाम भरत  है |         அவனுடைய  பெயர் பரத் 


ये कौन हैं |               இவர் யார் ?


ये मेरे पिताजी के मित्र हैं |              இவர் என்னுடைய அப்பாவின் நண்பன் 


इनका नाम गोविन्द है |            இவருடைய பெயர் கோவிந்த 



यह किष्की किताब है ?               இது யாருடைய புத்தகம் ?

 

यह मेरी किताब  है |               இது என்னுடைய புத்தகம் 


ललिता, तुम्हारी किताब  कहाँ है ?   லலிதா, உன்னுடைய புத்தகம் எங்கே?


मेरी किताब मेज पर है |         என்னுடைய புத்தகம் மேஜையின் மேல் உள்ளது.


वह सुनीता का घर है |       அது சுனிதாவின் உடைய வீடு.


उसका घर बड़ा   है |                                அவளுடைய வீடு பெரியது.


उसका घर  बहुत सुन्दर  है |      அவளுடைய வீடு மிகவும் அழகாக 

உள்ளது.


उसके  घर में चार कमरे   हैं  |    அவளுடைய வீட்டில் நான்கு அறைகள் உள்ளது.

      

चारों कमरे छोटे और सुन्दर हैं |        நான்கு அறைகள் சிறிய மற்றும் அழகாக உள்ளது. 


यह बाग है |        இது தோட்டம். 


यह स्कूल का बाग है |      இது பள்ளியினுடைய தோட்டம்.


स्कूल का  बाग बहुत बड़ा  है |          பள்ளியினுடைய தோட்டம் மிகவும் பெரியது.


 बाग में आम के पेड़ और फूल के पौधे  हैं  |      தோட்டத்தில்  மாமரம் மற்றும் பூச்செடிகள் இருக்கின்றன.  


आपका नाम क्या है ?     உங்களுடைய பெயர் என்ன?

 मेरा नाम कबीर है  |   என்னுடைய பெயர் கபீர்.


 तुम्हारा नाम क्या है ?     உன்னுடைய பெயர் என்ன?

 मेरा नाम तुलसीदास  है  |         என்னுடைய பெயர் துளசிதாஸ் 


आपका घर कहाँ  है ?          உங்களுடைய வீடு எங்கு இருக்கிறது?

 मेरा घर एक छोटे गाँव में  है  |    என்னுடைய வீடு  சிறிய கிராமத்தில் உள்ளது.


तुम्हारा घर कहाँ  है ?     உன்னுடைய வீடு எங்கு இருக்கிறது?

 मेरा घर शहर में हैं |    என்னுடைய வீடு நகரத்தில் உள்ளது.



https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/Parichayalessontamil.html


https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/Parichayalessontamil.html


லேபிள்கள்:

புதன், 19 ஜனவரி, 2022

PRAVESHIKA --தமிழ் பொழில்-2 --10.ஆதிரை

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA


10.ஆதிரை


திரையை பற்றி ஒரு கட்டுரை எழுதுக"


முன்னுரை:


                    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஒரு கதாப்பாத்திரம் ஆதிரை . அவள் சோழநாட்டின் பூம்புகாரில் பிறந்து காவிரிப்பட்டினத்தில் வாழ்ந்த சாதுவன் என்ற  வணிகனை மணம் செய்து  கொண்டாள் அந்த  கணிகை. அவளுடைய சிறப்புகளையும், மேன்மையையும்  பற்றி இந்த கட்டுரையில் காணலாம்


இல்வாழ்க்கை:

 

                        ஆதிரை தன் கணவன் சாதுவனுடன் இல்லறம் எனும் நல்லறத்தை இனிதே நடத்தி வந்தாள். மகிழ்வான வாழ்கையை  வாழ்ந்து வந்தனர். ஆனால், ஊழ்வினையின் காரணமாக கற்புமிக்க தன் மனைவி ஆதிரையை மறந்தும், இல்லற தருமத்தையும் மறந்து கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். தன்னுடைய செல்வம் அனைத்தையும் இழந்தான். ஆதிரை தன் கணவனை எண்ணி அவனுடைய பிரிவு துயர் தாளாமல் வருந்தி பொறுமையுடன் வாழ்ந்து வந்தாள்.


சாதுவன் தவறுணர்தல்:


                        சாதுவன் செல்வத்தை இழந்த காரணத்தால் அந்த கணிகை அவனை வெறுத்து ஒதுக்கினாள். இந்நிலையில் சாதுவன் தான் செய்த  செயலை எண்ணி மிகவும் மனம் வருந்தினான். கற்புமிக்க தன் மனைவி ஆதிரையின் நினைவு வந்தது.  தன்னுடைய செயலுக்கு வருந்தி வீடு திரும்பினான். அங்கு ஆதிரை அவனை இன்முகத்துடன் வரவேற்றாள்.


பொருள் ஈட்ட செல்லுதல்:


                         தீய வழிகளில் பொருள் அனைத்தையும் இழந்ததால் பொருள் ஈட்டுவதற்காக கலம் ஏறி வெளிநாடு சென்றான். அங்கும் வீதி அவனை குறுக்கிட்டது. புயல்  காற்றின் காரணமாக அவனுடைய கலம் கவிழ்ந்தது. பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மரத்துண்டு  பற்றி மிதந்த சாதுவானை கடல் அலைகள் நாகர் வாழும் மலைப்பகுதியில் ஒதுக்கின. அங்கு அவன் மிகவும் அயர்ந்து  உறங்கி போனான்.   


PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA--%20-2--7.%20%20%20.html

ஆதிரை தீயில் புகுதல்:


                 அந்த கலத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்து வந்த சிலர் ஆதிரையிடம் கலம் உடைந்ததால் இறந்தவர்களுள் உன் கணவனும் ஒருவன் என கூறினான். இதை கேட்ட ஆதிரை மெழுகென உறைந்தாள். தன்னுடைய கணவன் இறந்த பிறகு நானும் இந்த உலகில் உயிர்  வாழ மாட்டேன் என எண்ணி ஊராரை அழைத்து நெருப்புக்குழி அமைத்து தர வேண்டினாள். பிறகு அந்த தீக்குழியில் இறங்கினாள் ஆனால்,   கற்புநெறி கொண்ட ஆதிரையை தீ சுடவில்லை.  

             நெருப்பு தன்னை சுடவில்லை என்பதை அறிந்த அவள் "தீயும் கொல்லாத் தீவினையாட்டியேனாகிய நான் செய்த தவறு என்ன? நான் என்ன செய்வேன்? என அழுது புலம்பினாள்.


அசரீரி  ஒலித்தல்:


               ஆதிரை வருந்தி புலம்பி கொண்டிருந்த சமயத்தில்  ஒரு அசரீரி ஒலித்தது. "ஆதிரை ! கேள் ! உன் கணவன் நாகர் வாழும் மலைப்பகுதியில் இருக்கிறான். விரைவில் சந்திரதத்தன் எனும் வணிகனின் மரக்கலம் ஏறி வருவான்  என கூறியது. அதுகேட்ட ஆதிரை துன்பம் நீங்கி தன் கணவனின் வரவை எதிர் நோக்கி அறச்செயல்கள் புரிந்து வாழ்ந்து வந்தாள் .


நாகர் மலைப்பகுதி:


                 நாகர் மலைப்பகுதியில் வாழும் மக்கள் மது அருந்துபவர்கள், புலால் உண்பவர்கள், திசை தவறி வரும் வணிகர்களின் பொருள்களை  கவர்ந்து கொண்டு அவர்களையும் கொன்று தின்பர். 

              அப்படிப்பட்ட பகுதியில் கடல் அலைகள் ஒதுக்கி உறங்கிய நிலையில் களைத்து  உறங்கி  கிடந்த சாதுவனை தங்களுக்கு நல்ல உணவாக அமைவான் என எண்ணி அவனை நாகர் மலை மக்கள் அவனை சூழ்ந்து நின்றனர். பேச்சொலி கேட்டு எழுந்த சாதுவன் தான் இருக்கும் சூழ்நிலையை கண்டு அஞ்சினான். ஆனாலும் , அவர்கள் பேசும் மொழி இவனுக்கும் தெரிந்த காரணத்தால் அவர்கள் மொழியிலேயே பேசினான். அதனால் வியந்து போன அம்மக்கள்  அவனை கொல்லாது தங்கள் நாகர் தலைவன் குருமகனிடம் அழைத்து சென்றனர்.


நாகர் தலைவன்:


                    நாகர் தலைவன் குருமகன் தன் மனைவியுடன் இருந்தான்.  அங்கு சென்ற சாதுவன் அவனிடம் அவர்கள் மொழியிலேயே பேசி அவர்களின் அன்பை பெற்றான். நாகர் தலைவன் நீ வந்த காரணம் என்ன என வினவ அவனும் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அதுகேட்டு வருந்திய அவன் சாதுவனுக்கு வேண்டுமளவு கள்ளும் , ஊனும்  வழுங்குமாறு பணியாளரை பணித்தான். அப்போது சாதுவன் அவற்றை மறுத்தான்.


அறநெறி உரைத்தல் :


                          கள்ளையும் , ஊனையும் தவிர வேறு இன்பம் உலகில் இல்லை என எண்ணி இருந்த நாகர் தலைவனுக்கு சாதுவன் பின்வருமாறு அறநெறி உரைத்தான்.

                   "பண்புமிக்க சான்றோர் கள்ளையும் , பிற உயிர்களை கொல்லும்  செயல்களை தீயதென ஒதுக்கி தள்ளுவார். 

                    "உலகில் பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும், உறங்களும், விழித்தலும் போன்றது.

                     " நல்லது புரிவோர் நல்லுலகம் அடைவர். தீமை புரிவோர் நரகத்தை அடைவர். 

                    "இந்த உண்மைகளை அறிந்த சான்றோர் அந்த தீய செயல்களை விட்டு ஒழித்தனர். 

                   மேலும், நாம் கனவின் வாயிலாக உடல் ஓரிடத்தில் கிடக்க உயிர் பல இடங்களுக்கு சென்று வருதலை உணரலாம்.  உடலை விட்டு பிரிந்த உயிர் அவரவர் வினைக்கு ஏற்ப ஓர் உடலின்கண் புகும்.

                 என அறநெறிகளை உரைத்தான்.


நல்லறிவு பெறுதல்:


                          சாதுவன் கூறியவற்றை கேட்ட நாகர் குல தலைவன் சாதுவன் காலில் விழுந்து வணங்கி  நாங்கள் "கள்ளையும் , உனையும் நீங்கி உயிர் வாழ்தல் இயலாது"  எங்களுக்குரிய நல்வழி குறுக என கூறினான். 

                    அவர்களிடம் சாதுவன் காலம் சிதைந்து வரும் மக்களை கொல்லாது அவர்களை காப்பாற்றுக. முதுமையுற்ற இறக்கும் விலங்குகளை மட்டும் உண்ணுக. 

           சாதுவன் கூறிய அறத்தினை கடைபிடித்து வாழ்வதாக குறி அவனுக்கு மனம் கவரும் சந்தன மரங்கள், மெல்லிய ஆடைகள், நீதிக்குவியல்கள் ஆகியவற்றை வழங்கினான். சாதுவன் சந்திரதத்தன் எனும் வணிகனது ஏறி தன்னுடைய நகருக்கு வந்து  தன் மனைவியுடன் அறங்கள் பல செய்து நல்வாழ்க்கை வாழ்ந்தான்.


ஆதிரையின் கற்பின் மேன்மை:


                             மணிபல்லவ தீவில் இருந்து வந்த மணிமேகலை தான் எடுத்து வந்த அமுதசுரபியுடன் புகார் நகரத்தினை அடைந்தாள். பின்னர், அறவண அடிகள் மற்றும் காயசண்டிகை வாயிலாகவும் ஆதிரையின் பெருமையை அறிந்து , முதன் முதலாக அமுதசுரபியில் உணவிடும் தகுதியை உடையவள் ஆதிரையே என உணர்ந்து அவளை தேடி சென்று, அமுதசுரபியை ஏந்தி நிற்க, "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" என கூறி உணவிட்டாள்.

                   

முடிவுரை:

.

              இவ்வாறக பொறுமையில் சிறந்தவள் கற்பில் உயர்ந்தவள்  ஆதிரை.மங்கையர் திலகமாக விளங்கியவள்.உயர்ந்த வாழ்வும், அறிய வாக்கும் பெற்று விளங்கிய ஆதிரையின் கற்பின் திறம் போற்றுதற்குரியது.


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKATAMILPOZHILUTTHAMANANBAR.html

              

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikapulamaipendir.html


bharathiyar murasu


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikamurasubharathiyar.html

               



லேபிள்கள்:

புதன், 12 ஜனவரி, 2022

Praveen poorvardh--இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

வாலிவதைப் படலம் 

இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்களை தொகுத்து எழுதுக?


முன்னுரை:

 

                  இராமபிரான் அவர்கள்  அயோத்தியாவிலிருந்து வனவாசம் சென்றார். வனவாசத்தின் போது அவருக்கு கிட்கிந்தை மலையின் அரசனான சுக்ரீவன் உடன் நட்பு ஏற்பட்டது. அங்கு சுக்கிரீவனை கிட்கிந்தா மலையின் அரசன் ஆக்குவதற்காக அவனுடைய அண்ணண் வாலியை இராமபிரான் போரிட்டு அவனை கொன்றார். அவ்வாறு இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்களாக கூறிய கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.


இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள் :



                      இராமபிரான் வாலியை  நோக்கி, நீ முன்னர் உன்னுடைய எதிரி மாயாவியைத் துரத்திக்கொண்டு சென்றாய். பின்னர் பல நாட்களாக திரும்பவில்லை. அதனால் உன்னை பின்தொடர முனைந்த சுக்கிரீவனை உங்கள் குலத்தலைவர்கள் அரசப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினர். அதற்கு சுக்கிரீவன் ஏன் அண்ணனை கொன்ற மாயாவியை கொன்று அழித்த பின் நானும் மாண்டு போவேன். அண்ணன் இல்லாமல் நான் அரசாள மாட்டேன் என கூறினான்.

               பிறகு அமைச்சர்களும், பெரியோர்களும் வற்புறுத்தி  அரசுரிமையை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிடவே குற்றமற்ற சுக்கிரீவன் ஆட்சியை ஏற்றான்.

          அதன் பிறகு மாயாவியை கொன்று நீ மீண்டும் வந்ததும் உன்னை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று என் தலைவனே! நமது வானர இனத்தவர்கள் வலியகொடுத்த அரசாட்சி உன்னுடையது என்று முன்பு நடந்த விஷயங்களை கூறினான்.

                    ஆனால்  நீயோ சுக்கிரீவன் சிறுதும் குற்றமற்றவன் என்பதை அறிந்தும் அவனிடம் இரக்கம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்தாய். என்னைத் துன்புறுத்ததே, என்  குற்றத்தை பொறுத்துக்கொள்  என்று சொல்லியும் அவன் மீது மிகுந்த கோவம் கொண்டு சீறினாய்.
 
                 மிக்க பலம் மிகுதியாக உடையவனாய் இருந்தும், பெரும் போரில் உனக்குத் தோற்றேன் என்று சொல்லியும் அவனைக் கொள்ள துணிந்தாய். அதனால் அவன் நான்கு திசைக்கு அப்பால் ஓடினான். சுக்கிரீவன் வலியிழந்து ஓடுகிறான் என்பதை அறிந்தும் அவன் உன்னுடைய தம்பி என்றும் கருதாமல் அவனிடம் இரக்கம் கொள்ளவில்லை. அவனை துரத்தினாய். அதனால் அவன் மதங்க முனிவரால் சாபம் இடப்பெற்ற தடை எல்லையை உடைய  இருசியமுகமலையில் போய்ச்சேர்ந்தான். அதனால் உன்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவனும் உயிர் பிழைத்தான். 

             பிறர் மனைவியின் கற்பு நிலையை பாதுகாக்கும் பெருமையே அன்பின் செயலாவதும், உயர் குடிப்பிறப்பின்  பயனாவதும்,வீரத்தின் பயனாவதும் ஆகும். பிறர் புக முடியாத காவலை உடைய பெண்களின் கற்பை அழித்தல் அறத்திலிருந்து தவறும் செயல் ஆகும். 

PRAVEEN POORVARDH-வாலி வதைப்படலம்-கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEEN%20POORVARDH-%20-%20%20%20.html

                 வாலி நீ அறத்தின் தன்மையை அறியாமல், இம்மை மறுமைப் பயன்களையும் ஆராய்ந்து அறியாமல் போனாய். அவற்றை ஆலோசித்து அறிந்து இருந்தால் நீ உன்னுடைய தம்பியின் மனைவியை அடைய நினைப்பாயோ?


              இப்படியெல்லாம் நீ செய்தாய். அதனாலும், அந்த சுக்கிரீவன் எனக்கு உயிர் நண்பன் ஆனதால் உன்னுயிரை பறித்தேன். எளியவர்களின் துன்பம் ஒழிப்பதே என் கருத்தாகும் என இராமபிரான் உரைத்தார்.


முடிவுரை:

       
                 இவ்வாறாக வாலியை கொல்வதற்கான காரணங்களை இராமர் கூறினார்.




praveen poorvardh kavidhai poonga




TAMIL ILAKKIYA VARALARU




























           

லேபிள்கள்:

செவ்வாய், 11 ஜனவரி, 2022

PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --10.உரையாசிரியர்கள்

DAKSHIN BHARATH HINDII PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

தமிழ் இலக்கிய வரலாறு 

10.உரையாசிரியர்கள் 


உரையாசிரியர்கள்


               தமிழ் இலக்கண இலக்கியங்களென்னும் கலைக்கோயிலை உரையாசிரியர்கள் பலர் தமது உரை எனும் நல்விளக்கேற்றியுள்ளனர்.


இளம்பூரணர் :


                            உரையாசிரியர் என்றே சிறப்பிக்கப்படுகிறார். இவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதி உள்ளார். இவர் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

                         "உளங்கூர் கேள்வி இளம்பூரணர்" எனவும் அழைக்கப்படுகிறார்.


பேராசிரியர்:


                     இவர் திருக்கோவையாருக்கு உரை எழுதியுள்ளார். இவரை சைவர் என்பர். தொல்காப்பியத்திற்கும், குறுந்தொகைக்கும் உரை எழுதியுள்ளார். இவரது கல்வி அறிவு அளவிடற்கரியது. 


சேனாவரையர்: 


                    சிவஞான முனிவரால் "வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்தவர்" என பாராட்டப்படுகிறார். இவரது உரைநடை விடைகளோடு அமைந்ததாக இருக்கும். 

               தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதிய உரை உயர்ந்து விளங்குகிறது. இவரை படை தலைவர் என்பர். 


நச்சினார்க்கினியர்:


                     தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார். 

                 குறுந்தொகையில் இறுதி இருபது செய்யுளுக்கு உரை எழுதியுள்ளார். இவரது உரையில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து மேற்கொள் காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. 

                இவர் "அமுதவாயர்" என புகழப்படுகிறார்.

PRAVEEN POORVARDH---வாலி தன் குற்றத்தை பொருத்தருளுமாறு இராமனிடம் வேண்டியவை

https://todayisagooddayhindi.blogspot.com/2022/02/praveenpoorvardhvalikutrathaiporutharulavendiyavai.html


பரிமேலழகர்:


                      திருக்குறளுக்கு உரைகண்டவர்களில் உயர்ந்து விளங்கும் இவர் காஞ்சியை சேர்ந்த வைணவ அந்தணர். 

                     மேற்கோள் காட்டுவதிலும், பிறர் உரையை மறுத்துப்பேசி தன்னுடைய கொள்கையை நிலை நாட்டுவதில் வல்லவர். பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார்.


அடியார்க்கு நல்லார்:


                      முத்தமிழும் கற்றுத் துறைபோகிய வித்தகர் அடியார்க்கு நல்லார். இவர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியுள்ளார்.

                      ஊர்சூழ் வரி வரையிலுமே இவரது உரை உள்ளது.  இசை நூல்கள், நாடக நூல்கள் ஆகிய பலவற்றிலிருந்து மேற்கொள் காட்டியிருப்பது இவரது புலமையை காட்டும். 

                      சிவஞான போதத்திற்கு "சிவஞான போத மாபாடியம் " எனும் உரையை  சிவஞான முனிவர் எழுதியுள்ளார். இவரே தொல்காப்பியத்திற்கு சூத்திர விருத்தி என்னும் உரைநூலும் எழுதியுள்ளார். பிரபந்த சாரம், மும்மணிக்கோவை, நவரத்தின மாலை  முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.

 

PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு - 5.இரட்டைக் காப்பியங்கள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILIRATTAIKKAPPIYANGAL.html


PRAVEEN POORVARDH-தமிழ் இலக்கிய வரலாறு-சங்ககாலம் ஒரு பொற்காலம் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARU.html






லேபிள்கள்:

திங்கள், 10 ஜனவரி, 2022

PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA

தமிழ் பொழில்-1

11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 


உத்தமர் காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கு ஒரு படிப்பினை என்பதை நாமக்கல் கவிஞர் எங்ஙனம் வலியுறுத்துகின்றார் ?


முன்னுரை:


            நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர், 19, 1888 இல் பிறந்தவர்  கவிஞர் இராமலிங்கம் அவர்கள். இவர் மிகச்சிறந்த கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர், சமூக சீர்த்தீர்த்தவாதி. இவர் தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞராவார்.  பத்ம பூஷன் விருதும் பெற்றவர்.  மலைக்கள்ளன், அவனும் அவளும், நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறள் புதுஉரை, கவிதை தொகுப்பு, கட்டுரைகள் போன்றவற்றை படைத்துள்ளார். இவர் எழுதிய காந்தியடிகளின் வாழ்கை நம் வாழ்க்கைக்கு ஒரு படிப்பினை என்ற கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.


காந்தியடிகளின் வாழ்க்கை படிப்பினை:


                   நாம் காந்தியடிகளை போல அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். கடவுளை வணங்க வேண்டும். அவரை போல கற்றாரா உலவ வேண்டும். களைப்பு தீர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.  கண்டதை எல்லாம் உண்ணாமல்  அளவாக உண்ண வேண்டும்.          

              ஒழுங்காகத் திட்டம் போட்டு கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். சோம்பலை துறக்க வேண்டும். சொன்ன சொல்லை காக்க வேண்டும். 

             மக்கள் அனைவரும் சமம் என எண்ண வேண்டும். யாரை இருந்தாலும் இன்முகமாய் பழகுகின்ற எளிமை வேண்டும். குற்றம் செய்தால் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். பிறர் செய்யும் தவறை மன்னிக்கும் குணம் வேண்டும். 

                 வாழ்வில் உண்மையையும், சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். உழைப்பின்றி சுகம் விரும்புவது ஊனம் என உணர்ந்து செயல் பட வேண்டும்.  

                     துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு ஓடிச்சென்று உதவ வேண்டும். கைத்தொழிலின் பெருமையை உணர்ந்து காந்தியை போல கைராட்டை நூற்க வேண்டும். சமரச உணர்வு வேண்டும். 

                   தன் இனமே மேல் என்ற செருக்கை தவிர்க்க வேண்டும். சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். நெறிதவறி சொர்க்கம் போன்ற இன்பமே வரினும் அதனை நீக்கி நேர்மையுடன் வாழ வேண்டும்.  எப்போதுமே இனிமையான சொற்களையே பேச வேண்டும். பிறரிடம் இரக்கம் காட்ட வேண்டும். 

                  பிறர் நம்மிடம் கடுஞ்சொல் கூறினாலும் அவற்றைப் பொறுத்து புன்னகையுடன் வாழ வேண்டும். பொதுநலத்தை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நம் சேவைகளை செய்ய வேண்டும்.

                     பொதுப்பணத்தை கணக்கில் காட்டி அவற்றை அறச்செயல்களுக்கு மட்டுமே செலவிடல் வேண்டும். காந்தியின் கதைகளே தெருக்களில் விளங்க வேண்டும். 

                       பள்ளிகள் எல்லாம் காந்திவழியாக வேண்டும். பாடங்கள் எல்லாம் காந்தி மயமாக இருக்க வேண்டும். நாட்டியத்தில் காந்தி அபிநயங்கள் வேண்டும். மனைகள் எல்லாம் காந்தி புகழ் மகிழ வேண்டும். எங்கும் காந்தி சிலை நிறுவப்பட வேண்டும். காந்தியின் அன்பு கொளகைகளே போதனையாக கொடுக்க வேண்டும். 

PRAVESHIKA-TAMIL POZHIL-1-NATPU-நட்பு--திருக்குறள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA-TAMIL%20POZHIL--%20.html

               கல்வியில் காந்திமணம் கமழ  வேண்டும். கலைகள் எல்லாம் காந்தி குணம் தெரிய வேண்டும். அவருடைய பிறந்த நாளை வேள்வி என கருதி செய்ய வேண்டும். சொல்லும் அறமெல்லாம் காந்தி அறம் சொல்ல வேண்டும். காந்தியின் நடத்தையை பின்பற்ற வேண்டும். 


முடிவுரை:


            இவ்வாறாக காந்தியடிகளின் வாழ்க்கை நம் அனைவரின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய படிப்பினையாக இருப்பதை கவிஞர் அவர்கள் விளக்கியுள்ளார்.  


Praveshika-Tamil Pozhil-1-Thirukkural-2.Natpu Aariyadhal

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/PRAVESHIKA%20NATPARADHAL.html


PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikaaamuthasurabiaaputhiran.html






  


லேபிள்கள்:

வெள்ளி, 7 ஜனவரி, 2022

VISHARAD POORVARDH--மலர்ச்செண்டு-- 1.திருக்குறள்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

VISHARAD POORVARDH

மலர்ச்செண்டு 

சங்ககாலக்கவிமலர்கள்

1.திருக்குறள் 


 சொல்வன்மை குறித்து திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:


 முன்னுரை:


                     திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் முதற்பாவலர் செந்நாப்போதார்,தேவர்,  நாயனார் முதலிய பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.வள்ளுவன் தன்னை உலகுக்கு தந்த புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திருவள்ளுவரின் பெருமையை பாரதியார் எடுத்து கூறுகிறார்.

                         திருக்குறள் 133 அதிகாரங்களும்  1330 குறள்களையும் கொண்டுள்ளது.திருக்குறள் பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து என்றும் அழைக்கப்படுகிறது.இது அறத்துப்பால் ,பொருட்பால்,காமத்துப்பால் எனும் மூன்று பிரிவுகளை கொண்டது. 

             அதில் சொல்வன்மை குறித்து திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை இங்கு காணலாம்.


சொல்வன்மை :


  •                       நாம் நம் நாவினால் பேசி எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கும் திறமை வேறு எந்த சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.


  •                   அவரவர் தாம் பேசும் சொற்களாலே  நன்மையும், தீமையும் அமைவதால் பேசக்கூடிய நபர் தாம் பேசும் சொற்களில் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


  •                சொல்லும்போது கேட்பவர்களை தன வயப்படுத்தும் பண்புகளுடனும், கேட்காதவரும் கேட்கவிரும்புவதாக அமைவதே சொல்வன்மை ஆகும்.


  •                        நாம் எந்த மனிதர்களிடம் பேசினாலும் அவர்களுடைய குடிப்பிறப்பு, வயது, செல்வம், ஒழுக்கம், தோற்றம் ஆகிய தகுதிகளை அறிந்து பேசவேண்டும். அதை தவிர உயர்ந்த அறமும், பொருளும் வேறு இல்லை. 


  •                        நாம் சொல்லும் சொல்லை வெல்ல வேறு சொல் இல்லை என்பதை அறிந்து அப்படிப்பட்ட சொல்லை சொல்ல வேண்டும்.


  •                    பிறரிடம் பேசும் போது அவர்கள் திரும்பவும் நம் பேச்சை கேட்க விரும்புமாறு பேச வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது அவர்களுடைய சொற்களில் குற்றம் காணாமல் அதன் பொருளை மட்டும் பார்க்க வேண்டும். அதுவே மனக்குற்றம் அற்றவர்களின் கொள்கை ஆகும்.


  •                    தான் எண்ணியதை பிறர் ஏற்று  கொள்ளுமாறு சொல்லும் ஆற்றல் உள்ளவன் சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன். கேட்பவர் பகையாளன் என்றாலும் அஞ்சாதவன். இவனை பகை கொண்டு வெல்வது எவருக்கும் கடினமானது ஆகும்.


  •                     ஒருவன் தான் சொல்லும் செய்தியை வரிசைப்பட கோர்த்து இனிமையாக சொல்லும் ஆற்றல் உடையவனாக இருந்தால், அவனுடைய சொற்களை இந்த உலகம் விரைந்து ஏற்கும்.

  •                குற்றமற்ற சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாத மனிதர்கள் பல பல சொற்களை பேசி கொண்டிருப்பர்.


  •               தான் கற்றதை பிறர் மனங்கொள்ள விளக்கி சொல்லும் ஆற்றல் இல்லாதவர், கொத்தாக மலர்ந்தும் மணம் இல்லாத மலர் போன்றவர்.

VISHARAD POORVARDH---மலர்ச்செண்டு---சிங்கன் சிங்கி  உரையாடல்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhakutralakuravanjisingansingi.html

முடிவுரை:


            இவ்வாறாக மனிதர்களின் சொல்வன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று இந்த அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.  


Visharad poorvardh-இலக்கிய கனிகள்-1. திருமந்திரம்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/visharad-poorvardh-1.html


VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html









 










லேபிள்கள்:

வியாழன், 6 ஜனவரி, 2022

PRAVEEN POORVARDH--வாலிவதைப்படலம்--வாலி இராமனை இகழ்ந்து கூறும் மொழிகள்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

வாலிவதைப்படலம் 

வாலி இராமனை இகழ்ந்து கூறும் மொழிகளைத் தொகுத்து எழுதுக:


முன்னுரை:

                       

                   இராமபிரான் அவர்கள் அயோத்தியாவிலிருந்து தன்னுடைய தந்தையின் ஆணைக்கிணங்க வனவாசம் சென்றார். அந்த சமயத்தில் அவருக்கு குரங்கின தலைவன் ஆன சுக்கிரவன் உடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அவனுக்கு உதுவுவதற்காக வாலியை எதிர்த்து போரிட்டார். அப்போது வாலி இராமபிரானை இகழ்ந்து கூறியவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.

                 

வாலி :


                  வானரமான வாலி கிட்கிந்தையின் அரசன். சுக்கிரவனின் அண்ணன் . எதிரில் நிற்கும் எதிரியின் வீரத்தில் பாதி தனக்கு சேருமாறு வரம் பெற்றவன். தாரை இவனது மனைவி. அங்கதன் இவர்களது மகன். 



வாலிக்கும்,  சுக்கிரீவனுக்கும்  இடையே போர்:


 
                 இராமன் சுக்கிரவனிடம் சென்று நீ கொடிப்பூ அணிந்து கொண்டு வாலியுடன் போர் புரியுமாறு சொல்ல, அவ்வாறே சுக்கிரீவனும் வாலியுடன் போர் புரிந்தான். வாலி சுக்கிரீவனை கொல்ல முயன்ற சமயத்தில் இராமன்  வாலியின் மீது அம்பை செலுத்த வாலி மண்ணில் சரிந்தான். வாலி தன் மார்பில் தோய்த்த அம்பில் இராமபிரானின் நாமத்தை கண்டு மிகவும் கோவம் கொண்டு இராமனை பலவாறு இகழ்ந்தான் .


வாலி ராமனை இகழ்ந்து கூறும் மொழிகள்:


                              வாலி இராமபிரானை நோக்கி, ஓவியத்தில் எழுதமுடியாத அழகு பெற்றவனே.. உன் குலத்தில் பிறந்த அனைவருக்கும் அரசதருமம் உரிய பொருளாக இருக்கும். நீ மனைவியை பிரிந்த துயரின் காரணத்தால் தடுமாறி  ஆலோசிக்காமல் என்மீது அம்பை எய்தாயோ என வினவினான்..


                           அரக்கர் உனக்கு தீமை செய்தால் அதனைப்  போக்க குரங்கினத் தலைவனான என்னை கொல்ல வேண்டும் என உங்கள் மனுதருமத்தில் கூறப்பட்டுள்ளதா? நீயே இப்படிப்பட்ட பழியை ஏற்றுக்கொண்டால் இந்த உலகத்தில் புகழ் பெற்று வாழக்கூடியவர் யார்?


                             கருணையின் வள்ளலான நீ இவ்வுலகில் பிறந்ததனால் அறமே நிகழ வேண்டிய இக்காலத்தில் கலி யுகம் தொடங்கி தீமையை தர தொடங்கி விட்டதா? இந்த உலகத்தில் வலிமை குறைந்த மக்கள் மட்டுமே அறமும், ஒழுக்கமும் கொண்டு வாழ வேண்டுமா?


                         இந்த உலகில் வீரர்களாக உள்ளவர்கள் செய்யும் செயல்கள் ஆண்மைக்குரியதாகி விட்டது. பழமையான நன்னூல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனான நீ என்னிடம் இவ்வாறான முறையற்ற செயலை செய்தாய் அப்படி இருக்க நீ இலங்கை வேந்தன் இராவணனிடம் செய்த முறையற்ற செயலுக்காக எவ்வாறு கோபம் கொள்ள முடியும்? 


                          இராம! உன்னுடைய இரண்டு உறவினர்கள் இருவர் போர் புரியும் போது நீ ஒருவர் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவருக்கு மட்டும் உதவி செய்வது அறமான செயலகுமா என்றான்.


                               இராமபிரானே! நான் உன்னுடைய பகைவன் அல்ல எனும் பட்சத்தில் நீ பெருமைக்குணம் நீங்கி அன்பின்றி மறைந்து இருந்து பாணத்தால் என்னை அடித்த செயல் வீரம் ஆகாது. அறநூல் முறையும் ஆகாது. 
 
                          இம்மை மறுமைகளை எண்ணி பார்த்து, எல்லாரிடமும் சமமாக பழகுவதே அறத்தை காக்கும் செயலாகும். பழிபாவங்கள் தன் பக்கம் வராதபடி காத்துக்கொள்ளமால் ஒருவன் பக்கம் மட்டும் சார்ந்து உதவி செய்வது எப்படி அறம் ஆகும்?


                   இராவணன் கவர்ந்து சென்ற சீதையை மீட்பதற்காக யானை பலம் கொண்ட என்னை துணையாக கொள்ளாமல் முயலுக்கு இணையான சுக்கிரவனை பற்றுதல் சிறந்த முயற்சியாகுமா?


                        நிலவுக்கு கரிய நிறம் பொருந்திய மாசு உள்ளது.  சூரிய வம்சத்தில் நீ பிறந்தமையால் ஒரு நிலையான மாசு உண்டாகி விட்டது.


                     வலிய வந்து ஒருவன் என்னை போருக்கு அழைக்க அவனுடன் போரிடுவதற்காக வந்த என்னை மறைந்து இருந்து என் உயிரை கவர்ந்த நீ இப்பொழுது நான் விழுந்து கிடக்கும் இந்த இடத்தில் நாணமின்றி ஆண்சிங்கம் போல நிற்கின்றாய்.


                     நீ அறநூல்களின் முறையையும் உங்கள் குலத்து சான்றோர்களின் இயல்பையும் நல்லொழுக்கத்தையும் பாதுகாக்காமல் என்னை கொன்றாய். அதனால் அரச நீதி என்ற பாதுகாவலையே அழித்துவிட்டாய்.


                       உன் மனைவியை இராவணன் கவர்ந்து சென்றுவிட்டான் அவனை அழிக்காமல் என்னை அம்பு எய்து கொன்றதால் உன் கையில் உள்ள பெரிய வில் உன் செயலை பழிப்பதற்கான காரணம் ஆகிவிட்டது. நீ வில் வித்தை கற்று கொண்டது ஆயதமில்லாத எதிரியின் மீது அம்பு எய்து கொல்வதற்குத் தானா எனக் கேட்டான்.
                    

முடிவுரை:


   
              இவ்வாறாக வாலி தன் கண்களில் பொறி பறக்க மிகுந்த சினம் கொண்டு கொடிய வார்த்தைகளை கூறி இராமபிரானை இகழ்ந்தான்.  





      












லேபிள்கள்:

செவ்வாய், 4 ஜனவரி, 2022

VISHARAD POORVARDH --மலர்ச்செண்டு --1.பெரியபுராணம்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA 

VISHARAD POORVARDH

மலர்ச்செண்டு 

காப்பியக்கவிமலர்கள்
 
1.பெரியபுராணம் 


அப்பூதியடிகள், நாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பினை விளக்குக:


முன்னுரை:


                     சைவத்திருமுறைகளில் இது பன்னிரெண்டாம் திருமுறை ஆகும். இதனை திருத்தொண்டர் புராணம் எனவும் கூறுவர். சேக்கிழாரால் இயற்றப்பட்ட இது பெருக்காப்பிய இலக்கணங்கள் கொண்ட சைவ காப்பியமாகும். சிவனடியார்களின் சரிதம் பற்றி இந்நூல் கூறுகின்றது.

                  இந்த கட்டுரையில்  "அப்பூதியடிகள் நாயனார்" புராணத்தில் ஆப்பூதியார், நவரசரிடம் கொண்டிருந்த அன்பின் ஆழமும், பக்தி பெருக்கும், அடியவர்க்கு ஆற்றும் தொண்டின் சிறப்பையும் காணலாம்.


திருநாவுக்கரசர்:


                        சோழநாட்டின் திருமுனைப்பாடியில் புகழனார், மாதினி  என்போருக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மறுணீக்கியார் ஆகும். சமண நூல்களை கற்று அம்மத தலைவராகவும் இருந்தவர். இவருடைய சகோதிரியார் திலகவதியார் ஆவார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகைகளை பாடியுள்ளார். 

                 அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவர்அப்பர், திருஞானசம்மந்தர், மருணீக்கியர் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறார். 


அப்பூதியடிகள் :


                            இவர் மிகப்பெரிய சிவத்தொண்டர்களுள் ஒருவர். அப்பூதி அடிகள் அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் ஒருவர் ஆவர். இவர் திருநாவுக்கரசரிடம் அளவு கடந்த அன்பும், பற்றும் கொண்டிருந்தார்.

                     தன் மூத்த மகனுக்கு திருநாவுக்கரசு என பெயர் சூட்டி மகிழ்ந்தார். 

VISHARAD POORVARDH--மலர்ச்செண்டு-- 1.திருக்குறள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhthirukkural.html


அறச்செயல்கள்:


                       இவர் நாவுக்கரசரை நேரில் காணாமலே அவருடைய பெயரில்  அறச்செயலகள் பலவற்றை செய்து  வந்தார். தண்ணீர் பந்தல் அமைத்தல், சத்திரம் படைத்தல், மக்களுக்கு அன்னதானம் வழங்குதல், குளங்கள் வெட்டுதல் போன்ற செயல்களை திருநாவுக்கரசரின் பெயரிலே செய்து வந்தார். 


திங்களூரில்  திருநாவுக்கரசர்:


                           ஒருமுறை இறைவனை தரிசிக்க அப்பர் பெருமான் திங்களூர் வந்தார். அங்கு அவர் செல்லும் தண்ணீர் பந்தல், மடம்  போன்றவற்றிற்கு தன்னுடைய பெயர் சூட்டி இருப்பதைக்  கண்டார். அங்கிருந்த ஒருவரிடம் வினவிய போது இதே போல மற்ற எல்லா அறச்சாலைகளுக்கும் அப்பூதியடிகள்  திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டியுள்ளார் என அவர் அறிந்து கொண்டார்.      

                       உடனே திருநாவுக்கரசருக்கு அப்பூதியடிகளை காண வேண்டும் என்ற அவா எழுந்தது. உடனே அவரைக்காண அவருடைய இல்லத்திற்கு விரைந்தார். 


அப்பூதியடிகள் இல்லம்:


                                சிவனடியார் ஒருவர் தன் இல்லத்திற்கு வருவதை கண்டு அவரை மகிழ்ச்சி உடன் வரவேற்றார் அப்பூதியடிகள். தன் மனைவி, மகனுடன் கூடி அவருக்கு  பாத பூஜை செய்து ஆனந்தம் அடைந்தார்.


அப்பூதியர் சினம் கொள்ளுதல்:


                         அப்போது நாவுக்கரச பெருமான் அப்பூதியடிகளிடம்  ஊர் முழுவதும் உம்முடைய கைங்கரியத்தால் அறச்செயலகள் செய்யும் நீர் அவைகளுக்கு உமது பெயரை சூட்டாமல் , நாவுக்கரசரின் பெயரை சூட்டி மகிழ்கிறீரே என வினவினார். உடனே சினம் கொண்ட அப்பூதியடிகள் நெஞ்சு பதைக்க நீர் பெரிய சிவனடியார் போல காட்சி அளிக்கிறீர்.. உமக்கு திருநாவுக்கரசரின் அருமை தெரியாதா?  சமணத்தில் இருந்த மன்னனை தன ஆற்றலால் சைவ நெறிக்கு மாற்றியவர். சமணர்களின் சூழ்ச்சியை முறித்தவர். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாவுக்கரசரை அறியாத   நீங்கள் யார்? என வினவினார்.  அப்போது பெருமான் அவர்கள் நான் திருநாவுக்கரசர் என பணிவுடன் கூறினார்.  அதனை கேட்டதும் அப்பூதி அடிகள் அவருடைய பாதத்தில் விழுந்து வணங்கினார். 


விருந்துண்ண வேண்டல்:

                                       அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை தம் இல்லத்தில் விருந்து உண்ணுமாறு வேண்டினார். உடனே தனது மகன் திருநாவுக்கரசை அழைத்து கொல்லையில் வாழை இலை பறித்து வருமாறு பணித்தார். 


அரவம் தீண்டுதல்:


                                   அடிகளாரின் மகன் வாழை இலையை பறிக்கும் போது அவனை ஒரு பாம்பு தீண்டியது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் தந்தை தனக்கு இட்ட பணியை செய்து  முடிக்கவேண்டும், அடியவருக்கு உணவிடும் பணி தடை படக்கூடாது  என்று எண்ணி விரைந்து சென்று இலையை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு மூச்சை அற்று நிலத்தில் விழுந்தான். அதனால் அப்பூதியும் அவரது மனைவியயும் ஒன்றுமறியாது திகைத்தனர்.  

                     ஆனாலும் நாவுக்கரசருக்கு விருந்தளிப்பதில் குந்தகம் ஏற்படக்கூடாது என எண்ணி உயிரற்ற தனது மகனின் உடலை பாயினில் சுருட்டி வைத்துவிட்டு துயரத்தினை மறைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவளிக்க சென்றனர்.


நவரசரை அமுதுண்ண படைத்தல்:


                  விருந்துண்ண அமர்ந்த நாவுக்கரசப்பெருமான் மூத்த மகன் இல்லாதது கண்டு அவனையும் அழைக்குமாறு கூறினார். அப்பூதி அடிகள் எத்தனையோ முயன்றும் அவரால் உண்மையை மறைக்க முடியவில்லை. நடந்தவற்றை எல்லாம் பெருமானிடம் உரைத்தார்.


பதிகம் பாடி சிறுவனை உயிர்ப்பித்தல்:


                                  இறந்த சிறுவனின் உடலருகே சென்ற அப்பர் சிறுவனின் உடலை திங்களூர் இறைவன் சந்நிதி கொண்டு வருமாறு பணித்தார். அப்பூதி அடிகளும் அவ்வாறே செய்தார். சந்நிதியில் அப்பர் பெருமான் சிவபெருமானைப் பார்த்து " ஒன்று கொல்லாம்" எனும் புதிதாய் மனம் உருக பாடி  திருநீற்றை சிறுவனின் உடலில் பூசினார். உடனே இறந்த கிடந்த அந்த சிறுவன் தூக்கத்தில் இருந்து எழுவது போல உயிர்ப்பெற்று எழுந்தான். 

                      அப்பூதியடிகள் அவரது குடும்பத்துடன் அவரது காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்தான். நாவுக்கரசப் பெருமானின் மகிமையை அறிந்து அங்கிருந்தவர்கள் அவரை போற்றி துதித்தனர்.


முடிவுரை:


               இவ்வாறாக  திருநாவுக்கரசரின் அன்பும், அப்பூதியடிகள் அவர் மீது கொண்டிருந்த பக்தியையும், பற்றையும் அறிந்து கொள்ளலாம்.

                                             

VISHARAD POORVARDH---மலர்ச்செண்டு---சிங்கன் சிங்கி  உரையாடல்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhakutralakuravanjisingansingi.html


VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/vishardpoorvardhthilagavadhiyar.html

                








லேபிள்கள்: